ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்காக CB350 H’Ness மாடல் விலை ரூ. 2,48,654 முதல் ரூ. 2,56,087 வரை அமைந்துள்ள நிலையில், சிபி 350 ஹைனெஸ் மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Honda CB350 H’Ness ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 மாடலுக்கு நேரடியான சவாலினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சிபி 350 ஹைனெஸ் பைக்கில் OBD-2B மேம்பாடு மற்றும் E20 ஆதரவினை பெற்ற 348.36cc லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 5,500rpm-ல் 20.78hp பவர் மற்றும் 3000rpm-ல் 30 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன் அசிஸ்ட் உடன் கூடிய சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. லாங் ரைடிங் சிறப்பான ரெட்ரோ தோற்ற பொலிவினை வெளிப்படுத்துகின்ற சிபி 350 ஹைனெசின் மைலேஜ் லிட்டருக்கு 32 கிமீ வரை வெளிப்படுத்துகின்றது. ஹாஃப் டூயூப்லெஸ்…
Author: MR.Durai
ஹீரோவின் புதிய டெஸ்டினி 125 மற்றும் சுசூகியின் 2025 ஆக்சஸ் 125 என இரு மாடல்களும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் பல்வேறு வசதிகளுடன் மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எஞ்சின் உட்பட மற்ற அம்சங்களை பார்க்கும் முன் ஹீரோ டெஸ்டினி 125 மிக நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் மிக அழகான தோற்றத்தை வெளிப்படுத்தும் நிறங்கள், அதிக மைலேஜ் தரும் எஞ்சின் என பலவற்றை பெற்றுள்ளது. ஆக்சஸ் 125 பற்றி சொல்லவே தேவையில்லை நிருபிக்கப்பட்ட சுசூகியின் எஞ்சின் தரம், அதிகப்படியான வாடிக்கையாளர்களிடம் பெற்ற நன்மதிப்பு, வசதிகள் மற்றும் 125சிசி சந்தையின் கிங் ஸ்கூட்டராக உள்ளது. 125cc ஸ்கூட்டர் சந்தையில் உள்ள மற்ற போட்டியாளர்களான கூடுதல் பூட்ஸ்பேஸ் பெற்ற ஜூபிடர் 125, அதிக மைலேஜ் தரும் யமஹா ஃபேசினோ 125, ஹோண்டாவின் தரத்தை சொல்லும் ஆக்டிவா 125 போன்றவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்ற ஆக்செஸ் 125 மற்றும் டெஸ்டினி…
2024-2025 ஆம் நிதியாண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் சிறந்த 10 கார்களில் மாருதி சுசூகி வேகன் ஆர் முதலிடத்தில் 1,98,451 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டாடா மோட்டார்சின் பஞ்ச் எஸ்யூவி 1,96,572 ஆக பதிவு செய்துள்ளது. குறிப்பாக விற்பனை செய்யப்பட்டுள்ள மாடல்களில் டாப் 10ல் 4 மாடல்கள் எஸ்யூவி ஆக உள்ளன. அவை பஞ்ச், கிரெட்டா, பிரெஸ்ஸா மற்றும் ஸ்கார்பியோ உள்ளன. டாப் 10 இடங்களில் 6 இடங்களை மாருதி வசம் உள்ளது. Top 10 Selling Cars FY24-25 Top 10 Cars FY 2024-2025 Units 1. மாருதி சுசூகி வேகன் ஆர் 1,98,451 2. டாடா பஞ்ச் 1,96,572 3. ஹூண்டாய் க்ரெட்டா 1,94,871 4. மாருதி சுசூகி எர்டிகா 1,90,974 5. மாருதி சுசூகி பிரெஸ்ஸா 1,89,163 6. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 1,79,641 7.…
ஸ்கோடா ஆட்டோவின் புதிய கைலாக் காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு அமோக ஆதரவினை பெற்றுள்ள நிலையில் 15,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை மே 2025 இறுதிக்குள் டெலிவரி வழங்க திட்டமிட்டுள்ளது. கைலாக் ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரையிலான அறிமுக சலுகை விலையை ஏப்ரல் 2025 வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம் மேலும் முன்பதிவு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை கடந்துள்ள ஸ்கோடா வரலாற்றில் மார்ச் 2025 மாதந்திர விற்பனை எண்ணிக்கை முதன்முறையாக 7,422 யூனிட்டுகளை டெலிவரி என்ற அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. MQB A0 பிளாட்ஃபாரத்தில் பெறப்பட்டுள்ள MQB 27 பிளாட்ஃபாரதில் வடிவமைக்கப்பட்டுள்ள கைலாக்கில் 15bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. பாரத் NCAP டெஸ்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ள இந்த…
இந்திய சந்தையில் ஏற்கனவே 2025 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 390 என்டூரோ ஆர் மாடலுக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் சமூக ஊடங்களில் கேடிஎம் டீசரை வெளியிட்டுள்ளதால் நடப்பு ஏப்ரல் மாத மத்தியில் விற்பனைக்கு ரூ.3.50 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. KTM 390 Enduro R 390 அட்வென்ச்சர் மாடலை விட மிகவும் அதிகமான ஆஃப் ரோடு சாகசங்களை மேற்கொள்ளுபவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள என்டூரோ ரக மாடலிலும் 399சிசி LC4c எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்றது. இந்த டூயல் ஸ்போர்ட் பைக் மாடலில் 90/90-21 மற்றும் 140/80-18 ட்யூப் ஸ்போக் வீல் டயர் கொடுக்கப்பட்டு முன்புறத்தில் உள்ள 21 அங்குல வீல் உடன் 230 மிமீ பயணிக்கின்ற முன்புற அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று 285 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 18 அங்குல வீல் உடன் மோனோஷாக் அப்சார்பரை பெற்று 240 மிமீ டிஸ்க் கொண்டுள்ளது. 272மிமீ கிரவுண்ட்…
இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பல்சர் வரிசை பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 2 கோடி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் ரூ.1,184 முதல் ரூ.7,379 வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு சந்தையில் நுழைந்த பல்சர் பைக் தற்பொழுது பல்சர் கிளாசிக், என் சீரிஸ், என்எஸ் சீரிஸ், ஆர்எஸ்200 மற்றும் 220F என விரிவடைந்து மொத்தமாக 12 மாடல்கள் விற்பனையில் உள்ளது. இந்தியாவில் பல்சர் என்ற பெயரிலும் சில நாடுகளில் டோமினார் என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகின்றது. குறிப்பாக பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்யும் ஐம்பது நாடுகளில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பல்சர் சந்தையில் முன்னணி மாடலாக விளங்குவதாக இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. முதல் 1 கோடி இலக்கை எட்ட 17 வருடங்கள் எடுத்துக் கொண்ட பல்சர் அடுத்த 1 கோடி இலக்கை வெறும் 6 ஆண்டுகளில் எட்டியுள்ளது.…