மத்திய பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட வரியில் செடான கார்களை வரியில் இருந்து விடுவிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரியின் விபரங்கள் இதுதான். அதாவது 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் உள்ள கார்களுக்கும், 170 மில்லிமீட்டர் தரை இடைவெளி மூலம் உள்ள எஸ்யூவி கார்களுக்கும் வரி உயர்த்தப்பட்டது.4 மீட்டர் நீளம் என்ற பிரிவினால் சில செடான் கார்களும் வரி உயர்வுக்கு ஆளாகின. அந்த வகையில் சிக்கிய செடான் கார்கள் ஹோண்டா சிவிக், சுசுகி எஸ்எக்ஸ்4, மற்றும் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஆகும்.எஸ்யூவி கார்களுக்கான வரி உயர்வினை திரும்ப பெற சியாம் வலியறுத்தியது. ஆனால் மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. மேலும் விற்பனை மந்தமாக உள்ளதால் செடான் கார்களை வரி விதிப்பில் இருந்து விடுவிக்க கோரிக்கை விடுத்தது.இந்த கோரிக்கை ஏற்பதற்க்கான வாய்ப்பு உள்ளதால் செடான் கார்களுக்கு வரி விதிப்பு திரும்ப பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Author: MR.Durai
இத்தாலியின் மாசெராட்டி நிறுவனம் லாஃபெராரி காரினை அடிப்படையாக வைத்து புதிய எம்சி 12 காரினை வருகிற 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபெராரி மற்றும் மாசெராட்டி நிறுவனங்களை நிர்வாகிப்பது ஃபியட் நிறுவனமாகும்.கடந்த 2004 ஆம் ஆண்டு இதே போல என்ஜோ ஃபெராரி காரினை அடிப்படையாக கொண்டு சூப்பர் காரினை வெளியிட்டுள்ளது. தற்பொழுது மீண்டும் லாஃபெராரி காரினை அடிப்படையாக வைத்து லாமாசெராட்டி அல்லது எம்சி 12 காரை வடிவமைக்க உள்ளது.லாஃபெராரி காரின் அடிச்சட்டம், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ் அமைப்பு, சஸ்பென்ஷன் அமைப்பு என அவற்றையை மாசெராட்டி காரிலும் இருக்கும். ஆனால் தோற்றம் வடிவமைப்பு ஆகியவை புதிய வடிவமைப்பாக இருக்கும்.லாஃபெராரி காரின் எஞ்சினே இதிலும் பயன்படுத்தப்படும். ஆனால் லாஃபெராரி போல ஹைபிரிட் இருக்காது. எஞ்சின் ஆற்றலும் 750-800 பிஎச்பிக்குள் இருக்கும்.மேலும் லாமாசெராட்டி 50 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும். இதன் விலை ரூ 7 கோடிக்கு மேல் இருக்கும்.thanks to carmagzine…
கேடிஎம் பைக் நிறுவனத்தின் இ-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் வெளிப்படுத்தியது. இந்த E-ஸ்பீடு ஸ்கூட்டரை ஸ்கூட்டர் என்பதனை விட டிர்ட்டி பைக் என சொல்லாலம் என்று கேடிஎம் நிர்வாக இயக்குனர் திரு ஸ்டிஃபன் கூறியுள்ளார்.கேடிஎம் E-ஸ்பீடு ஸ்கூட்டரினை சார்ஜ் செய்ய 2 மணி நேரம் போதுமானது. சாதரன 220வோல்ட் ஸாக்கெட் போதுமானது. இந்த ஸ்கூட்டரின் எடை 140 கிலோ ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம் ஐன் பேட்டரி ஆகும். இந்த பேட்டரியின் கொள்ளவு 4.36 கிலோ வாட். முழு சார்ஜ்யில் 65 கீமி பயணிக்கலாம்.