ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பைக்கிற்க்கு போட்டியாக ஹோண்டா புதிய 100சிசி பைக்கினை இன்னும் சில மாதங்களில் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆண்டிற்க்கு ஸ்பிளென்டர் பைக்கள் 20 இலட்சத்திற்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டே ஹோண்டா புதிய 100 சிசி பைக்கினை உருவாக்கி வருகின்றது. ஹோண்டா டிரீம் யூகா பைக்கின் சிரியஸ்யில் உருவாக உள்ள 100 சிசி பைக் ஸ்பிளென்டர் பைக்கின் விலையே இருக்கலாம்.ஹோண்டா புதிய 100 சிசி பைக் பெரும் வரவேற்பினை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவேற்பினை பெற்றால் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் கடுமையான போட்டியினை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இந்த 100 சிசி பைக்கிற்க்கான ஹோண்டா கோட் K23 ஆகும்.
Author: MR.Durai
லம்போர்கினி சொகுசு கார் நிறுவனம் யூரஸ் எஸ்யூவி காரை வருகிற 2016 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளதாக லம்போர்கினி தகவல் வெளியிட்டுள்ளது.1986 ஆம் ஆண்டிற்க்கு பின் எஸ்யூவி கார்களை மீண்டும் லம்போர்கினி தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். யூரஸ் எஸ்யூவி காருக்காக பாடி மற்றும் பேனல்களை வடிவமைக்க புதிய மெட்டலை பயன்படுத்துவதற்க்காக சோதனை செய்து வருகின்றது..இதற்க்கான பாடி பொருட்கள் கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியத்தை கொண்டு யூரஸ் கார் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த பாடியானது மிகவும் குறைவான எடை மற்றும் உறுதிமிக்கதாகவும் இருக்கும். லம்போர்கினி யூரஸ் எஸ்யூவி கார்களுக்காக மிக சிறப்பான நவீன எம்எல்பி பிளாட்பாரத்தல் உருவாக்க உள்ளது.2016 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என ஆடியின் தலைமை செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லர் கூறியுள்ளார். லம்போர்கினி நிறுவனத்தை இயக்குவது ஆடி நிறுவனமாகும்.லம்போர்கினி யூரஸ் பற்றி முந்தைய பதிவினை படிக்க லம்போர்கினி எஸ்யூவிஇன்றுடன் ஆட்டோமொபைல் தமிழன் ஒரு…
பஜாஜ் டிஸ்கவர் 125st பைக் பற்றி சிறப்பு அலசல் மற்றும் விவரங்களை கானலாம். பஜாஜ் டிஸ்கவர் 125 எஸ்டி பைக் மைலேஜ் லிட்டருக்கு 50 முதல் 56 கிமீ நகரங்களில் மற்றும் நெடுஞ்சாலையில் 60 முதல் 65 கிமீ வரை கிடைக்கின்றதாம்.பஜாஜ் டிஸ்கவர் 125 எஸ்டி பைக்கில் 124.66 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 12.8 பிஎச்பி @ 9000 ஆர்பிஎம் ஆகும். டார்க் 10.78என்எம் @ 7000 ஆர்பிஎம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.முன்புறத்தில் டிஸ்க் பிரேக் பின்புறத்தில் ட்ரம் பிரேக் பயன்படுத்தியுள்ளனர். 65 முதல் 75 கிமீ மைலேஜ் பஜாஜ் சொன்னாலும் மேலே குறிப்பிட்ட மைலேஜ்தான் பலரின் அனுபவத்தின் வாயிலாக கிடைக்ககூடிய மைலேஜ் ஆகும். 4 வண்ணங்களில் பஜாஜ் டிஸ்கவர் 125 st கிடைக்கின்றது.சிறப்பான கையாளுதல் திறனை வெளிப்படுத்தக்கூடிய பைக்காக விளங்குகின்றது. நிலைப்புதன்மை மற்றும் பிரேக்கிங் போன்றவை சிறப்பாக உள்ளது மேலும் பணத்திற்க்கான மதிப்பினை…
