Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

எந்த கலர் கார் வாங்கலாம் என்பதில் பலருக்கு சந்தேகம் எழும் சிலர் தங்கள் ராசிக்கு உண்டான கலர்களை தேர்வு செய்வர், சிலர் தங்கள் விருப்பமான வண்ணத்தினை தேர்வு செய்வர்.உலகளவில் கார் வாங்கும் பலருக்கும் வண்ணத்தினை தேர்வு செய்வத் சற்று கடினமாகத்தான் இருக்கும். கார்கள் பல்வேறு விதமான வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டின் கணக்குப்படி எந்த வண்ணங்களில் கார்கள் அதிகம் இருக்கின்றது என்று பார்த்தால்..வெள்ளை நிறத்தில் 22 %சில்வர் கலர் 20 %கருப்பு நிறத்தில் 19 %கிரே நிறத்தில் 12 % சிகப்பு நிறத்தில் 9 %இயற்கை நிறத்தில் 8 %நீள நிறத்தில் 7 %பச்சை கலரில் 2 %மற்ற வண்ணங்களில் 1 % என உலகளவில் கார்களின் கலர்கள் இருப்பதாக அமெரிக்காவின் பிபிஜி இன்டஷ்ட்ரீஸ் நடத்தி ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும் கார் வண்ணங்களில் வெளிப்புறத்தின் கலருக்கு 77 சதவீதம் பேர் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றார்களாம். இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள மற்றொன்று குறைந்த விலை கார்கள்…

Read More

நிசான் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கு பின் டட்சன் பிராண்டில் மீண்டும் குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. குறைந்த விலை காராக டட்சன் கார்கள் இருந்தாலும் மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் தரம்முடன் விளங்கும்.சர்வதேச அளவில் டட்சன் கார்கள் வருகிற ஜூலை 15ம் தேதி தில்லியில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகப்படுத்த உள்ளனர். முதற்கட்டமாக 2014 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் அதனை தொடர்ந்து இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தென்ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும்.டட்சன் பட்ஜெட் கார்கள் ரூ 3.5 முதல் 4 லட்சத்திற்க்குள் இருக்கும். டட்சன் கார்கள் 5 கதவுகளை கொண்ட ஹேட்ச்பேக் காராக இருக்கும். ரெனோ-நிசான் நிறுவனத்தின் சிஇஒ கார்லோஸ் கோஸ் டட்சன் பிராண்ட் காரினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்தியாவில் ஆண்டிற்க்கு 1.5 லட்சம் கார்களை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டிற்க்குள் 10 டட்சன் மாடல் கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Read More

டிஎஸ்கே-ஹயோசங் நிறுவனம் இந்தியாவில் பிரிமியம் பைக்களை விற்பனை செய்து வருகின்றது. அதிகம் விற்பனையாகும் பைக்கள் 125 முதல் 150 சிசி பைக்களாக இருப்பதனால் இந்த சந்தையினை குறிவைத்து பைக்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.டிஎஸ்கே மோட்டோவில் ஹயோசங் அசெம்பிளிங் ஆலை புனேவில் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் 250சிசி முதல் 650 சிசி பைக்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றது.டிஎஸ்கே ஹயோசங் என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ள 125சிசி-150சிசி பைக்கள் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றமதி செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்க்கான ஆலையை மஹாராஷ்ட்ராவில் அமைக்க 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளனர்.ரூ 300 முதல் 350 கோடிவரை முதலீடு செய்ய உள்ளதாகவும் இந்த ஆலை மிக நவீனமயமாகவும் ஆட்டோமேட்டிக் நிறுவனமாகவும் இருக்கும் என டிஎஸ்கே-ஹயோசங் நிர்வாக இயக்குனர் சிரிஷ் குல்கர்னி தெரிவித்துள்ளார்.தற்பொழுது நாடு முழுவதும் 25 டீலர்களை டிஎஸ்கே-ஹயோசங் கொண்டுள்ளது. 2013க்குள் மேலும் 10 ஷோரூம்களை திறக்க உத்தேசித்துள்ளது.தற்பொழுது இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹயோசங் மாடல்கள்ஹயோசங் ஜிடி 250ஆர் ரூ 2.80…

