பிரசத்தி பெற்ற சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் கொண்ட அவெனிஸ் மாடலில் OBD-2B மேம்பாட்டை பெற்ற எஞ்சினுடன் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிசனில் மெட்டாலிக் மேட் கருப்பு நெ.2 / மேட் டைட்டானியம் சில்வர் நிறத்தை பெற்றதாக வந்துள்ளது. 2025 Suzuki Avenis Price list Avenis STD Edition – ₹ 97,435 Avenis Race Edition – ₹ 98,237 Special Edition – ₹ 98,237 (Ex-showroom) மற்றபடி, புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டு வழக்கமான அனைத்து வசதிகளை கொண்டுள்ள ஸ்கூட்டரில் தொடர்ந்து சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்துடன் கூடிய 124cc எஞ்சின் 6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.7 hp பவர், 5,500 rpm-ல் 10 Nm டார்க் வழங்குகின்ற நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. அவெனிஸில் ஸ்பெஷல் எடிசன் உட்பட 4 விதமான நிறங்களாக ஸ்பார்க்கிள் கருப்பு / பேரல் மீரா ரெட், சாம்பியன்…
Author: MR.Durai
சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மேக்ஸி ஸ்டைல் பர்க்மேன் ஸ்டீரிட் மற்றும் பர்க்மேன் ஸ்டீரிட் EX என இரு மாடல்களிலும் OBD-2B மேம்பாட்டை பெற்று மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ நிறத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025 Suzuki Burgman Street Series Price list Burgman Street Standard Edition – ₹ 1,00,035 Burgman Street Ride Connect – ₹ 1,04,037 Burgman Street EX – ₹ 1,20,436 தொடர்ந்து இந்த இரு ஸ்கூட்டர்களின் அடிப்படையான மெக்கானிக்கல் சார்ந்த வசதிகளில் எந்த பெரிய மாற்றமும் இல்லாமல், 124cc எஞ்சின் 6,500 rpm-ல் அதிகபட்சமாக 8.7 hp பவர், 5,500 rpm-ல் 10 Nm டார்க் வழங்குகின்ற நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. பர்க்மேன் ஸ்டீரிட் மாடலில் பின்பக்கத்தில் 90/100-10 டயரும் பர்க்மேன் ஸ்டீரிட் EX ஸ்கூட்டரில் 100/80 -12 டயரை கொண்டுள்ளதால், இருபக்கத்திலும் 12 அங்குல…
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிளாசிக் 350 அடிப்படையில் கிளாசிக் 650 விற்பனைக்கு மார்ச் 27 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இந்த மாடலை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. ஏற்கனவே சந்தையில் உள்ள மற்ற 650சிசி மாடல்களிலிருந்து பெறப்பட்ட எஞ்சினை பகிர்ந்து கொண்டுள்ள கிளாசிக் 650ல் 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன், 4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் கொண்டதாக வரவுள்ளது. கிளாசிக் 350 அடிப்படையிலான டிசைனை பகிர்ந்து கொள்ளுகின்ற பெட்ரோல் டேங்க் உட்பட இருக்கை அமைப்பு என பலவற்றுடன் பல்வேறு இடங்களில் 350சிசி எஞ்சின் கொண்ட கிளாசிக்கின் சாயல் தெரிந்தாலும், சில இடங்களில் பிரீமியம் பாகங்கள் மற்றும் நிறங்களில் தனித்துவமான கவனத்தை ராயல் என்ஃபீல்டு…
நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்ற வகையிலான அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் வடிவத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள டிவிஎஸ் RTX 300 பைக்கில் புதிதாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த RTX-D4 300cc எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. முன்பாக ஆட்டோ எக்ஸ்போ 2025 அரங்கில் டிவிஎஸ் ஆர்டிஎக்ஸ் 300 பைக்கின் புகைப்படம் கசிந்த நிலையில், எப்பொழுது விற்பனைக்கு வரும் போன்ற முக்கிய தகவல்கள் தற்பொழுது வரை வெளியாகவில்லை என்றாலும் டிசைனுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. ஆர்டிஎக்ஸ் 300 மாடலில் 299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் 35hp பவர் மற்றும் 7,000 rpmல் 28.5 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த எஞ்சினில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பெற்றதாக இருக்கும். இந்த மாடலில் கூடுதலாக ரைடு-பை-வயர் த்ரோட்டில் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவற்றை பெற்றிருக்கும். இந்த மாடலில் கோல்டன் நிறத்திலான அப்சைடு டவுன் ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் அமைந்துள்ள RTX300 பைக்கில்…
சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சமாக அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் OBD-2B அப்டேட் பெற்று வரும் நிலையில் ஹோண்டா ஷைன் 100 பைக்கின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிய கிராபிக்ஸ் பெற்றதாக வந்துள்ளது. மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து ஷைன் 100 பைக்கில் ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் 98.98cc எஞ்சின் அதிகபட்சமாக 7.61bhp மற்றும் 8.05Nm வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. 2025 ஷைன் 100 மாடலில் கருப்புடன் சிவப்பு, கருப்புடன் நீலம், கருப்புடன் ஆரஞ்சு, கருப்புடன் சாம்பல் மற்றும் கருப்புடன் பச்சை என 5 விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது. தொடர்ந்து இந்த மாடலில் இரட்டை பிரிவு கிளஸ்ட்டர், கருப்பு நிற அலாய் வீலுடன், ஒற்றை இருக்கை கொண்டதாக இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன்…
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் முன்பாக வெளியிட்டிருந்த டாட் ஒன் என்ற மாடலுக்கு மாற்றாக புதிய ஒன் எஸ் என்ற பெயரில் விற்பனைக்கு ரூ.1,39,999 விலையில் வெளியிட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 181 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் பெற்றுள்ளது. சமீபத்தில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது ஸ்கூட்டர் வரிசை புதுப்பித்து வருவதுடன் டெலிவரியை விரைவுப்படுத்தவும், டீலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க துவங்கியுள்ளதால், சில மாதங்களுக்கு முன்பாக சிம்பிள் ஒன் மாடலை ரூ.1.67 லட்சத்தில் வெளியிட்டிருந்தது. 3.7Kwh பேட்டரி பொருத்தப்பட்டு PMSM எலக்ட்ரிக் மோட்டார் 8.5 kW (11.4 bhp) பவர் மற்றும் 72 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 0 முதல் 40 கிமீ வேகத்தை 2.77 வினாடிகளில் எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ ஆக உள்ள நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 181 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி டிசைன் உட்பட பெரும்பாலான வசதிகளை…