Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 மாடலில் புதிதாக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. புல்லட் 500 யில் சென்சார் பொருத்தப்பட்ட கார்புரேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பு பயன்படுத்தப்பட்ட அதே எஞ்சின்தான் பொருத்தப்பட்டுள்ளது.500 புல்லட்டில் கூடுதலாக சிலவற்றை மாறுதல் செய்துள்ளது. புதிய முகப்பு விளக்குகள் இதனை புலி கண் விளக்குகள் என அழைக்கின்றது. டேங்கின் வின்ஜடு பேட்ஜ் ரீடிசைன் செய்துள்ளனர். எலெக்ட்ரிக் ஸ்டார்ட்,மிகவும் சிறப்பான கிளாசிக் லுக்கினை தரும் வகையில் உருவாக்கியுள்ளனர்.முன்புறம் 19 இன்ச் வீல், பின்புறம் 18 இன்ச் வீல் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பைக்கானது பச்சை வண்ணத்தில் (ஃபாரஸ்ட் கீரின்) மட்டும் கிடைக்கும். முன்புறத்தில் 280 மீமி டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 153 மீமி பயன்படுத்தப்பட்டுள்ளது.யூசிஇ (கார்புரேட்டர்) எஞ்சின்499 சிசி சிங்கிள் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 26.1 பிஎச்பி வெளிப்படுத்தும். இதன் டார்க் 40.9 என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.முன்புள்ள கிளாசிக் 500 ஃப்யூல் இன்ஜெக்‌ஷன்…

Read More

டாடா நிறுவனம் பயணிகள் கார் சந்தையில் மிக சிறப்பான இடத்தில் இருந்து வருகின்றது. சில மாதங்களாகவே டாடா காரின் விற்பனை படு மந்தமாக உள்ளது. விற்பனையை அதிகரிக்க பல்வேறு விதமான சலுகைகளை டாடா மோட்டார்ஸ் வழங்கிவருகின்றது.டாடா எஸ்யூவி கார்களான சுமோ, சஃபாரி மற்றும் ஆரியா கார்களுக்கு டாடாவின் கீழ் செயல்படும் ஜாகுவர் லேண்ட்ரோவர் எஞ்சின்களை பயன்படுத்த திட்டமிட்டுள்தாம்.டாடா மோட்டார்ஸ் சிறிய ரக கார்கள் தயாரிப்பில் மிகுந்த அனுபவம் வாய்ந்த நிறுவனமாக விளங்குகின்றது.எனவே டாடாவுடன் இனைந்து புதிய கார்களை உருவாக்குவதற்க்கான திட்டங்கள் இல்லை. ஆனால் நுட்பங்கள் மற்றும் எஞ்சின்களை பகிர்ந்து கொள்ள மட்டும் முடிவு செய்துள்ளதாக ஜாகுவர் லேண்ட்ரோவர் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியுள்ளது தற்பொழுது தயாரிப்பில் உள்ள சிறிய ரக எஞ்சின்கள் மற்றும் வரும்காலத்தில் தயாரிக்கப்பட உள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை டாடாவுக்கு தருவோம் என கூறியுள்ளார்.இதனால் டாடா மோட்டார்ஸ் விற்பனை புதுவேகம் எடுக்கும் என…

Read More

கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் மிக சிறப்பான வளர்ச்சினை எட்டி வருகின்றது. இந்தியாவின் மிக விரைவாக விற்பனையாகும் பிரிமியம் பைக் என்றால் கேடிஎம் டியூக் 200 பைக் ஆகும்.சமீபத்தில் தில்லியில் நடந்த ஆரஞ்சு தினத்தில் கேடிஎம் 1190 ஆர்சி8 ஆர் பைக்கினை பார்வைக்கு வைத்திருந்தது. தில்லியில் முதல் முறையாக கேடிஎம் ஆரஞ்சு தினத்தை கொண்டாடியது. இந்த தினத்தில் கேடிஎம் பைக் உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலகள் என பலர் பங்கேற்றனர்.கேடிஎம் 1190 ஆர்சி8 ஆர் பைக் தற்பொழுது நாடு முழுவதும் உள்ள முன்னணி கேடிஎம் ஷோரூம்களில் பார்வைக்கு வைத்துள்ளனர். 1190 சிசி டிவின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 175.3 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எஞ்சினாகும். இதன் டார்க் 123என்எம் ஆகும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.184 கிலோ எடை கொண்ட கேடிஎம் 1190 ஆர்சி8 ஆர் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பைக்காக விளங்கும். இந்தியாவில் எப்பொழுது அறிமுகம் என்பதில் உறுதியான தகவல் இல்லை.கேடிஎம்…

