பிரபலமான நடுத்தர மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவன க்ரூஸர் ரக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 2025 Royal Enfield Super Meteor 650 மிகவும் சக்திவாயந்த க்ரூஸர் ரக மாடலாக விளங்குகின்ற 650சிசி சூப்பர் மீட்டியோரில் பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்று அதிகபட்சமாக அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,650rpm-ல் 52.3Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் டீயூப்லெர் சேஸிஸ் பெற்று 740மிமீ குறைந்த இருக்கை உயரம் கொண்ட ரிலாக்ஸான ரைடிங் அனுபவத்தை வழங்கும் சூப்பர் மீட்டியோர் 650ல் பைக்கில் 120 மிமீ பயணிக்கின்ற அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 101 மிமீ டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது. அலாய் வீல் உடன் ட்யூப்லெஸ் டயருடன் முன்புறம் 100/90 -…
Author: MR.Durai
துவக்கநிலை 125சிசி சந்தையில் கிடைக்கின்ற மேக்ஸி ஸ்டைல் சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் மாடலின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 2025 Suzuki Burgman Street 125 மேக்ஸி ஸ்டைலை பெற்றதாக கிடைக்கின்ற பர்க்மன் ஸ்டீரிட் 125ல் OBD-2B ஆதரவு கொண்ட புதிய ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 124cc இன்ஜின் 6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.6 hp பவர், 5,500 rpm-ல் 10Nm டார்க் வெளிப்படுத்தம் நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் ரைட் கனெக்ட் எடிசன் என இரு மாடல்களை பெற்ற பர்க்மேனில் டிஜிட்டல் கன்சோல் பெற்றிருந்தாலும், ரைட் கனெக்ட் எடிசனில் கூடுதலாக ப்ளூடுத் ஆதரவினை பெற்று டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஸ்பீடு அலர்ட், இனகம்மிங் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் அலர்ட் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும். யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுடன் எல்இடி ஹெட்லைட் உடன் 190 மிமீ டிஸ்க்…
சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற 125சிசி அவெனிஸ் ஸ்கூட்டர் மாடலின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 2025 Suzuki Avenis 125 ஸ்போர்ட்டிவான ஸ்டைலை பெற்றுள்ள புதிய அவெனிஸ் 125 ஸ்கூட்டரில் OBD-2B ஆதரவு கொண்ட புதிய ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 124cc இன்ஜின் 6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.7 hp பவர், 5,500 rpm-ல் 10.2 Nm டார்க் வெளிப்படுத்தம் நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. இந்த மாடலில் ஸ்டாண்டர்டு, ஸ்பெஷல் எடிசன் மற்றும் ரேஸ் எடிசன் என மூன்று விதமாக கிடைக்கின்ற நிலையில் ஸ்பெஷல் எடிசன் மாடலில் பிரத்தியேகமான மெட்டாலிக் மேட் பிளாக் நெ.2/ மெட்டாலிக் மேட் சில்வர் டைட்டானியம் HYR என்ற நிறத்தை பெற்று ரேஸ் எடிசன் போல இந்த மாடலிலும் ரைட் கனெக்ட் ஆப் வாயிலாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இனகம்மிங் அழைப்பு, எஸ்எம்எஸ்…
ஹீரோவின் விடா எலக்ட்ரிக் பிராண்டில் வரவிருக்கும் புதிய ஜீ எலக்ட்ரிக் கூட்டல் மாடல் இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளதால் அடுத்த சில மாதங்களுக்குள் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. EICMA 2024ல் Z என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்ட மாடல் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. குறிப்பாக ஐரோப்பாவில் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மாடல் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது. தற்பொழுது சந்தையில் உள்ள விடா வி2 ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி உட்பட அடிப்படையான டிஎஃப்டி கிளஸ்ட்டர் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. எனவே, ஜீ ஸ்கூட்டரில் 2.2Kwh, 3.44Kwh, 3.94kwh மற்றும் டாப் வேரியண்டில் 4.44Kwh என நான்கு விதமான ஆப்ஷனை கொண்டு விடா ஜீ ரேஞ்ச் அனேகமாக 100 கிமீ முதல் 200 கிமீ வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக்…
2025 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் ஆட்டோவின் டோமினார் 400 பைக் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்த பைக்கில் இடம்பெறப் போகின்ற கிளஸ்டர் அமைப்பானது ஏற்கனவே பல்சர் NS400 இஸட் மாடலில் இருப்பதைப் போல அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இதன் மூலம் பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஸ்மார்ட்போன் வாயிலாக இணைக்கும் போது பெற முடியும். குறிப்பாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் உள்ளிட்டவற்றைப் பெறலாம். மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் வசதிகளில் பெரிதாக எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. டாமினார் 400 பைக்கில் தொடர்ந்து 373.27cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பிஎஸ்6 முறையில் அதிகபட்சமாக 40hp பவர், 35 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது. டோமினாரின் 400 மாடலில் 43mm விட்டம் பெற்ற…
கிளாசிக் 350 மாடலை தொடர்ந்து அதனை தழுவியதாக வடிவமைக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக்கின் ஆரம்ப விலை ரூ. 3.37 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Royal Enfield Classic 650 price list Bruntingthorpe Blue, Vallam Red – ₹ 3,37,000 Teal – ₹ 3,41,000 Black Chrome – ₹ 3,50,000 (EX-showroom) இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆர்இ 650 வரிசையில் உள்ள 648சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சினை பகிர்ந்து கொண்டுள்ள கிளாஸிக் 650ல் 47hp பவரை 7250rpm-லும் 5,650rpm-ல் 52.3Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு வழக்கமான இரட்டை புகைப்போக்கி உள்ளது. 43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் வழக்கமான ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது. ஸ்போக்டூ வீல் பெற்ற மாடலில் ட்யூப் டயருடன் முன்புறம் 100/90 – 19 57P…