ஸ்கோடா நிறுவனம் சூப்பர்ப் காரின் மேம்படுத்தப்பட்ட படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது. சூப்பர்ப் காரின் மேம்படுத்தப்பட்ட வகையில் எவ்வித இன்ஜின் மாற்றங்களும் இல்லை ஆனால் தோற்றங்களில் பல மாறுதல்களை கொடுத்துள்ளது.முன்புற கிரில், லோகோ, முகப்பு மற்றும் ஃபோக் விளக்குகள், முன் ஃபென்டர்ஸ், பேனட், பகல் நேர விளக்குகள், பின்புற விளக்குகள் போன்ற வெளிப்புற மாற்றங்களை தந்துள்ளது.உட்ப்புறத்தில் புதிய 4 ஸ்போக் ஸ்டீரியங் வீல், புதிய கியர் லிவர், தானியிங்கியாக பின்புற செல்ல உதவும் கேமரா பயன்படுத்தியுள்ளனர். எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. சூப்பர்ப் மேம்படுத்தப்பட்ட கார் எப்பொழுது வெளிவரும் என உறுதியான தகவல் இல்லை.இந்த ஆண்டின் இறுதியில் வரலாம் என எதிர்பார்க்கலாம்.
Author: MR.Durai
மஹிந்திரா & மஹிந்திரா மிக பிரபலமான எஸ்யூவி கார்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று அனைவருக்கும் தெரியும். மேலும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ரேவா எலக்ட்ரிக் நிறுவனத்தை கைப்பற்றிய பின்னர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இந்தியாவினை உருவாக்கி வருவதில் மிகுந்த முயற்சி மேற்கொண்டு வருகின்றது.முதல் கட்டமாக சில வாரங்களுக்கு முன் மஹிந்திரா ரேவா e2o விற்பனைக்கு வந்தது.அடுத்த வருடத்திற்க்குள்(13-14) மஹிந்திரா வெரிட்டோ செடான் காரினை எலக்ட்ரிக் செடானாக வெளிவருவதனை மஹிந்திரா உறுதிபடுத்தியுள்ளது. எலக்ட்ரிக் வெரிட்டோ 38.9 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.மேலும் இலகுரக டிரக் மேக்சிமோவினை எலக்ட்ரிக் டிரக்யாகவும் கொண்டு வரவுள்ளதாம். தற்பொழுது 50 டிரக்கள் தயார்நிலையில் உள்ளதாம். மேலும் ஜீயோவினை எலக்ட்ரிக் ஆக மாற்ற உள்ளதுஇவற்றிக்கு ரூ 150 கோடி முதலீடு செய்துள்ளது.
ஆடி ஆர் 8 கார் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது ஆடி ஆர் 8 வி 10 ப்ளஸ் காரினை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. முன்பு பயன்படுத்தப்பட்டிருந்த லம்போர்கினியின் 5.2 லிட்டர் வி 10 எஞ்சினை மேம்படுத்தியுள்ளது.542 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த எஞ்சினாகும். இதன் டார்க் 540 என்எம் ஆகும். 0-100கிமீ வேகத்தினை 3.5 விநாடிகளில் நெருங்கிவிடும். எஸ் டரானிக் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.ஆடி ஆர் 8 வி 10 ப்ளஸ் காரின் விலை 2.05 கோடியாகும்.(மும்பை விலை)
டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 பைக்கினை அடிப்படையாக கொண்ட டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர டுகாட்டி திட்டமிட்டுள்ளது.டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 பைக்கின் வசதிகள் மற்றும் வடிவமைப்பு, சிறப்பம்சங்கள் என பலவும் டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 பைக்கிலும் இருக்கும். ஆனால் எஞ்சின் 696சிசி காற்றுமூலம் குளிர்விக்கப்படும் எஞ்சின் பயன்படுத்த உள்ளனர். இந்த எஞ்சின் 80 எச்பி ஆற்றலை 9000 ஆர்பிஎம் வேகத்தில் வெளிப்படுத்தும்.795 பைக்கினை 696 ஆக குறைக்க காரணம் பொது பட்ஜெட்டில் 800சிசி அதற்க்கு மேல் உள்ள பைக்களை இறக்குமதி செய்தால் வரி உயர்வு அறிவிக்கப்பட்டதாலே இந்த முடிவு. டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 பைக்கினை விட இரண்டு கிலோ மட்டும் குறைவாக இருக்கும். 795 பைக்கினை அனைத்து அம்சங்களும் இருக்கும் என்பதனை டுகாட்டி உறுதிசெய்துள்ளது. டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 எதிர்பார்க்கப்படும் விலை ரூ 7 இலடசத்திற்க்கு மேல் இருக்கும்.
ஹோண்டா அமேஸ் செடான் கார் மிகுந்த எதிர்பார்ப்பினை பெற்று வருகின்றது. வருகிற ஏப்ரல் 11 வெவிவரவுள்ள அமேஸ் காருக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. ரூ 21,000 கட்டி முன்பதிவு செய்துகொள்ளலாம். 30 நாட்களில் கார் டெலிவரி செய்துவிடுவதாக ஹோண்டா உறுதியளித்துள்ளது.விலை ரூ 6 இலட்சத்தில் தொடங்கலாம்மிக வசிகரமான தோற்றத்துடன் விளங்கும் ஹோண்டா அமேஸ் கார் படங்கள் உதவி ஜிக்வீல்ஸ். ஹோண்டா அமேஸ் கார் பல முன்னணி செடான் கார்களின் சந்தையை வலுவிலக்க செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்க்கு காரணம் ஹோண்டா அமேஸ் மைலேஜ் 25.8 மேலும் பல விவரங்கள் அறிய கிளிக் பன்னுங்க: ஹோண்டா அமேஸ்
ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய அனைத்து மாடல் கார்களை ரூ 575 முதல் ரூ 2830 வரை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட விலை விபரங்கள் 2013 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. உயர்த்தப்பட்ட விலை விபரம்இயான் மாடல் ரூ 2500 உயர்கின்றது.ஐ10 மாடல் ரூ 900 உயர்கின்றது.ஐ20 பெட்ரோல் மற்றும் டீசல் ரூ 575 உயர்கின்றது.சான்ட்ரோ மாடல் ரூ 2830 உயர்கின்றது.சொனாட்டா மாடல் ரூ 900 உயர்கின்றது.எலன்ட்ரா மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ரூ 1740 உயர்கின்றது.வெர்னா மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ரூ 1340 உயர்கின்றது.சான்டா ஃபீ மாடல் ரூ 2813 உயர்கின்றது.