Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

செவர்லே நிறுவனத்தின் என்ஜாய் எம்பிவி கார் மிக மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எம்பிவி சந்தையில் சற்று சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. எம்பிவி பிரிவில் முன்னணி வகிக்கும் மாருதி எர்டிகாவிற்க்கு கடுமையான சவால் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.செவர்லே நிறுவனத்தின் இந்திய பிரிவின் முதல் எம்பிவி காரான என்ஜாய் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ப்பட மொத்தம் 8 வேரியண்டில் வெளிவந்துள்ளது.செவர்லே என்ஜாய் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல் 77.5 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 188 என்எம் ஆகும். செவர்லே என்ஜாய் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 104 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 131 என்எம் ஆகும்.பேஸ் மாடலான எல்எஸ் வேரியண்டில் மட்டும் 8 இருக்கைகள் மற்றவையில் 7 இருக்கைகள் ஆகும். எர்டிகா காரை விட ரூ.40000 குறைவாக இருப்பது நல்ல பலமாக அமையும்.செவர்லே என்ஜாய் விலை பட்டியல் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)என்ஜாய் பெட்ரோல் மாறுபட்டவைகள்எல்எஸ்(8…

Read More

செவர்லே என்ஜாய் எம்பிவி இன்று விற்பனைக்கு வருகின்றது. செவ்ர்லே நிறுவனத்தின் முதல் எம்பிவி காராகும். ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை விலையில் இருக்கலாம்.மாருதி எர்டிகா, இன்னோவா, சைலோ, எவாலியா போன்ற எம்யூவி கார்களுக்கு சவாலாக செவர்லே என்ஜாய் விளங்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வரவுள்ளது.டாப் வேரியண்ட் எல்டிஇசட்டில் ஏபிஎஸ், காற்றுபைகள், பவர் ஸ்டீயரிங் போன்ற வசதிகள் இருக்கும்.7 மற்றும் 8 நபர்கள் என இரண்டு விதமான இருக்கை வசதிகளில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப தேர்ந்தேடுக்கலாம். 7 இருக்கைகள் கொண்ட என்ஜாய் தனிநபர் பயன்பாட்டிற்க்கு ஏற்றதாகவும், 8 இருக்கைகள் கொண்ட என்ஜாய் டாக்ஸி பயன்பாட்டிற்க்கு பொருந்தும்.செவர்லே என்ஜாய் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல் 77.5 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 188 என்எம் ஆகும்.செவர்லே என்ஜாய் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 104 பிஎஸ்…

Read More

ஹூண்டாய் நிறுவனம் 2015 ஆம் ஆண்டுக்குள் 4 புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் 19.4 % சந்தை பங்கினை வைத்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும்.எஸ்யூவி சந்தையின் அபரிதமான வளர்ச்சினை குறிவைத்து காம்பெக்ட் எஸ்யூவி காரை வடிவமைத்து வருகின்றது. மேலும் எம்பிவி கார் ஒன்றை வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாம். எம்பிவி சந்தையில் எர்டிகா முதன்மையாக விளங்கிவருகின்றது. இதனை குறிவைத்து எம்பிவி தயாரிக்க உள்ளது.புதிய செடான் காரினை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாம் இந்த செடான் கார் ஐ20 காரினை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். 2013யில் செடான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் புதிய ஹேட்ச்பேக் ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடைப்பட்ட நிலையில் புதிய ஹேட்ச்பேக்கினை சோதனையிட்டு வருகின்றது. இதற்க்கு ஐ15 என்ற பெயரிடப்படலாம். இந்த கார் வரும் ஆண்டிற்க்குள் விற்பனைக்கு வரும்.

Read More

மாருதி சுசுகி எர்டிகா எம்பிவி வருட கொண்டாடத்தை முன்னட்டு எர்டிகா ஃபெல்லிஸ் என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட பதிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.எர்டிகா ஃபெல்லிஸ் சிறப்பு எடிசன் விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ மாற்பட்டவையில் மட்டும் கிடைக்கும். எஞ்சின் மாற்றங்கள் இல்லை ஆனால் பல மாற்றங்களை உட்ப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் தந்துள்ளது.மாருதி சுசுகி எர்டிகாவில் 1373சிசி கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1248சிசி டிடிஐஎஸ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.மாருதி எர்டிகா ஃபெல்லிஸ் சிறப்பு எடிசன் விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. என்ன மாற்றங்கள் எர்டிகா ஃபெல்லிஸ்யில்1. சில்வர் நிறத்தில் முகப்பு கிரில்2. சில்வர் நிறத்தில் ஃபோக் விளக்குகள்3. சில்வர் நிறத்தில் ஒஆர்விஎம்4. ரியர் ஸ்பாய்லர்5. புதிய தரை விரிப்புகள்6. சிறப்பு பாடி கிராபிக்ஸ்7. ரியர் பார்க்கிங் சென்சார்8. பிஜி வண்ணத்தில் இருக்கை மற்றும் ஸ்டீயரிங் கவர்

Read More

மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முதன்மை வகிக்கின்று. ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மிக சிறப்பான அவசரகால உதவினை ஃபோர்டு தந்துள்ளது.இந்தியாவிலே முதன்முறையாக அவசரகால வசதியை ஃபோர்டு வழங்குகின்றது. விபத்து நடந்துவிட்டால் உடனடியாக அருகில் உள்ள 108 சேவை மையத்திற்க்கு குரல் குறுஞ்செயதியை அனுப்பிவிடும். மேலும் காற்றுபைகள் விரிவடைந்துவிடும் அல்லது எரிபொருள் பம்ப இனைப்பினை தானாகவே துண்டிக்கப்பட்டவுடன் குறுஞ்செய்தி 108 சேவை மையத்திற்க்கு சென்றுவிடும்.இதுன் மூலம் விபத்தின் பொழுது ஆம்பூலன்ஸ் விரைவாக வந்து மீட்டு செல்ல உதவும். பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் உள்ளது ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி.இது எவ்வாறு இயங்கும் என்பதற்க்கு ஃபோர்டு தந்துள்ள விளக்கப்படம்காத்திருங்கள் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அதிகாரப்பூர்வ படங்கள் விரைவில்

Read More

ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் காரில் புதிய மாறுபட்டவை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய பிரியோ விஎக்ஸ் வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கும்.பிரியோ விஎக்ஸ் வேரியண்ட்டில் டிரைவர் சீட் அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் ரியர் வின்ட்சீல்டு டிஃபாகர் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.32,000த்திற்க்கு மேற்பட்ட பிரியோ கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இந்த புதிய வேரியண்ட் வாடிக்கையாளர்களின் விருப்பம் கருதி விற்பனைக்கு வந்துள்ளதால் இன்னும் விற்பனை அதிகரிக்கும்.1.2 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 88பிஎஸ் மற்றும் டார்க் 109என்எம் ஆகும்.ஹோண்டா பிரியோ விஎக்ஸ் விலை விபரம் (தில்லி எக்ஸ்ஷோரூம்)பிரியோ விஎக்ஸ் (மேனுவல்): ரூ.5,34,500பிரியோ விஎக்ஸ் (ஆட்டோமேட்டிக்): ரூ.6,12,500

Read More