டாடா மோட்டார்சின் முதல் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்ற ஹாரியர்.EV எஸ்யூவி மாடலை கேரளாவில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் உயரமான ஆனைமுடி மலை மீது ஏறி தனது ஆஃப் ரோடு திறனை நிரூபித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமுடி மலையின் உயரம் சுமார் 2, 695 மீ (8, 842 அடி) ஆக உள்ள நிலையில், இதன் மீது 34 டிகிரி கோணத்தில் செங்குத்தாக ஹாரியர் மின்சார காரை ஏற்றி டாடா புதிய சாதனையை படைத்துள்ளது. 500Nm வரை டார்க் வெளிப்படுத்தக்கூடிய QWD (Quad Wheel Drive) இரட்டை மோட்டார் பெற்ற ஹாரியர்.இவி மாடலின் பேட்டரி மற்றும் நுட்பவிபரங்கள் என அனைத்தும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் டாடா தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் சில முக்கிய தகவல்களும் கிடைத்துள்ளது. 90% சார்ஜிங் உள்ள சமயத்தில் 565 கிமீ பயணிக்கலாம்…
Author: MR.Durai
இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர்களில் ஒன்றான டிவிஎஸ் ஜூபிடர் 125 மாடலில் கூடுதலாக DT SXC என்ற வேரியண்டில் இரட்டை வண்ண கலவையை பெற்று ஐவரி பழுப்பு மற்றும் ஐவரி கிரே என இரு நிறங்களுடன் ரூ.97,516 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் தொடர்ந்து 124.8cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 8.1hp பவர் மற்றும் 11.1 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக அசிஸ்ட் இல்லாத மாடலை விட சுமார் 0.6nm டார்க் கூடுதலாக வெளிப்படுத்துவதுடன் iGO Assist நுட்பத்தை கொண்டிருப்பதனால் கூடுதல் மைலேஜ் வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. Drum Alloy – ₹ 90 896 Disc -₹ 95 996 DT SXC – ₹ 97 516 SmartXonnect – ₹ 99 985 (எக்ஸ்-ஷோரூம்) முழுமையான எல்சிடி கிளஸ்ட்டரை பெறுகின்ற இந்த ஸ்கூட்டரில் SmartXonnect மூலம், ப்ளூடூத் வாயிலாக இணைத்தால் அழைப்பு மற்றும்…
நிசான் இந்தியாவின் மேக்னைட் சிஎன்ஜி அறிமுகத்தின் போது பேசிய நிசானின் எம்.டி. சவுரப் வத்சா பேசுகையில் எம்பிவி மாடல் 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களிலும், டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி 2026 மத்தியிலும், 7 இருக்கை எஸ்யூவி 2027 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என உறுதிப்படுத்தியுள்ளார். ட்ரைபர் அடிப்படையிலான நிசான் எம்பிவி சந்தையில் விற்பனையில் உள்ள பட்ஜெட் விலை எம்பிவி ரெனால்ட் ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி காரை தயாரித்து வருகின்ற நிசான் இந்த மாடலை விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. பல்வேறு டிசைன் மாற்றங்களை பெற்று ட்ரைபரில் உள்ள அதே 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ள நிலையில், அதிகபட்சமாக 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக டர்போ பெட்ரோல் ஆப்ஷனும்…
சுசூகி இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக வரவிருக்கும் இ அக்சஸ் ஸ்கூட்டரின் விலை எதிர்பார்ப்புகள், பேட்டரி, ரேஞ்ச், நிறங்கள் மற்றும் சிறப்புகள் என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். Suzuki e Access விற்பனையில் உள்ள ICE ஆக்சஸ் ஸ்கூட்டரை விட மாறுபட்ட டிசைன் அமைப்பினை பெற்றுள்ள அக்சஸ் இ-ஸ்கூட்டரில் ஒற்றை 3.072 kWH LFP பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 3.072Kwh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 95 கிமீ பயணிக்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 71 கிமீ கொண்டுள்ளது. , eco, Ride A, மற்றும் Ride B என மூன்று ரைடிங் மோடுகளுடன் ரிவர்ஸ் மோட் பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 70 கிமீ வரை பயணிக்கலாம். இதன் சார்ஜிங் நேரம் 650Watts சார்ஜர் மூலம் 0-80 % பெற 4.30 மணி நேரமும் விரைவு சார்ஜர் மூலம் 0-80 % பெற…
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபேரிங் ரக ஸ்டைல் பெற்ற கேடிஎம் RC200 மாடலில் 2025 ஆம் ஆண்டில் TFT கிளஸ்ட்டருடன் கூடுதலாக மேட் கிரே நிறத்தை பெற்றதாக விற்பனைக்கு ரூ.2,54,028 எக்ஸ்-ஷோரூம் விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, அடிப்படையான டிசைன் உட்பட எஞ்சின் சார்ந்தவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்துள்ளது. ஆர்சி200 மோட்டார்சைக்கிளில் தொடர்ந்து 25 hp பவரை வெளிப்படுத்தும் 199cc எஞ்சின் பொருத்தப்பட்டு 19.2 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஆர்சி200 பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று இரட்டை சேனல் ABS பெற்றதாக கிடைக்கின்றது. கொடுக்கப்பட்டுள்ள புதிய TFT கிளஸ்ட்டர் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறுவதுடன் தெளிவாக பார்வைக்கு கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த மாடலுக்கு போட்டியாக பல்சர்…
இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2025 ஆம் ஆண்டில் இறுதி மாதங்களில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தில் இந்நிறுவனம் முதலீட்டை மேற்கொண்டு இருந்த நிலையில் அந்த முதலீட்டின் அடிப்படையில் தான் தற்பொழுது புதிய ஸ்கூட்டர் ஆனது அந்நிறுவனத்தின் ஸ்கூட்டரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ரிவர் நிறுவன இண்டி மின்சார ஸ்கூட்டரின் அடிப்படையிலான மாடலை தயாரிக்கின்ற யமஹா மாடலின் நுட்பங்கள் அனைத்தும் இண்டி மாடலில் இருந்து பெற்றிருக்கலாம். IP67 மதிப்பிடப்பட்ட 4kwh லித்தியம் ஐயன் பேட்டரி பேக்கை கொண்டுள்ள இந்த மாடலின் உண்மையான ரேஞ்ச் 120 கிமீ வரை வழங்கும் என கூறப்படுகின்றது. இண்டி ஸ்கூட்டரில் நடுப்பகுதியில் பொருத்தப்பட்ட மோட்டார் 6.7Kw பவர் மற்றும் 26Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 3.9 விநாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச…