பஜாஜ் நிறுவனம் இந்தியளவில் இடத்தில் உள்ள நிறுவனமாகும். விரைவில் பல்சர் 375cc திறன் கொண்ட பைக்கினை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.கேடிஎம் பைக்கில் 390 வகை விரைவில் வெளியாகும் என முன்பே குறிப்பிட்டிருந்தேன். கேடிஎம் டூக் 390 பைக் 375 cc என்ஜின் பொருத்தப்பட்டதாகும்.பஜாஜ் பல்சர் பல மாறுதல்களுடன் வெளிவரலாம். அதாவது ஒரு சிலிண்டர் கொண்ட என்ஜினாகவும். 3 ஸ்பார்க் ப்ளக் பொருத்தப்பட்டிருக்கலாம்.கேடிஎம் டூக் 390 பைக் வருகிற வருடத்தின் தொடக்கத்தில் வெளிவரலாம். பஜாஜ் பல்சர் 375 2013 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.Technical Specifications Bajaj Pulsar 375 (இருக்கலாம்)Engine – 4 stroke water-cooled single cylinderEngine capacity – 373.2ccTorque – 33Nm at 7000rpm(est.)Power – 42HP at 9500rpm(est.)Transmission – 6-speedWeight – 142KgClutch – Hydraulic operatedFuel system – Electronic Fuel Injectionவிலை 1.75 இலட்சம் எதிர்பார்க்கப்படுகிறதுநன்றி:மோட்டராய்ட்ஸ்
Author: MR.Durai
ஆட்டோமொபைல் தமிழன் செய்திகள்……….!1. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரைடர் மெனியா 2012 கடந்த நவம்பர் 25 கோவாவில் நிறைவுற்றது. இதில் 1600 நபர்கள் பங்குபெற்றனர்.2. டோயோடா நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டின் கொண்டாட்டத்தில் திளைத்து இருக்கின்றது. கடந்த 1937 ஆம் ஆண்டில் கிச்சிரோ டோயோடா என்பவரால் தொடங்கப்பட்டது.3. ரேனால்ட் நிறுவனம் இந்தியா பிரிவு டஸ்டர் SUV கார்களை லண்டன் மற்றும் ஐயர்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.4.டிவிஸ் நிறுவனம் 180CC பைக்களை வருகிற 2014 டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.5. மஹிந்திரா நிறுவனம் XUV 500 கார் உரிமையாளர்களுக்கு என பதிய அப்பளிக்கேஷனை உருவாக்கியுள்ளது. பூளு சென்ஸ்https://www.mahindraxuv500.com/product/mobile-downloads.htm
நம்ம கம்பீரத்திற்க்கு கம்பீரம் தரும் பைக்களில் ராயல் என்பீல்டு தனி முத்திரையுடன் விளங்குவதனை அறிவோம். ராயல் என்பீல்டு 500cc தன்டர்பேர்டு சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்பீல்டு 2013 மத்தியில் கஃபே ரேசர் பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளது.வருகிற டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் லாங் பீச்சில் நடக்கவிருக்கும் மோட்டார்சைக்கிள் ஸோவில் பார்வைக்கு வைக்க உள்ளது. 2012 டில்லி ஆட்டோ ஸோவில் ப்ரோட்டோடைப்பினை பார்வைக்கு வைத்தது குறிப்பிடத்தக்கது.புதிய கஃபே ரேசர் பைக் எடை குறைவாகவும் விரைவாகவும் பயணம் செய்யும் வகையில் இருக்கும் என என்பீல்டு உறுதியளித்துள்ளது. பாரம்பரிய தோற்றத்தை நிச்சியமாக நினைவுப்படுத்தும். அமெரிக்காவில் உள்ள ராயல் என்பீல்டு டீலர்கள் சுருக்கமாக என்பீல்டு பைக்கினை “மெட்ராஸ் லேஜன்ட்ஸ்” என குறிப்பிடுவார்களாம்.553CC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. UCE எரிபொருள் தெளிப்பான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 25hp குதிரை திறன் டார்க் 38NM ஆகும்.எலெக்ட்ரிக் ஸ்டார்ட்ர் பொருத்தப்பட்டள்ளது. மேலும் முதன்முதலாக முன்புற மட்கார்டு ப்ளாஸ்டிக்கியில் பொருத்தியுள்ளனர். ஆலாய்…