ஜீப் செரோக்கி எஸ்யூவி காரின் முழுமையான பல விவரங்கள் மற்றும் பார்வைக்கு நியூ யார்க் மோட்டார் ஷோவில் வைத்துள்ளது. ஜீப் செரோக்கி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர ஃபியட் திட்டமிட்டுள்ளது.ஜீப் செரோக்கி எஸ்யூவி காரில் 70க்கு மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ள காராகும். குறிப்பாக காற்றுபைகள், பிரேக் உதவி, பிளைன்ட் ஸ்பாட், முன்புறத்தில் மோதுவதற்க்கு முன் எச்சரிக்கை (விபத்து நடப்பதற்க்கு முன்) என பல வசதிகள் உள்ளன.4 விதமான மாறுபட்டவைகளாக ஜீப் செரோக்கி கிடைக்கும். அவை செரோக்கி ஸ்போர்ட்,செரோக்கி லிமிமெட், கெரோக்கி லேட்டிடீயூட் மற்றும் ஜீப் செரோக்கி ட்ரயில்ஹவாக். இரண்டு விதமான எஞ்சின்களில் கிடைக்கும்.பேஸ் ஜீப் செரோக்கி எஞ்சினாக 2.4 லிட்டர் டைகர்சார்க் பொருத்தப்பட்டிருக்கும். டைகர்சார்க் பெட்ரோல் எஞ்சின் 184 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.மற்றுமொரு எஞ்சின் 3.2 லிட்டர் பென்டாஸ்டார் பொருத்தப்பட்டிருக்கும். பென்டாஸ்டார் பெட்ரோல் எஞ்சின் 271 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.ஜீப் செரோக்கி மூன்று விதமான 4×4 மோட்டில் கிடைக்கும். முதல் மோட் ரியர் ஆக்ஸ்யிலுக்கு பவர் செல்வதை…
ஜப்பான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓஷிரோ இரு சக்கர வாகன தயாரிக்கும் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் பைக்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளன.நாடு முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்களில் ஷோரூம்களை திறப்பதற்க்காக செயல்பட்டு வருகின்றது. மாஹாரஷ்டிரா மாநிலத்தில் ஓசிரோ ஆலையை கட்டமைத்து வருகின்றது. ஆகஸ்ட் மாதம் உற்பத்தியை தொடங்க உள்ளது. முதல் கட்டமாக ஓஷிரோ 100- 150 சிசி பைக்களை களமிறக்க உள்ளது.மேலும் 125- 150சிசி ஸ்கூட்டர்களையும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.இதன் மூலம் பைக் மார்க்கெட்டில் தனக்கென தனியான இடத்தை பிடிக்க குறைவான விலை மற்றும் சிறப்பான செயல்திறன் தரக்கூடிய பைக்களாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.தற்பொழுது ஓஷிரோ பைக்கிற்க்கான டீலர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.Oshiro Dealer zone
மாருதி சுசுகி எஸ்எக்ஸ்4 காரின் மேம்படுத்தப்பட்ட 2013 மாருதி சுசுகி எஸ்எக்ஸ்4 இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய மாருதி சுசுகி எஸ்எக்ஸ்4 செடான் காரில் எவ்விதமான எஞ்சின் மாற்றங்களும் கிடையாது.2013 மாருதி சுசுகி எஸ்எக்ஸ்4 மேம்படுத்தப்பட்ட காரில் முன்புற கிரில்,புதிய பம்பர், மேம்படுத்தப்பட்ட விளக்குகள்,இரண்டு வண்ணங்களில் இன்டிகேட் ஆகும் ஒஆர்விஎம். உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட மல்டிமீடியா அமைப்பு, ஜிபிஎஸ் தொடுதிரை அமைப்பு, வாய்ஸ் கமென்ட் அமைப்பு, கார்டு ரென்டர் மற்றும் டேஸ்போர்டு கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.வருகிற ஜூன் மாதம் வெளிவரலாம்