Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

வணக்கம் ஆட்டோமொபைல் தமிழன் வாசகர்களே….2012 ஆம் ஆண்டில் வெளிவந்த கார் மற்றும் பைக்கில் “தமிழ் வாசகர்களை கவர்ந்த வாகனம்” என்ற பெயரில் உங்களை கவர்ந்த வாகனங்களை தேர்ந்தேடுக்க சொல்லியிருந்தோம். அந்த வகையில் வாசகர்கள் வாக்களித்து வெற்றி பெற செய்த கார் மற்றும் பைக்கினை கான்போம்….2012 ஆம் ஆண்டின் அதிகப்படியான தமிழ் வாசகர்களை கவர்ந்த கார்1. மாருதி ஆல்டோ 800-26.19%2. ரெனால்ட் டஸ்ட்ர்-23.81%3. டோயோடா கேம்ரீ -14.29%2012 ஆம் ஆண்டின் அதிகப்படியான தமிழ் வாசகர்களை கவர்ந்த பைக்1. ஹோன்டா CBR150R-20.53%2. பஜாஜ் டிஸ்கவர் 125ST-15.79%3.ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500-10.53%

Read More

2013 ஆம் ஆண்டு முதல் மாதம் தொடங்கியே டீசல் விலை உயர்வதற்க்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாக தெரிகிறது. பெட்ரோல் விலை பற்றி எந்த விபரமும் இது வரை தெரியவில்லை ஆனாலும் உயரும்..இந்தியாவின் ஆயில் செயலாளர் சமீபத்தில் டீசல் விலை உயர்வு பற்றி சில கருத்துகளை வெளியிட்டுள்தாக தெரிகிறது. அவர் கூறிய கருத்தின் படி 2013 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இப்பொழுது இருக்கும் விலையை விட ரூபாய் 10 அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். அதாவது அடுத்த 10 மாதத்துக்குள் 20% விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.. மாதம் 1 ரூபாய் உயரலாம்..இதனால் டீசல் கார்களின் விற்பனை 2013யில் மந்தமாகலாம்.தகவல்;4traders

Read More

மாருதி கார் விற்பனையில் இந்தியளவில் முதன்மையாக விளங்கும் நிறுவனமாகும்.சுசுகி நிறுவனத்துடன் இனைந்த இயங்கும் மாருதி சிறிய ரக சுமையேற்றும் வாகனங்களை (LCV-Light Commercial vehicle)களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.LCV வாகனங்களில் டாடா ஏஸ்(சின்ன யானை) 50% மார்கெட்டினை தன்வசம் வைத்துள்ளது. மேலும் மஹிந்திரா மேஸ்மியோ மற்றும் லைலேன்ட் தோஸ்த் மற்றும் ப்யோகா வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றன.மாருதி சுசுகி நிறுவனமும் இந்த துறையில் களமிறங்கலாம் என சில செய்திகள் வெளியாகி உள்ளன. சுசுகி நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவில் புதிய பிக்-அப் டிரக்களை வளர்ச்சியடைய திட்டமிட்டுவருகிறது. மாருதி ஈக்கோ அல்லது ஆம்னி என்ற பெயரில் 800cc ஒரு சிலிண்டர் என்ஜினுடன் 2015 ஆம் ஆண்டிற்க்கு மேல் வெளிவரலாம்.source : economictimes

Read More

புதிய வரவு பைக்களை என்னால் முடிந்த வரை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றேன். இன்று சுசுகி ஹையபுஸா பைக்கினை பற்றி கான்போம். புதிய அப்கிரேடட் பைக்காக வெளிவரவுள்ள சுசூகி ஹயபுசா பல சிறப்புகளுடன் சிறப்பான ஸ்போர்ட்ஸ் பைக்காக வர உள்ளது.ஹயபுசா பைக்கள் CBU வகையில் வெளிவர உள்ளதால் விலை சற்று கூடுதலாகத்தான் இருக்கும். புதிய பைக் ABS ப்ரேக் உடன் வெளிவரவுள்ளதால் மிக சிறப்பான ப்ரேக்கிங் திறனை தரும். பழைய சுசுகி ஹயபுசாவில் இருந்த குறைகள் நீக்கப்பட்டுள்ளது.விலை 14 முதல் 15 இலட்சம் வரை இருக்கலாம்.காப்பி பேஸ்ட் செய்யும் நண்பர்களே தலைப்பினை மாற்றிவிட்டாவது காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்….

Read More

2013 ஆம் ஆண்டில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்த உள்ளது.1.சேவ்ரலே 1 % முதல் 3% வரை உயர்த்த உள்ளது.2. மாருதி சுசுகி நிறுவனம் இந்திய அளவில் கார் விற்பனையில் முதன்மையாக விளங்கும் நிறுவனமாகும். 14 கார்களை மாருதி விற்பனை செய்து வருகிறது அனைத்து மாடல்களுக்கும் ரூபாய் 20000 வரை உயர்த்த உள்ளது.3.ஆடி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தன்னுடைய சொகுசு கார்களின் விலையை வருகிற ஜனவரி 1 2013 முதல் உயர்த்தயுள்ளது. விலை 59,600 முதல் 3,69,000 வரை உயர்த்த உள்ளது. 4. நிசான் 3 சதவீத விலை உயர்வை அமல்படுத்த உள்ளது.5. ஹோன்டா நிறுவனம் 0.8% முதல் 1.65 % வரை உயர்த்த உள்ளது.6. மஹிந்திரா 2.5 % வரை உயர்த்த உள்ளது.7. டோய்டோ நிறுவனம் 1 முதல் 2 % வரை உயர்த்த உள்ளது.8.ரெனால்ட் 1.5 % வரை உயர்த்த உள்ளது.9. மெர்சீடஸ்-பென்ஸ் நிறுவனம் 1 முதல் 3 % வரை உயர்த்த உள்ளது.இந்த விலை உயர்வு 1-1-2013 முதல்…

Read More

2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்க்குளாகிய கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரும் ஒன்று. தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள இகோ ஸ்போர்ட் கார் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றது.எஸ்யூவி காராக வெளிவரவுள்ள ஈக்கோஸ்போர்ட் கார் வருகிற 2013 ஆகஸ்ட் மாதத்திற்க்கு முன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் அல்லது மே மாதத்தில் முன்பதிவு தொடங்கலாம். 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான ஆற்றலை தரும்.கூடுதலான மைலேஜ் கிடைக்கும். ஃபியஸ்ட்டாவில் பொருத்தப்பட்ட அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ஈக்கோஸ்போர்ட்டிலும் பொருத்தப்படும்.

Read More