Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மஹிந்திரா பொலிரோ மேக்சி டிரக் ப்ளஸ் என்ற பெயரில் பிக்அப் டிரக்கினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பிக்அப் சந்தையில் 54 % பங்குகளை மஹிந்திரா வைத்துள்ளது.பிக்அப் சந்தையில் முதன்மையாக விளங்கும் மஹிந்திரா நகர்புறங்களை மையமாக வைத்து பொலிரோ மேக்சி டிரக் ப்ளஸ் பிக்அப்பை அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்-3 மற்றும் பிஎஸ்-4 என இரண்டு ஸ்டேஜ்யிலும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.பொலிரோ மேக்சி டிரக் ப்ளஸ் டிரக்கில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 63 பிஎச்பி மற்றும் டார்க் 195என்எம் ஆகும்.பவர் ஸ்டீயரிங் ஆப்ஷனாகவும் கிடைக்கும். அதிகபட்சமாக பேலோட் 1150 கிலோ வரை தரலாம்.மஹிந்திரா பொலிரோ மேக்சி டிரக் ப்ளஸ் பிஎஸ்-3 விலை ரூ.4.33 லட்சம் (தானே எக்ஸ்ஷோரூம்)மஹிந்திரா பொலிரோ மேக்சி டிரக் ப்ளஸ் பிஎஸ்-4 விலை ரூ.4.43 லட்சம் (மும்பை எக்ஸ்ஷோரூம்)

Read More

ஃபியட் நிறுவனம் இந்திய சந்தையில் தனியிடத்தை பிடிக்கும் நோக்கில் வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஃபியட் லீனியா டி-ஜெட் வரும் ஜூன் மாதம் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது. ஃபியட் லீனியா டி-ஜெட் முன்பே விற்பனையில் இருந்தது. ஆனால் இதே பிரிவில் டீசல் கார்களின் போட்டி அதிகரித்தால் மேலும் தன்னுடைய வளமான டீலர்கள் இல்லாமல் போனதால் மிக பெரும் சரிவினை சந்தித்தது. எனவே லீனியா டி-ஜெட் செடான் விற்பனையை ஃபியட் நிறுத்தியது.தற்பொழுது டாடாவை நம்பாமல் தனித்து களமிறங்கியுள்ளது. மேலும் பல டீலர்களை திறந்து வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 டீலர்களை நாடு முழுவதும் திறக்க திட்டமிட்டுள்ளது.இந்த பிரிவில் ஃபியட் லீனியா டி-ஜெட் செடான் காரில்தான் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் முதல்முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது. இது நவீன தொழில்நுட்பமாகும். ஃபியட் லீனியா டி-ஜெட் காரில் மிகுந்த சக்தி வாயந்த 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 112.44பிஎச்பி மற்றும் டார்க்…

Read More

இந்தியாவின் முத்திரை போல திகழும் அம்பாசிடர் கார் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அம்பாசிடர் பல புதிய நவீன கார்களின் விற்பனைக்கு மத்தியிலும் அதிகரித்து வருவது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சினை உறுதி செய்துள்ளது.மேலும் பிஎஸ்-4 எஞ்சினில் ஜூன் மாதம் வெளிவரவுள்ளதால் விற்பனை இன்னும் அதிகரிக்கலாம். மேலும் அம்பாசிடர் காரினை அடிப்படையாக கொண்ட அம்பாசிடர் ஹேட்ச்பேக் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஏப்ரல் 2013யில் 407 அம்பாசிடர் கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 2012 யில் 68 கார்களை மட்டுமே விற்பனை செய்தது. மேலும் மிட்ஷ்பிஷியுடன் இனைந்து தயாரிக்கும் தயாரிப்புகளான லேன்சர் கேடியா, அவூட்லேண்டர், பஜீரோ போன்ற கார்கள் கடந்த மாதம் ஏதும் விற்பனை ஆகவில்லை. பஜீரோ ஸ்போர்ட் 113 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