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நிமிடத்திற்க்கு நிமிடம் வளர்ந்து வருகிறது. இந்நிலையில பல வாகன நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கால் தடங்களை பதிக்க முயன்று வருகிறது.ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தன்னுடைய க்ருஸர் பைக்களை இந்தியாவில் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது. ஆனாலும் விலை கூடுதலாக இருப்பதனால் விற்பனை மந்தமாக இருக்கின்றது.இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அசெம்பிலிங் யூனிட் ஹரியானா மாநிலத்தின் பவால் பகுதியில் CKD(Complete knock down) ஆலை உள்ளது.அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்க்கு இரண்டு அசெம்பிலிங் யூனிட் உள்ளது. ப்ரேசில் மற்றும் இந்தியா ஆகும்.இந்தியாவிற்க்கு மிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கென தனியான என்ஜின்களை உருவாக்க களமிறங்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் பைக்கள் அதிகப்பட்சமாக 1000cc களில்தான் கிடைக்கும். இதனால் விலையும் கூடுதல்தான்.இவற்றிற்க்கு பதிலாக 400-500cc என்ஜின்களை உருவாக்க உள்ளனர். அவ்வாறு உருவாக்கினால் 3.5 லட்சத்திற்க்குள் இருக்கும்.இதனால் விற்பனை அதிகரிக்கும் என கருதுகின்றனர்.2014 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் ஆட்டோ ஸோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.…
ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் உலக அளவில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதன்மையான நிறுவனம் ஆகும். கடந்த வியாழன் அன்று ஹீரோ நிறுவனம் வெளியிட்ட விற்பனை புள்ளிவிவரம் ஹீரோ மோட்டாகார்ப் (HMCL-Hero Motocorp Ltd)வளர்ச்சினை உறுதிசெய்துள்ளது.கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 11 இலட்சம் ஆகும்.இது கடந்த வருட விற்பனையை விட 7 சதவீதம் அதிகமாகும்.ஹீரோ நிறுவனம் வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. சில்லறை விற்பனையில் ஹீரோ ஸ்ப்ளன்டர், பேஷன் மற்றும் புதிய அறிமுகம் ஆன மேஸ்ட்ரோ மற்றும் இக்னிடர் வாகனங்களும் மிக அதிக விற்பனை அடைந்த வாகனங்களாகும்.தற்பொழுதைய இரு சக்கர நிறுவனங்களின் செயல் திறன் மிகப் பெரிய நம்பிக்கையை அளித்து வருகிறது என ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின் மூத்த விற்பனை பிரிவு அதிகாரி அனில் துவா கூறியுள்ளார்
இன்றைய நவீன உலகில் சாலை விதிகளை இந்தியளவில் 90 சதவீதத்ற்க்கு அதிகமான சாரதிகளும் பாதசாரிகளும் சரியான முறையில் பயன்படுத்த தவறியே வருகின்றனர். முறையாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்க்கு நாளுக்குநாள் நாம் தள்ளப்பட்டாலும் அதனை புறக்கணிக்கவே குறியாக இருக்கின்றோம்.1. பாதசாரிகள் கவனத்திற்க்கு;பாதசாரிகள் சரியான இடங்களில் சாலைகளை கடப்பதில் இன்றுவரை தடுமாற்றத்திலே இருக்கின்றனர். எந்த குறுக்கு வழி இலகுவானது என தேடாதீர்கள். சரியான ஜிப்ரா க்ராசிங் அல்லது சுரங்க வழி அல்லது மேம்பாலத்தை பயன்படுத்துங்கள்.எக்காரணம் கொண்டும் வளைவுகளில் சாலைகளை கடக்காதீர்கள்.இரவுநேரங்களில் பாதசாரிகள் முடிந்த வரை ஒளிரும் உடைகளை பயன்படுத்துங்கள்.எக்காரணம் கொண்டும் சாலைகளில் கூட்டமாக பயணிக்காதீர்.சாலைகளில் விளையாடுவதை முற்றிலும் தவருங்கள்.விளையாட்டு என்றுமே வினைதான்.பாதசாரிகள் எப்பொழுதும் சரியான நடைபாதையை பயன்படுத்தவும்.2. பொது போக்குவரத்து பயனாளர்களுக்குபொது போக்குவரத்தில் மிகப் பெரிய இடைஞ்சலே காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் இட நெருக்கடிதான். இவற்றை சமாளிக்க சில கூடுதல் வாகனங்களை இயக்கினாலும் நன்றாகத்தான இருக்கும்.முடிந்தவரை படிகளில் பயணம் செய்வதை கண்டிப்பாக…