கேடிஎம் E-ஸ்பீடு ஸ்கூட்டரில் திரவ குளிர்விக்க நிலையான காந்தத்தின் சின்க்ரோனஸ் மோட்டார் பொருத்தப்பட்டுருக்கும். இதன் நிலையான ஆற்றல் 15எச்பி ஆகும். டார்க் 36 என்எம் ஆகும். ஆற்றலை பின் சக்கரங்களுக்கு கடத்த பெல்ட் பயன்படுத்தியுள்ளனர்.14 இன்ச் ஆலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக் பிடிக்கும் பொழுது பெறப்படும் ஆற்றலை ரீஜெனரேட்டிவ் நுட்பம் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் மிக பிரபலமான ஸ்விஃபட் ஹேட்ச்பேக் 30 லட்சம் கார்களை கடந்து விற்று வருகின்றது. இதனை கொண்டாடும் வகையில் ஸ்விஃப்ட் ஸ்டார் என்ற பெயரில் மாருதி ஸ்விஃப்ட்டின் வரையறுக்கப்பட்ட பதிப்பினை வெளியிட்டுள்ளது. ஸ்விஃப்ட் வரையறுக்கப்பட்ட பதிப்பில் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை டபூள் டின் ஸ்டீரியோ இனைப்புடன் பூளுடூத், லெதர் இருக்கை உறைகள், பின்புற கூரை ஸ்பாய்லர், ஸ்டீரியங் வீல் உறை மற்றும் தரை விரிப்பு. வேறு எந்த மாற்றங்களும் இல்லை. ஸ்விஃப்ட் ஸ்டார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். இவை ஸ்விஃப்ட் காரின் பேஸ் மற்றும் மிடில் மாறுபட்டவைகளில் மட்டும் கிடைக்கும். புதிதாக சேர்க்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ 23,000 ஆகும்.இந்தியாவிலே மிக அதிகப்படியான விற்ற கார்களில் இரண்டாம் இடத்தில் ஸ்விஃப்ட் உள்ளது.
மஹிந்திரா ரேவா அறிமுகம் செய்துள்ள ரேவா e2o எலக்ட்ரிக் கார் மிகுந்த வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்நிலையில் ரேவா e2o காரின் முழுமையான விவரங்கள் வெளிவந்துள்ளன.முதல்கட்டமாக 8 நகரங்களில் வெளிவந்துள்ள மஹிந்திரா ரேவா e2o காரின் விலை விபரங்களும் வெளிவந்துள்ளன. தில்லி மாநில அரசாங்கத்தின் வரி சலுகையின் காரணமாகவே தில்லியில் விலை குறைவாக உள்ளது. மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரில் இரண்டு விதமான மாறுபட்டவை உள்ளது. அவை டி0 (0-ஜீரோ) மற்றும் டி2 ஆகும். டி2 டாப் வேரியண்டில் ரிவர்ஸ் பார்கிங் கேமரா அசிஸ்ட், ஐ-பாட் தொடர்பு, யூஎஸ்பி, டிவிடி,எம்பி3, போன்ற இன்னும் சில வசதிகள் கூடுதலாக உள்ளன.பல்வேறு விதமான அதிநவீன வசதிகள் உள்ளன. அவைகளில் சில எங்கிருந்து வேண்டுமானலும் உங்கள் மொபைல் மூலம் கதவினை திறக்கவும் மூடவும் முடியும். உங்கள் மொபைல் மூலம் இணைப்பினை ஏற்படுத்தி அவசர நேரங்களில் கூடுதலாக 8 முதல் 9 கீமி வரை பயணிக்க முடியும். மஹிந்திரா ரேவா…
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதனை கருத்தில் கொண்டு மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாம்.மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் கீழ் இயங்கும் சாங்யாங் பிராண்டிற்க்கு சேர்த்து மின்சார எஸ்யூவிகளை தயாரிக்க உள்ளதாம். இதற்க்கான தொழில்நுட்ப விவரங்களை மஹிந்திரா ரேவா அளிக்கும்.மஹிந்திரா ரேவா நிறுவனத்தில் எஸ்யூவி தயாரிக்கும் எண்ணம் இல்லையாம். மேலும் மஹிந்திரா ரேவா நிறுவனத்தில் இருந்து e2o காரை அடிப்படையாக வைத்து செடான் பிரிவில் எலக்ட்ரிக் கார் வெளிவரலாம். ரேவா உதவியுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.