மாருதி ஆல்டோ 800 கார் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றதை அறிவோம். மாருதி ஆல்டோ 800 காரில் டீசல் வகை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாருதி ஆல்டோ 800 கார் இந்தியாவின் நடுத்தர மக்களின் வரமாகத்தான் திகழ்கின்றது. ஆல்டோ 800 காரில் டீசல் என்ஜினுடன் வருகிற 2013 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகுமாம்.இது டாடா நானோ டீசலுக்கு போட்டியாக வருமா என்பது தெரியவில்லை.மாருதி சுசுகி ஆல்டோ 800 காருக்கான டீசல் என்ஜின் ஜப்பான் நாட்டில் உள்ள சுசுகி ஆலையில் தயாராகி வருகின்றதாம்.மாருதி ஆல்டோ 800 கார் வாங்கலாமா
Author: MR.Durai
இந்த வருடத்தில் இந்தியளவில் எதிர்பார்க்கப்படும் 10 கார்களை பற்றி கானலாம். 40க்கு மேற்பட்ட கார்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிக எதிர்பார்க்கப்படும் கார்களை பார்க்கலாம்.1. ஃபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ்யூவிஇக்கோஸ்போர்ட் கார் இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் உள்ளதாக தெரிகிறது. 4 வண்ணங்களில் எதிர்பார்க்கப்படும் ஃபோர்டு இக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.இது 1.6 என்ஜின்க்கு உண்டான ஆற்றலை வழங்கும். டீசல் வகையில் 1.5 லிட்டர் ஃபீயஸ்டா என்ஜினிலும் கிடைக்கும். பெட்ரோல் மைலேஜ் 17kmpl(ARAI Certified).2. ஹோன்டா அமேஸ் சேடான்ஹோன்டா நிறுவனம் முதல் டீசல் காரை களமிறக்குகிறது. அமேஸ் சேடான் கார் ப்ரீயோ காரினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. டீசர் படத்தினை தன்னுடைய இணையத்தில் வெளியிட்டுள்ளதாக முன்பே பார்த்தோம்.3. டாடா நானோ டீசல்டாடா நானோ சிறப்பான வெற்றி பெறவில்லை என்ற போதிலும் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு நானோ டீசலாகவும் மற்றும் சிஎன்ஜி யிலும் வெளவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4. மாருதி சுசுகி ஏ-ஸ்டார்மாருதி சுசுகி ஏ-ஸ்டார் கார் சீனாவில் அறிமுகம்…
உலகின் முன்னனி சொகுசு கார் உற்பத்தியில் தனி முத்திரையுடன் விளங்கும் லம்போர்கினி நிறுவனம் 50வது ஆண்டினை கொண்டாடுகிறது. அது பற்றி சிறப்பு டீசரை லம்போர்கினி வெளியிட்டுள்ளது.லம்போர்கினி சூப்பர் கார் மாடல்கள் தயாரிப்பதில் சிறப்பான இடத்தில் உலகளவில் உள்ளது. 50 வது வருட கொண்டாடத்தை முன்னிட்டு சிறப்பு டீசரை வெளியிட்டுள்ளது.50வது ஆண்டினை கொண்டாடும் வகையில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளது.[youtube https://www.youtube.com/watch?v=NDposP406Pg]லம்போர்கினி நிறுவனம் சில நாட்களுக்கு முன் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விற்பனையான கார் லம்போர்கினி கலரோடா வாகனத்தின் உற்பத்தினை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. லம்போர்கினி வரலாறுலம்போர்கினி யூர்ஸ் எஸ்யூவி கார்
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிய பைக்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.முந்தைய பதிவில் மஹிந்திரா பேன்டேரா 110 பற்றி பார்த்தோம்.மஹிந்திரா பேன்டேரா 110 பைக்கின் அதே என்ஜின்தான் சேஞ்சுரா 110 பைக்கிற்க்கும் ஆனால் வடிவமைப்பில் சில மாற்றங்களை தந்துள்ளது. மேலும் கார்களில் உள்ளது போல கீ போப் ரீமோட் கன்ட்ரோல் உள்ளது. என்ஜின் இம்மொபைல்சர், எல்ஈடி லைட் போன்றவை இருக்கும்.மேலும் மஹிந்திரா சேஞ்சுரா 110(mahindra centuro 110) டேங்கின் அடிப்பகுதியில் சற்று ஸ்டைலான வளைவினை கொடுத்துள்ளது. என்ஜின் மற்றும் மைலேஜ் விவரங்கள்…மஹிந்திரா பேன்டேரா 110 பைக்கினை தொடர்ந்து இந்த பைக் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் என்ஜின் MCi-5, 110cc,சிங்கிள் சிலிண்டர் என்ஜின் ஆகும். சக்தி 8.6ps @ 7500rpm. 60km வேகத்தை 8.85 விநாடியில் நெருங்கும்.மைலேஜ் 79.4kmpl(ARAI Certified)
மஹிந்திரா நிறுவனம் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் தன் சேவையை தொடங்கியது. ஆனால் சிறப்பான வளர்ச்சினை அடையவில்லை. தற்பொழுது மீண்டும் மஹிந்திரா புதிய ஆரம்பத்தை தொடங்க உள்ளது.மஹிந்திரா பேண்டீரோ 110 பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றி கான்போம். மஹிந்திரா PANTERO 110 பைக் 100 முதல் 110சிசி பைக்களுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பல புதிய அம்சங்களுடன் பென்ட்ரோ வெளிவரும். இதன் என்ஜின் MCi-5, 110cc, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் ஆகும். சக்தி 8.6ps @ 7500rpm. 60km வேகத்தை 8.85 விநாடியில் நெருங்கும்..4 வகைகளில் பெனட்ரோ பைக் கிடைக்கும்.T1- Self Start, Alloys, Digital speedoT2- Self Start, Alloys, Analogue speedoT3- Kick Start, Alloys, Analogue speedoT4- Kick Start, Spoke wheels, Analogue speedoவிலை விபரங்கள் வெளியிடப்படவில்லை.. மைலேஜ் 79.4kmpl(ARAI Certified)
செவர்லே சேயல் சேடான் கார் வருகிற பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் வெளிவர உள்ளது. மாருதி டிசையர் , டாடா மான்ஸா போன்ற கார்களுக்கு சேயல் கார் சவாலாக விளங்கும்.செவர்லே சேயல் தன்னுடைய இணையத்தில் சில தினங்களுக்கு முன் டீசரினை வெளியிட்டுள்ளது.செவர்லே சேயல் டீசல் என்ஜின் 1.3 லிட்டர் ஸ்மார்ட்டெக் ட்ர்போ-சார்ஜ்டு ஆகும்.மேலும் பெட்ரோல் 1.2 லிட்டர் ஸ்மார்ட்டெக் பொருத்தப்பட்டதாகும்.விலை 6 முதல் 7 இலட்சம் வரை இருக்கலாம்