Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

சொகுசு கார் பிரிவில் ஆடி நிறுவனம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளது. ஆனால் பிஎம்டபிள்யூ மூன்றாம் இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது.ஆரம்ப காலகட்டங்களில் சொகுசு கார் விற்பனையில் பென்ஸ்தான் முதன்மையாக விளங்கிவந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் பிஎம்டபிள்யூ முதலிடத்தினை கைப்பற்றியது.நடப்பு வருடத்தில் முதல் 3 மாதங்களில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையை வைத்து ஆடி முதலிடத்தினை கைப்பறியதாக சியாம் வெளியிட்டுள்ளது.ஆடிஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை தலைமையாக கொண்டு செயல்படும் ஆடி நிறுவனம் 2616 கார்களை விற்பனை செய்துள்ளது.மெர்சிடிஸ் பென்ஸ்மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2009 கார்களை விற்பனை செய்துள்ளது. பிஎம்டபிள்யூ பிஎம்டபிள்யூ நிறுவனம் 1465 கார்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் மினி பிராண்டின் கார்களும் அடங்கும். மினி பிராண்டில் 55 கார்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் மூன்று மாத விற்பனையை விட 40.5 % சரிவாகும். இது பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்க்கு மிகப் பெரிய சரிவாகும்.மூன்று மாதங்களை வைத்து மட்டும்…

Read More

மாருதி சுசுகி டிசையர் காரினை மேலும் பிரபலப்படுத்த டிசையர் மைலேஜ் ராலி போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நாடு முழுதும் உள்ள 31 முன்னணி நகரங்களில் நடைபெற்றது.இந்த போட்டியின் நோக்கம் மைலேஜ் யார் அதிகம் தருகிறார்கள் என்பதே ஆகும். மும்பையில் நடைபெற்ற ராலியில் குருதீப் சிங் என்பவர் ஒரு லிட்டர் டீசலுக்கு 45.8 கிமீ என பதிவு செய்துள்ளார். சிரிரான்ங் என்பவர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42.1 கிமீ என பதிவு செய்துள்ளார்.டிசையர் மைலேஜ் ராலியின் சராசரி டீசல் மைலேஜ் லிட்டருக்கு 32.4கிமீ மற்றும் பெட்ரோல் லிட்டருக்கு 30.6கிமீ ஆகும்.5 வருடங்களில் 5 லட்சத்திற்க்கு அதிகமான வாகனங்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகவே செடான் பிரிவில் டிசையர் முதலிடத்தில் உள்ளது.

Read More

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி என்ற பெயரில் அதிக சக்தி வெளிப்படுத்தக்கூடிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் விற்பனைக்கு வந்துள்ளது.போலோ ஜிடி டிஎஸ்ஐ காரில் 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷனுடன் டர்போசார்ஜ்டு பயன்படுத்தப்பட்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 105பிஎஸ் மற்றும் டார்க் 175என்எம் ஆகும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.டைரக்ட் இன்ஜெக்ஷனுடன் டர்போசார்ஜ்டு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் நவீன நுட்பம் ஆகும்.இதன் மைலேஜ் லிட்டருக்கு 17.2 கிமீ ஆகும் (ARAI). 0-100 கிமீ வேகத்தினை 9.7 விநாடியில் தொட்டுவிடும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 190கிமீ ஆகும்.கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 15 இஞ்ச் அலாய் வீல்கள், 2 டின் மியூசிக் சிஸ்டம் ஸ்டீயரிங் வீலில் போன்ற வசதிகள் உள்ளன.போலோ ஜிடி காரில் பல்வேறு விதமான பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது. அவை இஎஸ்பி, ஏபிஎஸ், காற்றுபைகள் மற்றும் ஹில் ஹோல்டு போன்ற வசதிகள் உள்ளன.ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி விலை ரூ.7.99 லட்சம் ( தில்லி…

Read More

போர்ஷோ ஆடம்பர கார்களின் விளம்பர தூதராக மரியா ஷரபோவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற போர்ஷே டென்னிஸ் கிரான்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். அவருக்கு 911 கரேரா எஸ் கேப்ரியோல்ட் காரை பரிசாக வழங்கியது.ரஷ்யாவின் மரியா ஷரபோவை 3 ஆண்டுகளுக்கான விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் போர்ஷோ கார்கள் பிரபலமடையும்.மரியா ஷரபோவா இதுபற்றி கூறுகையில் இது என் வாழ்நாளில் மிக சிறப்பான நாள். உலகின் தலைசிறந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதை மிகப் பெரிய கௌவரவமாக கருதுகிறேன்.26 வயதான மரியா ஷரபோவா டென்னிஸ் உலகில் பல சாதனைகளை புரிந்து வருபவர். 17 வயதில் கிரான்ட் ஸ்லாம் போட்டியில் வென்று குறைந்த வயதில் பட்டம் பெற்ற மூன்றாவது வீராங்கனை ஆவார். 28 தனிநபர் பட்டங்களை வென்றுள்ளார்.

Read More

ஆடி நிறுவனத்தின் ஆர் 8 வி10 காரின் வடிவில் பென்டிரைவினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது இதன் விலை ரூ 3299 ஆகும். இந்தியா முழுதும் உள்ள ஆடி டீலர்களிடம் கிடைக்கும்.ஆடி ஆர்8 வி10 காரின் பென்டிரைவ் 1:72 என்ற விகிதத்தில் உருவாக்கியுள்ளனர். இதன் இடவசதி 4 ஜிபி ஆகும். யூஸ்பிவுடன் இனணத்தால் முகப்பு விளக்குகள் ஒளிரும்.ஆடி ஆர்8 பென்டிரைவ் விலை ரூ 3299 ஆகும். உங்கள் அருகில் உள்ள ஆடி டீலர்களிடம் கிடைக்கும்.

Read More

போலரிஸ் ஆஃப்ரோடு வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. ஆஃப்ரோடு வாகனங்களுக்கான டிராக்களை நாடு முழுவதும் திறந்து வருகின்றது. சில நாட்களுக்கு முன் பெங்களூரில் ஆஃப்ரோடு வாகனங்களுக்கான இரண்டு டிராக்கினை திறந்துள்ளது.முன்பே போலாரிஸ் டிராக் உள்ள நகரங்கள் சென்னை, மும்பை, கோவை, மூணார், புனே, நாக்பூர், கிரெட்டர் நொய்டா, போபால் மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் உள்ளது.தற்பொழுது பெங்களூரில் இரண்டு டிராக்களை திறந்துள்ளனர். அவை சர்ஜாபுர் மற்றும் யஸ்வந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சர்ஜாபுரத்தில் கிடைக்கும் வாகனங்கள் அவுட்லா 50சிசி முதல் ஆர்இசட்ஆர்800சிசி வரை என 12 விதமான வாகனங்களை ஓட்டி பார்க்கலாம். சர்ஜாபுர் டிராக் 30,000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. யஸ்வந்தபுர் டிராக் 20,000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. இந்த டிராக்கில் 5 விதமான வாகனங்களை ஓட்டி பார்க்கலாம்.இந்த ஆஃப் ரோடு டிராக்கள் சரிவுகள், பள்ளங்கள் சகதிகள், பாறைகள் போன்றவை இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிராக்களில் முழுமையான ஆஃப்ரோடு அனுபத்தினை பெற முடியும். இந்த வருடத்திற்க்குள் நாடு முழுவதும் 25 டிராக்களை…

Read More