Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இணைய உலகின் இதயம் கூகுள் இன்று வெளியிட்டுள்ள டூடுல் இந்தியாவின் முதல் பயணிகள் தொடர்வண்டி இயக்கப்பட்டதனை நினைவு கூறும் வகையில் இருக்கின்றது.மிக முக்கியமான நாட்களை கூகுள் டூடுல்கள் மூலம் நினைவு கூறிவருவதனை அறிவோம். இன்று இந்தியன் தொடர்வண்டி நிறுவனம் 160 ஆண்டுகளை கடக்கின்றது. அதனை கூகுள் டூடுல் மூலம் நினைவுபடுத்துகின்றது.முதல் பயணம் 16 ஏப்ரல் 1853 ஆம் ஆண்டு 400 முக்கிய நபர்களுடன் 3 லோக்கோமொட்டிவ் எஞ்சின்களுடன் (சுல்தான்,சிந்த,சாகிப் எஞ்சின் ) 34 கிமீ பயணத்தினை தொடங்கியது. 14 பெட்டிகளுடன் 57 நிமிடங்களில் மும்பை போரி பந்தரலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ள தானேக்கு வந்தடைந்தது.இன்று இந்தியன் ரயில்வே நிறுவனம் உலகின் மிக பெரிய தொடர்வண்டி நிறுவனமாகும். மிக அதிகமான தொழிலாளர்களை கொண்டிருப்பதும் இந்தியன் ரயில்வே ஆகும்.அன்று தொடங்கி சிறிய பயணம் இன்று இந்தியாவே பயணிக்கும் பொது போக்குவரத்தின் மாபெரும் சக்தியாக விளங்குகின்றது.இந்தியாவிற்க்கு தொடர்வண்டினை கொண்டு வந்த ஆங்கிலேயரையும் நினைவு கூறலாமே…

Read More

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார் என்ற பெயரில் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு வரவுள்ளது. போலோ ஜிடி காரில் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.1.2 லிட்டர் டிஎஸ்ஐ(TSI) பெட்ரோல் இன்ஜின் 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாயந்த இன்ஜினாக இருக்கும். டிஎஸ்ஜி(DSG) 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் இந்தியாவின் முதல் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினாக விளங்கும். போலோ ஜிடி காரில் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் வெளிவராது. பாடி அமைப்பு மற்றவை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போலோ எஸ்ஆர் போலவே இருக்கும்.போலோ ஜிடி விபரங்கள் மற்றும் விலை விபரங்கள் இன்னும் தெரியவரவில்லை. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார் இந்த மாதம் இறுதிக்குள் விற்பனைக்கு வரலாம். தற்பொழுது சோதனையில் உள்ளது.ஃபோக்ஸ்வேகன் போலோ எஸ்ஆர் பற்றி படிக்க

Read More

மாருதி ஸ்விப்ட் டிசையர் காரின் லிமிடேட் எடிசன் காரினை மாருதி டிசையர் ரீகல் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதனை ஹோண்டா அமேஸ் காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.மாருதி டிசையர் ரீகல் காரில் உட்ப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில மாறுதல்கள் மற்றும் வசதிகளை செய்துள்ளது. இன்ஜினில் எவ்வித மாற்றமும் இல்லை.விஎக்ஸ்ஐ பெட்ரோல் வேரியண்ட்டினை டிசையர் ரீகலாக மாற்றியுள்ளது. மேம்படுத்தப்பட்ட உட்ப்புறம், குரோம் பூச்சூ செய்யப்பட்ட முன்புற கீரில் ரியர் பார்க்கிங் சென்சார், எலக்ட்ரிக் ரியர் வியூ மிரர், பாடி கலர் மட் பிளாப், கார் பெர்ஃப்யூம், நவீன ஆடியோ அமைப்பு, லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், தரை விரிப்பு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.மாருதி டிசையர் ரீகல் நீள வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.மாருதி டிசையர் ரீகல் விலை ரூ 5.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம் தில்லி)ஹோண்டா அமேஸ் பற்றி வாசிக்க

Read More

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்தியாவின் முதன்னையான மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும். ஹீரோ பைக்களுக்கு ஐந்து வருட வாரண்டி அல்லது 70000 கிமீ வாரண்டி வழங்கியுள்ளது.இந்தியாவிலே முதன் முறையாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்தான் 5 ஆண்டு வாரண்டி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். மற்ற நிறுவனங்கள் 2 வருட வாரண்டி அல்லது 40,000 கிமீ வாரண்டி வழங்குகின்றன.ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கில் ஸ்பிளென்டர் புரோ கோல்டு எடிசனை அறிமுகம் செய்துள்ளது, தங்க எடிசனில் ஸ்பிளென்டர் பைக் தங்க நிறத்தில் இருக்கும்.

Read More

மஹிந்திரா நிறுவனத்தின் வெரிட்டோ காரினை அடிப்படையாக கொண்ட வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.வெரிட்டோ வைப் காரின் சோதனை படங்களை ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ளது. 4 மீட்டருக்கு குறைவான காராக வைப் விளங்கும். முன்புறத்தில் வெரிட்டோ அல்லது ரெனோ லகான் காரினை அப்படியோ கொண்டிருக்கும். இதன் பின்புறத்தில் இடவசதியானது மிக அதிகப்படியாக இருக்கும்.வெரிட்டோ வைப் காரில் ரெனோவின் கே9கே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் காரில் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் வெளிவருவதற்க்கான வாய்ப்புகள் மிக குறைவு. மே மாதம் வெளிவரலாம்.வெரிட்டோ வைப் எதிர்பார்க்கப்படும் விலை ரூ 5.50 லட்சத்திற்க்கு மேல் இருக்கலாம்.thanks to autocar india

Read More

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ரேபிட் கார் வாங்குபவர்களுக்கு 100 சதவீத கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முன்பணம் இல்லாமல் ரேபிட் காரினை பெற்று செல்ல முடியும்.இந்த கடன் திட்டத்தில் ரேபிட் கார் எக்ஸ்ஷோரூம் விலையில் 100 % கடனாக காரினை பெற்று கொள்ள முடியும். மேலும் இந்த திட்டத்திற்க்கான வட்டி விகிதம் மிக குறைவாகவே இருக்கும். இந்த திட்டம் வருகிற ஏப்ரல் 18 வரை மட்டுமே ஆகும்.கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரேபிட் காருக்கான திட்டத்தில் ஏப்ரல் மாதம் வரை இஎம்ஐ கட்டவேண்டியது இல்லை என அறிவித்துள்ளது.இந்த புதிய திட்டத்தின் மூலம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Read More