பஜாஜ் ஆர்இ60 விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். ஆட்டோரிக்ஷாவுக்கும் காருக்கும் இடைப்பட்ட நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் என அழைக்கப்படுகின்றது.பஜாஜ் ஆர்இ60 யூரோ iv விதிகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்பன்டைஆக்ஸைடு குறைவாக வெளியிடும். ஆர்இ60 குவாட்ரிசைக்கிளில் 216 சிசி DTSi பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 20 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.1 லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் கிடைக்கும். உச்சகட்ட வேகம் மணிக்கு 70 கிமீ ஆகும். 450 கிலோ எடையுடன் இருக்கும்.இந்தியாவில் குவாட்ரிசைக்கிள் புதுவகையான வாகனம் என்பதால் இதனை எந்த பிரிவில் அனுமதி வழங்குவது என மத்திய அரசு ஆலோசித்து வருகின்றதாம். இதனால் வெளிவருவதனில் சற்று தாமதம் ஆகின்றதாம். இந்த வருடத்தின் மத்தியில் அல்லது இறுதிக்குள் வெளிவரலாம் என ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
Author: MR.Durai
வோடோஃபோன் நிறுவனம் மஹிந்திரா e2o காரின் மொபைல் தொடர்பான சேவைகளுக்கு இனைந்துள்ளது. வோடோஃபோன் பிஸ்னஸ் சர்விஸ் மற்றும் மஹிந்திரா ரேவா இனைந்து ஸ்மார்ட்போன்களுக்கான மஹிந்திரா e2o கார் தொடர்பான சேவைகளை வழங்கும்.இந்த சேவையானது மஹிந்திரா e2o காரின் பேட்டரி கையிருப்பு, ஏசி போன்றவற்றை கன்ட்ரோல் செய்யவும், மேலும் எங்கிருந்து வேண்டுமானாலும் கார் கதவுகளை லாக் மற்றும் அன்லாக் செய்ய முடியும் உங்கள் மொபைல் மூலம். மேலும் அருகில் உள்ள சார்ஜ் ஸ்டேசன் மற்றும் அவசரகாலத்தில் மொபைலை இனைப்பாக பயன்படுத்தி 8 முதல் 10 கிமீ வரை பயணிக்க உதவும் தொழில்நுடபம் ரேவாஇவ். என பலதரபட்ட சேவைகளை மொபைல் மூலம் வழங்கும்.இந்த நுட்பத்திற்க்கான பெயர் மெஷின் டூ மெஷின் ஆகும். ஆண்டிற்க்கு 6000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு வெளிநாடுகளுக்கும் ரேவா e2o காரினை எற்றுமதி செய்யவும் உள்ளது.மஹிந்திரா e2o பற்றி படிக்க
கவாஸ்கி நின்ஜா 300 பைக் ரூ 3.5 இலட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்பொழுது விற்பனையில் இருந்து வரும் 250 சிசி பைக்கிற்க்கு மாற்றாக புதிய கவாஸ்கி நின்ஜா 300 பைக் வெளிவந்துள்ளது.296 சிசி திரவ மூலம் குளிர்விக்கப்படும் இரண்டு சிலிண்டர் கொண்ட பேரலல் டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 வால்வ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 39 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 27 என்எம் ஆகும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.7 விநாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தினை தொடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 175 கிமீ ஆகும்.மிக நேர்த்தியான முறையில் நின்ஜா 300 வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 ஸ்போக் ஆலாய் வீல் பயன்படுத்தியுள்ளனர். ரைடரை எஞ்சின் வெப்பம் தாக்காதுவாறு நின்ஜா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ்வுடன் 174 கிலோ எடை கொண்டது. 37 மிமி டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன்புறத்தில் பயன்படுத்தியுள்ளனர். பின்புறத்தில் 5 ஸ்பீடு யூனி-டிராக் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.சைன்களில் மண் மற்றும் சகதிகள்…
யமாஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனியான முத்திரை பதிப்பதற்க்காக மிக சிறப்பான திட்டத்தினை வகுத்து செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 100-110 சிசி பைக் மார்கெட்டினை குறிவைத்து புதிய மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாம்.இந்த பைக்கானது 100 முதல் 110 சிசி திறன் கொண்ட பைக்காக இருக்கும். மேலும் விலை ஆனது ரூ 40,000 த்திற்க்குள் இருக்குமாறு கவனத்தில் கொண்டு உள்ளதாம். மேலும் குறைந்த விலை ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளதாம். இவை 2015 அல்லது 2016 ஆம் ஆண்டிற்க்குள் விற்பனைக்கு வரலாம். இந்த குறைந்த விலை பைக் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளும் ஏற்றுமதி செய்யப்படலாம்.யமாஹாவின் 100-110 சிசி பைக்கானது ஸ்ப்ளென்டர், டீரிம் யூகா போன்ற பைக்களுக்கு போட்டியாக அமையும். தற்பொழுது விற்பனையில் உள்ள யமாஹா க்ரூஸ், க்ரூஸ் ஆர் போன்றவை குறைவான எண்ணிக்கையிலே விற்பனையாகின்றன.thanks to autocarpro
டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோரடு இனைந்து புதிய 250சிசி முதல் 500சிசி பைக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த பைக்கள் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.புதிய ரக ஸ்போர்ட்ஸ் பைக்கள் உருவாக்குவதற்க்காக நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளனர். இதனால் பிஎம்டபிள்யூ ஆசியா சந்தையில் வலுவான சந்தையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணியல் உருவாகும் பைக்கள் இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தாலும் வெளிநாடுகளில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தாலும் விற்க்கப்படும்.2015 ஆம் ஆண்டில் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்படும் பைக்கள் விற்பனைக்கு வரலாம். உலகப் புகழ் பெற்ற ஸ்போர்ட்ஸ் பைக்களை பிஎம்டபிள்யூ மோட்டோரடு விற்பனை செய்து வருகின்றது. எனவே மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் நுட்பத்தினை டிவிஎஸ் பெறும். பிஎம்டபிள்யூ நிறுவனம் மிக சிறப்பான அடித்தளத்தினை இந்தியா மற்றும் ஆசியாவில் அமைக்கும்.இந்தியாவிற்க்கு அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்கள் கிடைக்கும்.
ஹோண்டா நிறுவனம் எதிர்காலத்தில் மிக அசைக்கமுடியாத சக்தியாக இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் கொண்டு செயல்பட்டுவருகின்றது. வருகிற 11 அன்று வெளிவரவுள்ள ஹோண்டா அமேஸ் இந்திய சந்தையில் உள்ள பல முன்னோடி கார்களுக்கு கடுமையான நெருக்கடி தரும் என கருதப்படுகின்றது.மேலும் சிறிய ரக கார் சந்தையிலும் களமிறங்க திட்டடுமிட்டுள்ளது. அதாவது தற்பொழுது மிக அதிகமாக விற்பனை ஆககூடிய கார்களான ஆல்டோ மற்றும் இயான் போன்ற கார்களின் சந்தையினை குறி வைத்து சிறய ரக கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாம்.ஹோண்டா தனது தாய்(ஜப்பான்) நாட்டில் கெய் என்ற பிராண்டில் மிக சிறியரக கார்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த கெய் கார்களில் 660சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதே கார் இந்தியாவிற்க்கு வருமா என்ற கேள்விக்கு இந்தியர்களின் இரசனை மற்றும் ஜப்பானியர்களின் இரசனை வேறு என்பதால் இந்தியாவிற்க்கு வேறு விதமான புதிய எஞ்சின் வடிவமைக்கப்படும் என ஹிரோனோரி கனயாமா தெரிவித்துள்ளார்.ஆல்டோ மாதத்திற்க்கு 20,000 கார்கள்…