Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியாவின் குறைந்த விலை 125சிசி ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற டெஸ்டினி பிரைம் மாடலில் புதிய மாசு விதிகளுக்கு உட்பட்ட OBD-2B மேம்பாட்டினை பெற்று ரூ.2,700 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.81,448 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியுள்ளது. புதிய டெஸ்டினி பிரைமில் தொடர்ந்து OBD-2B ஆதரவுடன்  9 hp பவரினை 7000 rpm-ல் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 rpm-ல் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. தொடர்ந்து இருபக்க டயரிலும் டிரம் பிரேக் இடம்பெற்று 90/90-10 ட்யூப்லெஸ் டயர் இரு பக்கத்திலும் வழங்கப்பட்டு டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஒற்றை ஸ்பிரிங் காயில் சஸ்பென்ஷனுடன் விளங்குகின்றது. மற்றபடி, நிறங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் வெள்ளை, சிவப்பு, நீலம், மற்றும் கருப்பு என 4 நிறங்களுடன் அனலாக் கிளஸ்ட்டரை பெற்றதாக விளங்குகின்றது. DESTINI PRIME ₹ 78,448 DESTINI PRIME OBD2B ₹ 81,148 (எக்ஸ்-ஷோரூம்)

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 160cc சந்தையில் கிடைக்கின்ற எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் என இரண்டு பைக்கிலும் OBD-2B மேம்பாட்டை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, எவ்விதமான வசதிகள், நிறங்களல் எந்த மாற்றமும் இல்லை. 4 வால்வுகளை பெற்ற பெர்ஃபாமென்ஸ் ரக எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கில் 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இரண்டு வால்வுகளை பெற்ற எக்ஸ்ட்ரீம் 160R 2V மாடலில்  163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 15hp பவர் மற்றும் 6500rpm-ல் 14 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இரு மாடல்களிலும் பொதுவாக பல்வேறு டிசைன் அம்சங்களை பகிர்ந்து கொண்டாலும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மாடல் ஸ்பிளிட் சீட், சிங்கிள் சீட் ஆப்ஷனுடன் பல்வேறு நிறங்களை…

Read More

ஐஷரின் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அடுத்த 650சிசி மாடலாக புல்லட் 650 ட்வீன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஏற்கனவே கிளாசிக் 650 ட்வீன் உட்பட 6 வகைகளில் 650சிசி மாடல்கள் கிடைக்கின்றன. உலகில் மிக நீண்ட நாட்களாக உற்பத்தி செய்யப்படுகின்ற மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றுள்ள புல்லட் மாடலில், கூடுதலாக வரவுள்ள புதிய 650சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்ற சக்திவாய்ந்த மாடலாக உருவெடுக்க உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட படங்கள் வெளியாகிருந்தது. விற்பனையில் உள்ள புல்லட் 350 பைக்கிலிருந்து பெறப்பட்ட டியர்டிராப் பெட்ரோல் டேங்க் உட்பட வட்ட வடிவ ஹெட்லைட் வழக்கமான ரெட்ரோ ஹாலஜென் பல்ப் பெறக்கூடுமா அல்லது எல்இடி ஹெட்லைட் பெறுமா என உறுதியாக தெரியவில்லை. செமி டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டருடன் டிரிப்பர் நேவிகேஷன் வசதி, புல்லட் பைக்குகளுக்கு உரித்தான ஸ்டைலிங் நிறங்களுடன் 648cc பேரல் ட்வின் எஞ்சின்…

Read More

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ள RE HunterHood விழாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள 2025 ஆம் ஆண்டிற்கான ஹண்டர் 350 பைக்கில் புதிய எல்இடி விளக்குகள், நிறங்களுடன் சஸ்பென்ஷன் அமைப்பில் மாற்றத்தை பெற்றதாக வரவுள்ளதை சமீபத்தில் வெளியான படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹண்டர் 350 விற்பனை எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக ரூ.1.50 லட்சத்தில் துவங்குவது மற்றும் இளைய தலைமுறையினர் விரும்பும் வடிவமைப்பு மிக முக்கிய காரணமாக உள்ளது. 2025 ஹண்டரில் மற்ற என்ஃபீல்டு பைக்குகளில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லைட், புதிய டெயில்லைட் பெற்று பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு விற்பனையில் உள்ள மாடலை விட மேம்பட்டதாக இருக்கும் என்பதனால் ரைடிங் அனுபவம் மேம்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றபடி, புதுப்பிக்கப்பட்ட நிறங்கள், வீல் ஸ்டிரீப், லோகோ உள்ளிட்ட இடங்களில் சில…

Read More

ஹீரோவின் பிரசத்தி பெற்ற சூப்பர் ஸ்ப்ளெண்டர் Xtec 125சிசி பைக்கில் புதிய மாசு விதிமுறைகளுக்கு உட்பட்ட OBD-2B அப்டேட் பெற்று சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மேம்பாடு கொண்டு ரூ.87,450 முதல் ரூ.91,450 வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணய் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, OBD-2B மற்றும் E20 ஆதரவினை பெற்ற 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸ் உள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பருடன், பின்பக்க டயரில் வழக்கமான டிரம் பிரேக்குடன், முன்பக்க டயரில் டிஸ்க் அல்லது டிரம் பிரேக் ஆப்ஷனை கொண்டதாக அமைந்துள்ள சூப்பர் ஸ்பெளண்டர் மைலேஜ் லிட்டருக்கு 69 கிமீ என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது. SUPER SPLENDOR XTEC DISC BRAKE OBD2B ₹ 91,450 SUPER SPLENDOR XTEC DRUM…

Read More

டிவிஎஸ் மோட்டாரின் அதிக மைலேஜ் வழங்குகின்ற குறைந்த விலை மோட்டார்க்கிளான ஸ்போர்ட் 110 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் புதுப்பிக்கப்பட்ட பாடி கிரிபிக்ஸூடன், நிறங்கள் மற்றும் OBD-2B ஆதரவு பெற்ற எஞ்சின் என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கலாம். ஸ்போர்ட் 110 பைக்கில் தொடர்ந்து 109.7 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட்டின் பவர் அதிகபட்சமாக 8.17bhp மற்றும் 8.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. மிக சிறப்பான மைலேஜ் வழங்குகின்ற ஸ்போர்ட்டிற்கு போட்டியாக ஹீரோ HF டீலக்ஸ், ஹோண்டா ஷைன் 100 உள்ளிட்ட மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றது. புதிய ஸ்போர்டில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டெட் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பருடன் இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் முன்புறத்தில் 130 மிமீ மற்றும் பின்புறத்தில் 110மிமீ வழங்கப்பட்டு சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் வரவுள்ள 2025 டிவிஎஸ் ஸ்போர்ட் 110…

Read More