ஃபோர்டு எஸ்கார்ட் செடான் கான்செப்ட் காரினை சாங்காய் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைத்துள்ளது. சீனா சந்தையில் மட்டும் எஸ்கார்ட் சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஃபோர்டு எஸ்கார்ட் செடான் கார் விரைவில் சீனாவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாம்.
Author: MR.Durai
மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் காரின் பிரிமியம் வெர்சனான வேகன்ஆர் ஸ்டிங்ரே காரினை இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்பொழுது ஏற்பட்டுள்ள சந்தையின் சரிவினால் கார் விற்பனை படுமந்தமாக உள்ள நிலையிலும் மாருதி வேகன்ஆர் ஸ்டிங்ரே காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஜப்பான் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாகவே விற்பனையில் உள்ளது.வேகன்ஆர் ஸ்டிங்ரே முகப்பில் சில மாற்றங்களே இருக்கும். டேஸ்போர்டிலே கியர் மாற்றும் லிவர் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் இடவசதி அதிகம் கிடைக்கும். ஜப்பானில் 660சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்டிங்கிரே விற்பனையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் 1.1 லிட்டர் கே சீரியஸ் பெட்ரோல் என்ஜினில் விற்பனைக்கு வரும். மேலும் ஜப்பானில் ஆட்டோமேட்டிக் கியர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் மேனுவல் கியராக வெளிவரும்.
ரெனோ டஸ்ட்டர் விற்பனையில் மிக சிறப்பான இடத்தினை பெற்றுள்ளது. மிக பிரபலமான டிசைனிங் நிறுவனமான டிசி ரெனோ டஸ்ட்டர் காரை கஸ்டமைஸ் செய்துள்ளது. உருமாற்றம் செய்யப்பட்ட டஸ்ட்டர் படங்களை வெளியிட்டுள்ளனர்.ரெனோ டஸ்ட்டர் காரின் உட்ப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல மாறுதல்களை தந்து அசத்தியுள்ளது. இந்த கஸ்டமைஸ்க்கான செலவு ரூ 3.49 லட்சம் ஆகும்.அசரவைக்கும் முகப்புஎல்இடி விளக்குகள் மற்றும் புரோஜெக்டர் முகப்பு விளக்குகள், புதிய கிரில் பயன்படுத்தியுள்ளது. மேலும் டிசி என்ற முத்திரையினை பதித்துள்ளது. 10 ஸ்போக் ஆலாய் வில் பயன்படுத்தியுள்ளனர். டஸ்ட்டர் காரின் உட்ப்புறத்தினை முழுவதும் மரத்தால் இழைக்கப்பட்டுள்ளது. உட்ப்பக்க மேற்கூரை, டேஸ்போர்டு போன்றவை மரத்தால் இழைத்துள்ளனர்.இருக்கைகள் மிக சொகுசாக மாற்றப்பட்டுள்ளது. பல வசதிகள் இருக்கைகளில் தரப்பட்டுள்ளது. இருக்கைகளை இலகுவாக மடக்க முடியும். இருக்கைகளை நமக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு டிரே தொலைக்காட்சி திரை வசதி பொருத்தப்பட்டுள்ளது.மிக நேர்த்தியான முகப்பு அசத்தலான உட்ப்புறம் என…
செவர்லே என்ஜாய் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் செவர்லே என்ஜாய் எம்பிவி கார்களின் அதிகார்வப்பூர்வ படங்களை தன்னுடைய இணையத்தில் வெளியிட்டுள்ளது.செவர்லே என்ஜாய் எம்பிவி கார் டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கும். செவர்லே என்ஜாய் பெட்ரோல் கார்செவர்லே என்ஜாய் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 104 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 131 என்எம் ஆகும்.செவர்லே என்ஜாய் டீசல் கார்செவர்லே என்ஜாய் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல் 77.5 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 188 என்எம் ஆகும்.மாருதி எர்டிகா, எவாலியா போன்ற கார்களுக்கு மிக பெரிய சவாலினை கொடுக்கும். இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.
ஹோண்டா மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் பைக்கின் விலையை உயர்த்தியுள்ளனர். மிக குறைவாகவே விலை உயர்வினை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் டீசல் உயர்வினால் டிரக்களின் வாடகை அதிகரித்துள்ளது.லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் அதிகரித்து வருகின்ற காரணத்தாலே விலை உயர்த்தப்பட்டுள்ளது.ஹோண்டா நிறுவனம் ரூ 200 முதல் 800 வரை தன்னுடைய மோட்டார் சைக்கிள்களின் விலையை உயர்த்தியுள்ளது.பஜாஜ் நிறுவனம் ரூ 300 முதல் 500 வரை மோட்டார் சைக்கிள்களின் விலையை உயர்த்தியுள்ளது.மிக குறைவான விலை உயர்வையே ஹோண்டா மற்றும் பஜாஜ் அறிவித்துள்ளது.
ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் காரினை ஸ்கோடா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்கோடா ரேபிட் பிரீஸ்டீஜ் என்ற பெயரில் கூடுதலான சில வசதிகளுடன் ரூ 8.99 லட்சத்திற்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.ஸ்கோடா ரேபிட் பிரீஸ்டீஜ் டீசல் காரில் மட்டும் கிடைக்கும். ரேபிட் பிரீஸ்டீஜ் செடான் காரில் சேர்க்கப்பட்டுள்ள வசதிகள் பார்க்கிங் சென்சார், நேவிகேஷன் அமைப்பு , வின்ட் சென்சார், மற்றும் தரை விரிப்பு போன்றவை இருக்கும்.1.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 105 பிஎச்பி ஆகும். ரேபிட் பிரீஸ்டீஜ் விற்பனை சரிவினை ஈடுகட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா ரேபிட் பிரீஸ்டீஜ் கார் விலை ரூ 8.99 லட்சம் ஆகும். (தில்லி எக்ஸ்ஷோரூம் விலை)