ஹோண்டா நிறுவனத்தின் பிரியோ ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்ட ஹோண்டா அமேஸ் செடான் வருகிற ஏப்ரல் 11 வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹோண்டா அமேஸ் செடான் கார் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும் ஹோண்டா அமேஸ் செடான் கார் மாருதி ஸ்விப்ட் டிசையர் காருக்கு மிக கடுமையான சவாலினை தரலாம். மாருதியின் வளமையான நெட்வெர்க் மற்றும் சர்வீஸ் போன்றவற்றுடனும் ஹோண்டா போட்டியிட வேண்டி வரும்.ஹோண்டா அமேஸ் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் i-VTec பொருத்தப்பட்டிருக்கும் 88.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்த கூடிய எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.ஹோண்டா அமேஸ் காரில் 1.5 லிட்டர் i-Dtec எர்த் டிரீம்ஸ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 98.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்த கூடிய எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 220 என்எம் டார்கினை வெளிப்படுத்தும்.ஹோண்டா அமேஸ் காரின் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 26 (25.4)கிமீ தரலாம் என…
Author: MR.Durai
நிசான் மைக்ரா காரின் மேம்படுத்தப்பட்ட கார் தாய்லாந்தில் அறிமுகம் செய்ய உள்ளனர். ஆனால் நிசான் மைக்ரா மேம்படுத்தப்பட்ட கார் இந்தியாவில் அறிமுகம் எப்பொழுது என்பதற்க்கு தெளிவான பதில்கள் இல்லை.நிசான் மைக்ரா காரின் மேம்படுதப்பட்ட அம்சங்கள் முகப்பு கிரில், ஹனிகாம்ப் வடிவமைப்பு, மேலும் முன் மற்றும் பின்புற பம்பர்கள், புதிய முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகளில் எல்இடி, ஃபோக் விளக்குகள் போன்றவை வெளிப்புற மாற்றங்கள் ஆகும்.உட்ப்புறத்தில் ஸ்டீரியங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சிவிட்ச்கள், கர்டையின் காற்றுப்பைகள் விரும்பினால், மற்றும் காற்று வென்ட்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.நிசான் மைக்ரா காரில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் கிடைக்கின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இதன் ஆற்றல் 76பிஎஸ் மற்றும் டார்க் 104என்எம் ஆகும். 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இதன் ஆற்றல் 64பிஎஸ் மற்றும் டார்க் 160என்எம் ஆகும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.மேம்படுத்தப்பட்ட வகையில் ஆட்டோமேட்டிக் கியர்…
மஹிந்திரா இருசக்கர பிரிவு நிறுவனம் இந்தியாவின் வடிவமைப்பு கவுன்சில் வழங்கும் இந்தியன் டிசைன் மார்க் விருதினை பெற்றுள்ளது. மஹிந்திராவின் ரோடியோ ஆர்இசட் மற்றும் டியூரோ ஆர்இசட் ஸ்கூட்டர்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.இந்த விருதிற்க்கான தேர்வுமுறை ஆனது வடிவமைப்பு, நிலைப்பு தன்மை, தரம்,செயல்பாடு, தோற்றம், சிறப்பான உருவாக்கம் போன்ற காரானிகளை மையமாக வைத்து இந்த விருது இந்தியா டிசைன் கவுன்சில் வழங்குகின்றது.இந்தியன் டிசைன் மார்க் விருது பெற்ற பொழுது மஹிந்திராவின் சீனயர் வைஸ் பிரிசிடென்ட் மற்றும் தலைமை அதிகாரி பி.எஸ் ஆசோக் கூறுகையில்..இந்தியா டிசைன் கவுன்சில் விருதினை மிக பெரிய கவுரவமாக நினைக்கிறோம். மேலும் இந்த விருதானது உலகமுழுவதும் மஹிந்திரா ஸ்கூட்டரை எடுத்து செல்ல முடியும்.ரோடியோ ஆர்இசட் மற்றும் டியூரோ ஆர்இசட் ஸ்கூட்டர்கள் இரண்டும் 124.6 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8.1பிஎஸ் ஆகும்.
