ரெனோ நிறுவனத்தின் மிக பிரபலமான செடான் காரான ஸ்காலா தற்பொழுது வரையறுக்கப்பட்ட பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்த லிமிடெட் எடிசன் பெயர் ஸ்காலா டிராவலோக் ஆகும்.லிமிடெட் எடிசன் ஆர்எக்ஸ்இசட் டீசல் வேரியண்டில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்காலா டிராவலோக் மே 31 வரை மட்டுமே கிடைக்கும்.லிமிடெட் எடிசனில் சேர்க்கப்பட்ட வசதிகளின் விவரங்கள்..மேம்படுத்தப்பட்ட சாட்டிலைட் நேவிகேஷன் அமைப்பு. இந்த அமைப்பில் தொடுதிரையுடன் விளங்கும். இதனுடன் யூஸ்பி இணைப்பு, டிவிடி ப்ளேயர், பூளுடுத் இணைப்பு மற்றும் ஐ- பாட் இனைப்பினை ஏற்படுத்த முடியும். பின்புற கேமரா, ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல் மற்றும் பின்புறத்தில் சூரிய வெப்பத்தினை தடுக்க சன் செட், மற்றும் ஸ்க்ஃப் பிளேட்.ரியர் வியூ கண்ணாடியில் இன்டிக்கேட்டர் மற்றும் சைலன்சரில் மஃப்லர் கட்டர் பயன்படுத்தியுள்ளனர்.ஸ்காலா இந்திய சந்தையில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இதன் விற்பனை வளர்ச்சினை அதிகரிக்கவே லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 84.8…
Author: MR.Durai
மஹிந்திரா பேண்டீரோ பைக்கில் மூன்று விதமான மாறுபட்டவைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அறிமுகத்தின் பொழுது டி-1 மாறுபட்டவை மட்டும் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப டி-2, டி-3, டி-4 மாறுபட்டவைகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.மஹிந்திரா பேண்டீரோ 110 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8.6 பிஎஸ் ஆகும். 8.5 என்எம் டார்கினை வெளிப்படுத்தும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 79.5 கிமீ கிடைக்கும்.டி-2 மாறுபட்டவைமஹிந்திரா பேண்டீரோ டி-2 பைக்கில் எலக்ட்ரிக் ஸ்டார்ட், ஆலாய் வீல் மற்றும் ஆனலாக் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல்.டி-3 மாறுபட்டவைமஹிந்திரா பேண்டீரோ டி-3 பைக்கில் கிக் ஸ்டார்ட், ஆலாய் வீல் மற்றும் ஆனலாக் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல்.டி-4 மாறுபட்டவைமஹிந்திரா பேண்டீரோ டி-4 பைக்கில் கிக் ஸ்டார்ட், ஸ்போக் வீல் மற்றும் ஆனலாக் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல்.மஹிந்திரா பேண்டீரோ பைக் விலை (சென்னை விலை)மஹிந்திரா பேண்டீரோ டி-1 ரூ 48,990மஹிந்திரா பேண்டீரோ டி-2 ரூ 47,990மஹிந்திரா பேண்டீரோ டி-3 ரூ 45,690மஹிந்திரா பேண்டீரோ டி-4 ரூ 44,690
வணக்கம் நண்பர்களே… ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 13வது கேள்வி பதில் பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி இந்த கேள்வினை கேட்டவர் நண்பர் ஆர்.ராஜன்.. அவரின் கேள்வி ஃபோர்டு கிளாசிக் அல்லது டோயோட்டோ எடியாஸ் வாங்கலாமா என்பதுதான்.ஃபோர்டு கிளாசிக்ஃபோர்டு ஃபியஸ்டா கிளாசிக் செடான் காரினை ஃபோர்டு கிளாசிக் என பெயர் மாற்றியது ஃபோர்டு. கிளாசிக் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் மொத்தம் 6 விதமான மாறுபட்டவையில் கிடைக்கின்றது. 