Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டிவிஎஸ் நிறுவனம் 110சிசி வெகோ ஸ்கூட்டரில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஸ்கூட்டரினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் உற்பத்தில் இருந்தாலும் இவை ஏற்றுமதி மட்டும் செய்யது வந்தனர்.தற்பொழுது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிஸ்க் பிரேக் 220என்எம் அளவு உள்ளதாகும். மிக விரளவில் இந்த ஸ்கூட்டர்கள் ஷோரூம்களில் கிடைக்கும். டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் விலை ஸ்டான்டர்டு ஸ்கூட்டரை விட ரூ 3350 அதிகம்.டிஸ்க் பிரேக் ஸ்கூட்டர் ரூ 49,157ஸ்டான்டர்டு ஸ்கூட்டர் ரூ 45,807(விலை விபரங்கள் தில்லி எக்ஸ்ஷோரூம் விலையாகும்.)

Read More

இந்தியாவின் மிக வேகமாக விற்பனையாகும் எஸ்யூவி கார் என்றால் அது எக்ஸ்யூவி500 கார்தான். மிக குறைந்த காலத்திலே 50,000 வாகனங்களை விற்பனை செய்தது.மஹிந்திரா எக்ஸயூவி 500 கார்களுக்கு மிக சவாலாக ரெனால்ட் டஸ்ட்டர் விளங்கும். மேலும் விரைவில் வெளிவர உள்ள ஈக்கோஸ்போர்ட் இன்னும் சவாலினை தரும். எனவே இவற்றை சமாளிக்க மஹிந்திரா தீவரமான முயற்சியில் களமிறங்கியுள்ளது.மஹிந்திரா எக்ஸயூவி 500 எஸ்யூவி காரில் இரண்டு விதமான மாறுபட்ட வகையினை வெளியிட உள்ளது. அவற்றில் தற்பொழுது உள்ள மாறுபட்ட வகையை விட குறைவான வேரியண்டாக ஒன்றும் மற்றொன்று மிக உயர்வான வேரியண்ட்யாக இருக்கும்.

Read More

ஜாகுவார் கார்களின் மகுடமாக விளங்ககூடிய எக்ஸ்ஜெ செடான் காரில் எக்ஸ்ஜெஆர் என்ற புதிய காரினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காரானது அடுத்த வாரம் நடக்கவுள்ள நியூ யார்க் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.ஜாகுவார் எக்ஸ்ஜெஆர் காரில் ஜாகுவார் நிறுவனத்தின் மிக புகழ்பெற்ற 5.0 லிட்டர் வி 8 எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸெஃப்ஆர்எஸ் காரில் பொருத்தப்பட்ட எஞ்சினே ஆகும். அதனால் இதன் ஆற்றல் 542பிஎச்பி ஆக இருக்கலாம்.மிக சிறப்பான சொகுசு செடான் காராக ஜாகுவார் எக்ஸ்ஜெஆர் விளங்கும். ஒரு படத்தினை மட்டும் ஜாகுவார் வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்கள் ஷோவில் வெளிவரும்.

Read More

லேண்ட் ரோவர் இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. ரோஞ்ச் ரோவர் எஸ்யூவி காரிகளில் 4.4 லிட்டர் டீசல் மற்றும் 5.0 லிட்டர் பெட்ரோல் விற்பனையில் உள்ளது.தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் 2993 சிசி எஞ்சின் ஆனது டிவின் டர்போ வி6 டீசல் எஞ்சின் 255 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 600என்எம் ஆகும். இசட்எஃப் 8 ஸ்பீடு தானியிங்கி கியர் பாகஸ் பயன்படுத்தியுள்ளனர்.0-100 கீமி வேகத்தை 7.9 விநாடிகளில் எட்டும். உச்சகட்ட வேகம் மணிக்கு 210 கீமி ஆகும். 3.0 லிட்டர் எஞ்சினில் இரண்டு விதமான மாறுபட்ட வகைகள் உண்டு. அவற்றில் பேஸ் எச்எஸ்இ மாடல் மற்றும் வோக் மாடல் ஆகும்.ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் எச்எஸ்இ மாடல் விலை ரூ 1.44 கோடியாகும்.ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் வோக்…

Read More

அர்மான் இப்ராஹிம் FIA GT1 உலக சேம்பியன்ஷிப்பில் பங்கேற்க்கும் முதல் இந்தியர் ஆவார். பிஎம்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் ட்ராப்பி -ஜிடி1 இந்திய அணியுடன் இதற்க்கான 1 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.இவருடைய அணியில் இத்தாலி நாட்டின் டிரைவர் மேட்டியோ கிர்ஸ்சனாய் பங்கேற்பார். பிஎம்டபிள்யூ இசட்4 ஜிடி 1 கார் இந்த போட்டியில் பயன்படுத்த உள்ளனர். இந்த கார் வெளிப்படுத்தும் ஆற்றல் 558 பிஎஸ் வெளிப்படுத்தும்.இந்த FIA GT1 உலக சேம்பியன்ஷிப்பில் போட்டியில் ஆடி, ஆஸ்டன் மார்டின், லம்போர்கினி, போர்ஸ்ச், போர்டு ஃபெராரி, மெர்சிடிஸ் போன்ற நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.அர்மான் இப்ராஹிம் இது பற்றி கூறுகையில் பார்முலா கார்களில் இருந்து ஜிடி கார்களுக்கு செல்வது மிக சவாலான அனுபவமாக இருக்கும். இந்த தொடர் முழுவதும் பங்கேற்க விரும்புகிறேன். ஜிடி 1 ரேஸ்களில் கடந்த வருடம் மாஸ்கோவில் பங்கேற்ற அனுபவம் சிறப்பாக இருந்த்து.அர்மான் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜிடி 1 யில் போர்டு ஜிடி 40 காரை சன் ரெட்…

Read More

மாருதி ஈக்கோ ஸ்மைல்ஸ் என்ற பெயரில் மாருதி ஈக்கோ காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பினை மாருதி அறிமுகம் செய்துள்ளது. மாருதி ஈக்கோ ஸ்மைல்ஸ் காரில் எஞ்சின்யில் எந்த மாற்றமும் இல்லை. ஈக்கோ ஸ்மைல்ஸ் காரின் வெளிபுறத்ததில் மட் பிளாப், வீல் கவர், ஸ்மைல்ஸ் ஸ்டிக்கர்கள் மற்றும் உட்புறத்தில் புதிய டபூள் டின் இசை அமைப்பு இனைப்புடன் யூஎஸ்பி, டீயூல் டோன் இருக்கை போர்வை மற்றும் டோர்மேட்.மாருதி ஈக்கோ ஸ்மைல்ஸ் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் சிஎன்ஜி கிட் ஆப்ஷனும் கிடைக்கும். வரையறுக்கப்பட்ட பதிப்பின் சேர்க்கப்பட்ட 7 வசதிகளின் மதிப்பு ரூ 9490 ஆகும்.விலை விபரங்கள்5 இருக்கை A/C இல்லாமல்: ரூ 3.32 இலட்சம்5 இருக்கை A/C உடன்: ரூ 3.63 இலட்சம்7 இருக்கை A/C இல்லாமல்: ரூ 3.49 இலட்சம் விலைகள் மும்பை எக்ஸ் ஷோரூம் ஆகும்.

Read More