ஹோன்டா மினி ஸ்டீரிட் 125 பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. மிக அல்டிமெட் லூக்குடன் சிறப்பான பைக்கானது சாலைகளை ஆக்கரமிக்க உள்ளது. ஹோன்டா மினி ஸ்டீரிட் முழுப்பெயர் ஹோன்டா MSX-125 – MINI STREET X-TREME 125 ஆகும்ஹோன்டா மினி ஸ்டீரிட் 125சிசி ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 9.65bhp @ 7000rpm மற்றும் டார்க் 10.9nm @ 5500rpm. 4 ஸ்பீடு க்யர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. PGM-FI பயன்படுத்தப்பட்டுள்ளது.31mm USD ஃபோர்க்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புற 190mm டிஸ்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புற 200mm டிஸ்க் ப்ரேக் பயன்படுத்தியுள்ளனர். முன்புற வீல் 120/70 இன்ச் பின்புறம் 130/70 இன்ச் பயன்படுத்தியுள்ளனர்.ஹோன்டா மினி ஸ்டீரிட் வீடியோ
Author: MR.Durai
ப்யாகோ நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் சிறப்பாக முன்னேறி வருகின்றது. தன்னுடைய முன்னேற்றத்தை மேலும் வளப்படுத்த அடுத்த 150சிசி டைப்பூன் ஸ்கூட்டரினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.வெஸ்பா எல்ஸ் 125சிசி வரவேற்பினை தொடர்ந்து விரைவில் 150சிசி டைப்பூன் ஸ்கூட்டர் (MPFI-multi point fuel injection) பொருத்தப்பட்ட என்ஜின் ஆகும். இந்த ஸ்கூட்டர் வெளிவரும் பொழுது 150சிசி டைப்பூன் இந்தியாவின் முதல் MPFI ஸ்கூட்டராக இருக்கும்.டைப்பூன் ஸ்கூட்டர் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இதன் சக்தி 11.4HP @ 7750rpm மற்றும் டார்க் 11.5NM @ 6000rpm ஆகும். இதனுடைய எரிகிடங்கு அளவு 7 லிட்டர் ஆகும். முன்புறம் மற்றும் பின்புறங்களில் 200mm டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டிருக்கும்.அதிகப்பட்ச வேகம் 100km/hஇதுனுடைய விலை கூடுதலாக இருக்கும் என்பதால் விற்பனை பாதிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதிர்பார்க்கப்படும் விலை 75,000 முதல் 90,000 வரை இருக்கலாம். வருகிற ஜூன் மாதத்தில் வரலாம்.மைலேஜ் 32kmplப்யாகோ நிறுவனத்தின் ப்ரான்ட்தான் வெஸ்பா..
பஜாஜ் நிறுவனம் விரைவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களை களமிறக்க உள்ளதாக தெரிகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் பஜாஜ் ஸ்கூட்டர்களை நிறுத்தி கொண்டது.தற்பொழுது ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு மீண்டும் புதிய தொடக்கத்தை பஜாஜ் தரவுள்ளது.பஜாஜ் க்ரிஸ்டல் மற்றும் வேவ் ஸ்கூட்டர்களை உருவாக்கும் முயற்சியில் தீவரமாக செயல்பட்டு வருகிறது.125சிசி மற்றும் 150சிசி என்ஜின்களில் DTS-i உடன் வெளிவரும்..
ரெனால்ட் ஸ்கேலா ஆட்டோமேட்டிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கேலா ஆட்டோமெட்டிக் இந்த மாதத்தின் இறுதியில் இருந்து கிடைக்கும். மென்வல் காரை விட ஆட்டோமேட்டிக் மைலேஜ் அதிகம்..ரெனால்ட் ஸ்கேலா ஆட்டோமேட்டிக் CVT பெட்ரோல் வகையின் RXL மற்றும் RXZ வகையில் மட்டும் கிடைக்கும்.மேன்வல் காரைவிட மைலேஜ் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் ஸ்கேலா ஆட்டோமேட்டிக் காரில் மைலேஜ் அதிகம்.ஸ்கேலா XTRONIC CVT ஆட்டோமெட்டிக் மைலேஜ் அதிகமாக இருப்பதனால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேன்வல் மைலேஜை விட 1kmpl அதிகம் .ஸ்கேலா ஆட்டோமேட்டிக் மைலேஜ் 17.97kmplகடந்த செப்டம்பர் 2012 அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கேலா 3000 கார்கள் வரை விற்பனை ஆகியுள்ளது. ஸ்கேலா ஆட்டோமேட்டிக் விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எதிர்பார்க்கப்படும் விலை 8 முதல் 9.50 இலட்சம் இருக்கலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் மோஜோ பைக்கள் எப்பொழுது வரும் என பரவலாக பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் உள்ளதாக தெரிய வருகின்றது.வருகிற 2013-2014 நிதி ஆண்டில் வெளிவரலாம். தற்பொழுது என்ஜின் மற்றும் பாகங்கள் சோதனை ஓட்டத்தில் உள்ளது.மோஜோ பைக்மோஜா பைக் 300சிசி 4 ஸ்டோர்க் liquid க்கூலிங் என்ஜின் DOHC பொருத்தப்பட்டிருக்கும். எலெக்ட்ரானிக் ப்யூல் இன்செக்சன். 6 ஸ்பீடு க்யர் பாக்ஸ். வருகிற நிதி ஆண்டில் வெளிவரும் என மஹிந்திரா நிறுவனத்தின் அனுப் மாத்தூர் PTI செய்திளுக்கு கூறியுள்ளார்.
வர்த்தக வாகனங்கள் தயாரிப்பதில் முன்னிலையில் விளங்கும் டாடா மோட்டார்ஸ் டிரக்களுக்கு 4 வருட வாரண்டியை அறிவித்துள்ளது. இதன் மூலம் டாடா லாரிகளின் விற்பனை அதிகரிக்கும்.டாடா நிறுவனம் வர்த்தக வாகன உற்பத்தியில் 60 ஆண்டுகளை நெருங்கிவருகிறது. இந்திய முழுவதும் 15 இலட்சத்திற்க்கு மேற்பட்ட டாடா லாரிகள் பயணித்து வருகின்றது. வர்த்தக வாகனங்களின் சாலைகளில் ஏற்படும் ப்ரேக் டவுன் பொழுது உதவி செய்ய “டாடா அலர்ட்” என்ற சேவையை வழங்கி வருகிறது. வாகனங்ளின் பிரச்சனையை பொறுத்து விரைவாக சரி செய்து தரப்படுகிறது. மேலும் சற்று அதிகப்படியான பிரச்சனைகள் என்றால் சரக்கினை டாடா அலர்ட் மூலம் கொன்டு செல்லவும் வழி வகுக்கின்றது.டாடா அலர்ட் சேவைக்கான இலவச நம்பர் 1800-209-7979அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும்(Commercial Vehicles) 4 வருட வாரண்டினை அறிவித்துள்ளது. 4 வருட வாரண்டியானது டிரைவ்லைன்க்கு(என்ஜின், க்யர பாக்ஸ் மற்றும் ரியர் அக்ஸ்ல்(rear axle)) மட்டும். மற்றவைகளுக்கு 18 முதல் 24 மாதம் வாரண்டினை தருகிறது. இந்த சலுகை…