1.6 லிட்டர் டுரோடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 101 பிஎச்பி ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 13.9 கிமீ ஆகும்.1.4 லிட்டர் டீயூரோடார்க் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 68 பிஎஸ் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ ஆகும்சிஎல்எக்ஸ்ஐ மாடல் பற்றி கேட்தனால் அவற்றை சற்று முழுமையாக பார்க்கலாம். ஏபிஎஸ், காற்றுப்பைகள், பிரேக் அசிஸட் போன்றவை இந்த வேரியண்டில் இல்லை. ஃபோர்டு கிளாசிக் பெட்ரோல் மாடல் பயன்படுத்துபவர்களின் சராசரி…
ரொம்ப போர் அடிக்குது எப்ப பார்த்தாலும் சின்சியரா எழுதறது அதான் கொஞ்சம் நக்கலான கார் படங்கள் ரசிங்க.. பிடிச்சா சொல்லுங்க……பின்னாடி நிக்கற வண்டிய விட உயரமா இருக்கனா2014 தேர்தலுக்கு அரசியல் தலைகள் பயன்படுத்தப்போற கார்நம்மள ஆட்டிவிட ஒரு பயபுள்ளையும் இல்லஇதுதான் பசுமை கார்இதுதான் 6வீல் டிரைவ்thanks to funnypictures24.com
மாருதி நிறுவனத்தின் மிக பிரபலமான ஜிப்ஸி ஆஃப்ரோடு வாகனம் இராணுவத்தில் பெரிய பங்கு வகித்து வருகின்றது. தற்பொழுது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு சில அடிப்படை வசதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால் ராணுவத்தில் இருந்து ஜிப்ஸி விடைபெறும்இராணுவ வாகனங்களுக்கான புதிய நிபந்தனைகள1. பாதுகாப்பு வசதிகள் இருத்தல் அவசியம். குறிப்பாக டூவல் காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் இருக்க வேண்டும்.2. குறைந்தபட்ச ஆற்றல் 120 பிஎச்பி வெளிப்படுத்த வேண்டும்.3. ஏசி போன்ற வசதிகளும் அவசியமாகின்றன.4. 800 கிலோ எடையினை சுமக்கும் திறன் கொண்டதாக இருத்தல் அவசியம்.5. சென்டர் லாக், 5 கதவுகள்,மற்றும் பவர் வின்டோஇவற்றை அவசியம் வாகனங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஜிப்ஸி இது போன்ற தகுதிகளை நிறைவேற்ற தவறுவதால் இராணுவத்தில் இருந்து ஜிப்ஸின் பயன்பாட்டினை குறைத்து மாற்று வாகனங்களை தேர்வு செய்வது அவசியமாகிறது.பல்வேறு இராணுவ பயன்பாடுகளுக்காக 30,000 வாகனங்கள் வாங்க ரூ 3000 கோடியினை ஒதுக்கியுள்ளனர். இதனை கைப்பற்ற டாடா…
செவர்லே செயில் செடான் கார் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதை 2 மாதங்களின் நடந்துள்ள முன்பதிவு மூலம் உறுதியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட செவர்லே செயில் 7000 முன்பதிவுகளை கடந்துள்ளது.செவர்லே செயில் ஆனது செடான் கார் பிரிவில் உள்ள ஸ்விப்ட் டிசையருக்கு மிக பெரிய சவாலை கொடுத்துள்ளது. மேலும் வருகிற 11யில் வெளிவரவுள்ள இந்தியாவின் அதிக மைலேஜ் தரக்கூடிய காராக ஹோண்டா அமேஸ் விளங்கும். எனவே செடான் கார் பிரிவில் வலுவான போட்டி தொடங்கிவிட்டது.செவர்லே செயில் செடான் கார் ஸ்விப்ட் டிசையர் காரை விட நல்ல இடவசதி உள்ளது. 8 விதமான மாறுபட்டவையில் செயில் கிடைக்கும். விலை டிசையருடன் போட்டியிடும் வகையில் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் கிடைக்கும்.1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். டீசல் மைலேஜ் லிட்டருக்கு 22.1 கிமீ மற்றும் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ ஆகும்.செவர்லே செயில்…