Read More

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மேம்படுத்தப்பட்ட கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் 4 விதமான வேரியண்ட அறிமுகம் செய்துள்ளது.சொகுசு செடான் காரான 7 சீரீஸ் 3 விதமான டீசல் மற்றும் 1 வேரியண்ட பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கும். இதன் டீசல் மாறுபட்டவைகள் சென்னை ஆலையிலே தயாரிக்க உள்ளனர். பெட்ரோல் வேரியண்ட் முழுமையான கட்டமைப்புடன் இறக்குமதி செய்யப்படும்.3.0 லிட்டர் டிவின் டர்போ காமன்ரெயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 258 பிஎச்பி ஆகும். இதன் டார்க் 520 முதல் 560 என்எம் வரை ஆகும். எஸ்-ட்ரானிக் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.0-100 கிமீ வேகத்தினை 6.2 விநாடிகளில் எட்டிவிடும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.மேம்படுத்தப்பட்ட 7 சீரிஸ் காரில் உள்ள வசதிகள் ஃபோக் விளக்குகள், முழுமையான எல்இடி முகப்பு விளக்குகள், இருக்கை வசதிகள் மேம்படுத்தியுள்ளனர். மேலும் பல விதமான…

Read More

இந்தியாவிலே உருவாகும் முதல் சூப்பர் காரான டிசி டிசைன் நிறுவனத்தின் டிசி அவந்தி கார் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.டிசி டிசைன் நிறுவனம் குஜாராத் மாநிலத்தில் ரூ 60 கோடி முதலீட்டில் ஆலையை கட்டமைக்க உள்ளனர். இந்த ஆலை இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ உற்பத்தியை தொடங்கும். இந்த ஆலையில் ஆண்டுக்கு சுமார் 3000 கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.டிசி டிசைன் நிறுவனம் தயாரிக்கும் கார்களின் மாடல்கள் அனைத்துமே 4000 கார்கள் மட்டுமே தயாரிக்கும். மேலும் டிசி சூப்பர் கார்கள் அனைத்துமே 25 முதல் 30 லட்சத்திற்க்குள் இருக்கும். எனவே குறைவான விலையிலே சூப்பர் கார்கள் கிடைக்கும்.டிசி அவந்தி சூப்பர் கார் மணிக்கு அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தில் செல்லும். இதன் எஞ்சின் ஃபோர்டு 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பொருத்தப்பட்டிருக்கும்.அடுத்த ஆண்டு டில்லியில் நடக்கவுள்ள 2014 ஆட்டோ ஷோவில் டிசி எஸ்யூவி காரினை…

Read More

ஹோண்டா அமேஸ் அறிமுகத்திற்க்கு பின் பல நிறுவனங்கள் சற்று பீதியிலே உள்ளன. மாருதி டிசையர் ரீகல் காரினை அறிமுகம் செய்தது. தற்பொழுது டாடா மான்ஸா கார் தான் சிறந்தது என ஒப்பீடு விளம்பரத்தினை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது.இந்த ஒப்பீட்டில் பல வசதிகளை குறிப்பிட்டுள்ளது. அவற்றை அமேஸ் காருடன் ஒப்பீடு செய்து அமேஸ் காரை விட மான்ஸா சிறந்த கார் என விளம்பர படுத்தியுள்ளது. விலை, இடவசதி, மற்றும் சிறப்புகளை தொகுத்து ஒப்பீடு செய்துள்ளது. ஒப்பீடு படத்தை கீழே கானுங்கள்.ஹோண்டா அமேஸ் காரின் முழுமையான விவரங்களை வாசிக்க கீழே சொடுக்கவும்..Honda Amaze in Tamil

Read More