Read More

இந்தியாவின் மோட்டார் சைக்கிள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான விற்பனையை எட்டி வருகின்றது.தற்பொழுது இரண்டாம் இடத்தில் உள்ள பஜாஜ் நிறுவனத்தினை பின்னுக்கு தள்ளி ஹோண்டா இரண்டாம் இடத்திற்க்கு முன்னேறியுள்ளது. 2012-2013 ஆம் நிதி ஆண்டில் ஹோண்டா 26,06,841 வாகனங்களை விற்றுள்ளது. இவற்றில் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் அடங்கும்.இதே நிதி ஆண்டில் பஜாஜ் 24,63,863 பைக்களை விற்றுள்ளது. பஜாஜ் பைக் மட்டும் விற்பனை செய்கின்றது. ஸ்கூட்டர்கள் பஜாஜ் விற்பனை செய்வதில்லை.தொடர்ந்து முதலிடத்தினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தக்க வைத்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் 59,12,538 வாகனங்களை விற்று முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது.

Read More

ஹோண்டா நிறுவனத்தின் மிக பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான ஹோண்டா அமேஸ் இன்று அறிமுகம் செய்யப்படுகின்றது. ரூ 4.99 இலட்சத்தில் இருந்து 7.60 இலட்சம் வரை விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.ஹோண்டா அமேஸ் செடான் இந்தியாவின் குடும்ப காராக வலம்வரும் என ஹோண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஹோண்டா அமேஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் சேர்த்து 10 விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இவற்றில் 4 டீசல் வேரியண்ட் மற்றும் 6 பெட்ரோல் வேரியண்ட் கிடைக்கும்.ஹோண்டா அமேஸ் டீசல் எஞ்சின்ஹோண்டா அமேஸ் டீசல் எஞ்சின் 1.5 லிட்டர் i-DTEC எர்த்டீரிம்ஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். டீசல் எஞ்சின் 98.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 200 என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.ஹோண்டா அமேஸ் பெட்ரோல் எஞ்சின்ஹோண்டா அமேஸ் பெட்ரோல் எஞ்சின் 1.2 லிட்டர் i-VTEC எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் ஹோண்டா பிரியோ காரில் பயன்படுத்தப்பட்டது. பெட்ரோல் எஞ்சின் 88…

Read More

அசோக் லேலண்ட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி கனரக வாகன தயாரிப்பாளாராக விளங்கி வருகின்றது. இலகுரக வாகன தயாரிப்பிலும் நிசான் நிறுவனத்துடன் இனைந்து தோஸ்த் வாகனத்தினை விற்பனை செய்து வருகின்றது.நிசான் எவாலியா காரினை சில மாற்றங்களுடன் லேலண்ட் ஸ்டைல் எம்பிவியாக இந்த வருடத்தின் இறுதிக்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எவாலியா தனிநபர் பயன்பாட்டிற்க்கும் விற்பனையில் உள்ளது. ஆனால் ஸ்டைல் தனிநபர் பயன்பாட்டிற்க்காக விற்க்கப்படாது. அதாவது டாக்ஸி, கொரியர் சேவைகள் இன்னும் பிற வர்த்தக தேவைகளுக்கு பயன்படும் வகையில் விற்பனை செய்யப்படும்.இதனால் ஸ்டைல் வாகனத்தில் பல சொகுசு வசதிகள் இடம்பெறாது. அதற்க்கு மாற்றாக சிறப்பான இடவசதியுடன் விளங்கும். இதனால் வர்த்தக பயன்பாட்டிற்க்காக ஸ்டைல் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அசோக் லேலண்ட் தோஸ்த் இலகுரக டிரக்கினை பயணிகள் பயன்பாட்டிற்க்கு பயன்படும் வாகனமாகவும் களமிறக்கக உள்ளதாம். 13 நபர்கள் பயணிக்கும்படி தோஸ்த் விற்பனைக்கு வரலாம்.நிசான்-அசோக் லேலண்ட் கூட்டணியில் சுமார் ரூ 2300 கோடி முதலீட்டில் இலகுரக…

Read More