Read More

டிவிஎஸ் நிறுவனத்தின் மாடல்களின் டிவிஎஸ் அப்பாச்சி பைக் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. கடந்த 2006 ஆம் ஆண்டு டிவிஎஸ் அப்பாச்சி 150சிசி பைக்காக விற்பனைக்கு வந்தது.தற்பொழுது மூன்று விதமான மாறுபட்டவையில் அப்பாச்சி பைக் கிடைக்கின்றது. அவை அப்பாச்சி ஆர்டிஆர் 160, அப்பாச்சி ஆர்டிஆர் 180, அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஏபிஎஸ் ஆகும்.20க்கு மேற்பட்ட நாடுகளில் டிவிஎஸ் அப்பாச்சி விற்பனை செய்யப்படுகின்றது. இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற அப்பாச்சி தற்பொழுது 10 இலட்சம்(1 மில்லியன்) பைக்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.இந்த சாதனையை கொண்டாடும் விதமாக சிறப்பு பதிப்பில் அப்பாச்சி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பதிப்பில் வண்ணத்தில் மட்டும் மாற்றம் இருக்கும்.

Read More

இன்டெல் நிறுவனம் ஐடி துறையில் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஒரு முயற்சினை மேற்கொண்டுள்ளது. அதாவது மழைக்காலங்களில் மிக தெளிவாக சாலைகள் தெரிவதில் சிக்கல் ஏற்படுவதனால் விபத்து அதிகரிக்கின்றது. இதனை குறைக்கும் வகையில் இன்டெல் புதிய நுட்பத்தை உருவாக்கி வருகின்றது.முகப்பு விளக்குகளில் கேமரா ஹோஸ்களை இனைக்கப்பட்டிருக்கும். மழை துளி விழும்பொழுது இயல்பாகவே விழும் ஆனால் பாதையை ஓட்டுனர்க்கு காட்டும் பொழுது படத்தில் உள்ளதை போலேவே காட்டும் இதனால் வாகன ஓட்டிக்கு மிக இயலபாக வாகனத்தை இயக்க முடியும். இது ஒரு மாயம் போலத்தான் மழைத்துளி விழும் ஆனால் குறைவாகத்தான் தெரியும்.இதற்க்காக பிரித்யோகமான ஒரு சிப்பினை உருவாக்கி வருகின்றது. இந்த நுட்பமானது தற்பொழுது சோதனையில் உள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்த நுட்பம் உற்பத்தி நிலையை எட்டும் என எதிர்பார்க்கலாம். இந்த தொழில்நுட்பம் வரும்பொழுது மழைக்காலங்களில் ஏற்படும் விபத்தினை பெருமளவு குறைக்க முடியும்.

Read More

செடான் கார் பிரிவில் முதன்மையாக விளங்கும் மாருதி டிசையருக்கு கடுமையான சவாலை ஹோண்டா அமேஸ் கொடுத்துள்ளது. இதனால் டிசையர் காருக்கு மிகப் பெரிய சவால் ஏற்ப்பட்டுள்ளது.அமேஸ் செடான் காரின் மைலேஜ் மிக அதிகப்படியான இடவசதி மற்றும் சிறப்பம்சங்கள் மேலும் டிசையர் காரின் விலையை ஒட்டியோ அமேஸ் விலை ஆகியவை அமேஸ் காரின் வரவேற்ப்புக்கு முக்கிய காரணியாகும்.கடந்த ஏப்ரல் மாதத்தில் 4852 அமேஸ் காரை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 70 % பங்கினை அமேஸ் வகிக்கின்றது. இதன் விற்பனை வேகம் தொடர்ந்தால் டிசையர் சரிவினை சந்திக்குமா ?அறிமுகம் செய்து ஒரு மாதம்கூட நிறைவுபெறுவதற்க்கு முன் 22,000 முன்பதிவுகளை கடந்துள்ளது. இது டிசையரின் வரவேற்ப்பிற்க்கு இனையானதாகும்.5 வருடமாக சந்தையில் உள்ள டிசையர் மிக வழுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. பலதரப்பட்ட இந்திய மக்களின் மிக நன்மதிப்பினை பெற்ற காராகவும் டிசையர் விளங்குவதால் அமேஸ் மிக கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.மாருதி டிசையர்…

Read More