கவாஸ்கி நின்ஜா 300 பைக் விரைவில் வெளிவரவுள்ளது. கவாஸ்கி நின்ஜா 250 பைக்கிற்க்கு மாற்றாக நின்ஜா 300 விற்பனைக்கு வரலாம். நின்ஜா 250 பைக்கினை விட மேம்படுத்தப்பட்டதாக விளங்கும்.கவாஸ்கி நின்ஜா 300 பைக்கில் இசட்எக்ஸ்-10ஆர் பைக்கினை அடிப்படையாக கொண்ட முகப்பு விளக்குகள், ப்ளோட்டிங் வைஸர், மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மேலும் இன்ஜின் வெப்பம் ரைடரை தாக்காமல் இருப்பதற்க்காக ரேடியேட்டர் ஃபேன் மற்றும் வென்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.296 சிசி பேரலல் டிவின் மற்றும் திரவ குளிர்வித்தல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 36 பிஎச்பி @ 11,000rpm ஆகும். மிகவும் பவர்ஃபுல்லான எஞ்சினாக விளங்கும்.6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயனபடுத்தியுள்ளனர்.முன் மற்றும் பின்பறம் டிஸ்க் பிரேக் பயன்படுத்தியுள்ளனர். இந்த பைக் வெளிவந்தவுடன் நின்ஜா 250 பைக் விற்பனை நிறுத்தப்படலாம் என எதிர்பார்கின்றனர். விலை விபரங்கள் கிடைக்கவில்லை.வருகிற ஏப்ரல் மாதம் வெளிவரலாம்.
மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த 124 நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்த மாருதி ஆல்டோ 800 கார் 1 இலட்சம் கார்கள் என்ற விற்பனை இலக்கை கடந்துள்ளது. இது மிக விரைவான ஹேட்ச்பேக் விற்பனையாகும்.சிறிய ரக கார்களில் பலரும் தேர்ந்தேடுக்கும் காராக மாருதி ஆல்டோ 800 விளங்குகின்றது. 796 சிசி 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 48பிஎஸ் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.மாருதி ஆல்டோ 800 கார் வாங்கலாமா
மாருதி சுஸூகி நிறுவனத்தின் மிக பிரபலமான காரான ஸ்விப்ட் காருக்கு மாருதி ரூ 5000 முதல் ரூ 10,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. ஸ்விப்ட் கார் அறிமுகம் செய்த தேதியில் இருந்து தள்ளுபடி வழங்கியது இல்லை ஆனால் இன்று நிலைமை வேறு…மாருதி சுசுகி ஸ்விப்ட் காரின் விற்பனை மந்தமாகியுள்ளதாக இந்த சலுகைகள் மூலம் தெரியவருகின்றது. ஆனால் மாருதி சுசுகி இதனை விற்பனை அதிகரிக்க என காரணம் கூறியுள்ளது.இந்திய கார் சந்தையே மிக பலவீனமாகி வருகின்றது. பல கார் தயாரிப்பாளர்கள் பல்வேறு விதமான சலுகைகள் அளித்து வருகின்றனர். மாருதி ஸ்விப்ட் டீசல் கார்களை உடனடியாக டெலிவரி செய்யப்படும் என முன்பதிவுகளை வரவேற்கின்றது.வருகிற மார்ச் 31க்குள் டெலிவரி செய்துவிடுவார்கள். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் மாருதி ரிட்ஸ் டீசல் காருக்கு ரூ 45,000 தள்ளுபடி வழங்கியுள்ளது. மேலும் மாருதி ரிட்ஸ் பெட்ரோல் காருக்கு ரூ 25,000 தள்ளுபடி வழங்கியுள்ளது.இந்த வருடத்தின் தொடக்க முதலே…