ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான QC1 மாடலின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Honda QC1 இந்திய சந்தைக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள க்யூசி1 மாடலின் டிசைன் அடிப்படையில் தான் ஆக்டிவா இ போல வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நிலையான பேட்டரி முறையை பெற்று குறைந்த தொலைவு மட்டும் பயணிக்கின்ற தினசரி அலுவலகம், கல்லூரி செல்பவர்களுக்கு, பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற பயன்பாடிற்கு வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 1.5Kwh லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு 3 பேஸ் BLDC மோட்டார் பவர் 1.5Kw மற்றும் 77 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையாக சார்ஜ் செய்திருந்தால் அதிகபட்சமாக 80 கிமீ ரேஞ்சு ஆனது ஈக்கோ மோடில் வழங்கும் என சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த மாடலில் ஸ்டாண்டர்ட் மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 50Km…
Author: MR.Durai
ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தின் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்பொழுது புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு விற்பனைக்கு ரூபாய் 5000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூபாய் 1.43 லட்சத்தில் கிடைக்க துவங்கியுள்ளது. புதிதாக இண்டி ஸ்கூட்டரில் கிரே மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்கள் சேர்க்கப்பட்டு கூடுதலாக ஃபைனல் டிரைவ் தற்போது செயின் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்பு பெல்ட் டிரைவ் ஆனது கொடுக்கப்பட்டிருந்தது. கூடுதலாக ரிவர்ஸ் பொத்தானை பிரத்தியேகமாக வழங்கியுள்ளது. IP67 மதிப்பிடப்பட்ட 4kwh லித்தியம் ஐயன் பேட்டரி பேக்கை கொண்டுள்ள இந்த மாடலின் உண்மையான ரேஞ்ச் 120 கிமீ வரை வழங்கும் என கூறப்படுகின்றது. Eco, Ride மற்றும் Rush மூன்று ரைடிங் முறைகளை பெற்ற இண்டி ஸ்கூட்டரில் நடுப்பகுதியில் பொருத்தப்பட்ட மோட்டார் 6.7Kw பவர் மற்றும் 26Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 3.9 விநாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 800-watt சார்ஜரை கொண்டு…
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஆக்டிவா e மாடலின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Honda Activa e சர்வதேச அளவில் சில நாடுகளில் ஹோண்டா CUV e: என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலின் அடிப்படையில் தான் ஆக்டிவா e வடிவமைக்கப்பட் பேட்டரி ஸ்வாப்பிங் டெக்னாலஜி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த பேட்டரி ஷாப்பிங் டெக்னாலஜி ஆனது ஹோண்டா e: Swap நெட்வொர்க் மூலம் மாற்றிக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது. மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய அம்சம் ஆக்டிவா இ மாடலை பேட்டரி ஸ்வாப் முறையில் மட்டும் சார்ஜ் செய்ய இயலும் மற்றபடி, பிளக் முறையில் சார்ஜ் செய்ய இயலாது. இரண்டு 1.5Kwh லித்தியம் பேட்டரி ஆனது முழுமையாக சார்ஜ் செய்திருந்தால் அதிகபட்சமாக 102 கிமீ ரேஞ்சு ஆனது ஈக்கோ மோடில்…
வரும் ஜனவரி 2025ல் விற்பனைக்கு வரவுள்ள கியா நிறுவனத்தின் புதிய சிரோஸ் மிக தாராளமான இடவசதி மற்றும் பல்வேறு நவீனத்துவமான வசதிகளுடன் ICE மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்நிறுவனம் இந்திய சந்தையில் சொனெட் மற்றும் செல்டோஸ் இரண்டு எஸ்யூவிகளை விற்பனை செய்து வருகின்ற நிலையில் கூடுதலாக வரவுள்ள இந்த மாடலும் ரூ.10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் ரூபாய் விலைக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் மற்ற இரு மாடல்களுடன் சற்று வேறுபாடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.2-லிட்டர் பெட்ரோல், 1.0-லிட்டர் GDi டர்போ பெட்ரோல், மற்றும் 1.5-லிட்டர் என மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்தில் வெளியான டீசரில் வாய்ஸ் கண்ட்ரோல் மூலமாக இயங்கும் வகையிலான பனரோமிக் சன்ரூஃப் சென்று போனது இடம்பெற்று இருப்பது உறுதியாகி இருக்கின்றது. விற்பனைக்கு வரவுள்ள சிரோஸ் மாடல் நான்கு மீட்டருக்கும் கூடுதலாக இருக்கலாம்…
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆஃப்ரோடு மற்றும் நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்ற வகையில் முந்தைய ஸ்கிராம் 411 அடிப்படையில் ஸ்கிராம் 440 மாடலின் ஆன் ரோடு விலை, சிறப்புகள், மைலேஜ், நிறங்கள் மற்றும் நுட்ப விபரங்களை அறிந்து கொள்ளலாம். Royal Enfield Scram 440 முன்பாக 411சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வந்த ஹிமாலயன் மற்றும் ஸ்கிராம் என இரு மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஹிமாலயன் 452சிசி செர்பா எஞ்சினுக்கு மாற்றப்பட்டிருக்கின்ற நிலையில், ஸ்கிராம் 443சிசி LS எஞ்சினுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கியர்பாக்ஸ், கியர் விகிதம் உள்ளிட்டவற்றிலும் வித்தியாசப்படுகின்றது. முந்தைய 411சிசி கூடுதலாக எஞ்சின் போர் அளவினை 3mm உயர்த்திய காரணத்தால் LS 443cc எஞ்சினாக மாறி உள்ள புதிய ஸ்கிராம் 440 அதிகபட்சமாக 25.4hp பவரை 6,250rpm-லும், 34Nm டார்க் 4,000rpmல் வழங்குகின்றது. தற்பொழுது 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஹாஃப் டூப்ளெக்ஸ் ஸ்பிளிட் கார்டிள் ஃபிரேம் பெற்ற ஸ்கிராம்…
ராயல் என்ஃபீல்டின் பிரபலமான கிளாசிக் பைக்கின் அடிப்படையிலான பாபர் ஸ்டைல் Goan கிளாசிக் 350 பைக்கின் ஆன்-ரோடு விலை, சிறப்புகள், மைலேஜ், நிறங்கள் மற்றும் நுட்ப விபரங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Royal Enfield Goan Classic 350 பாபர் ஸ்டைல் என்பது ஒரிஜனல் பைக்கிலிருந்து பாகங்களை குறைத்து அல்லது மாறுதல்களை மேற்கொண்டு நேர்த்தியான வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் மாடல்களுக்கு இவ்வாறு அழைக்கப்படுகின்றது. இந்நிறுவனத்தின் J-series 350 சிசி இன்ஜின் பெற்ற பாபர் ஸ்டைல் மாடலாக கோன் கிளாசிக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் ஜாவா 42 பாபர் மற்றும் பெராக் போன்ற மாடல்கள் கிடைக்கின்றன. அடிப்படையில் கிளாசிக் 350 பைக்கின் பல்வேறு அம்சங்கள் எஞ்சின் உட்பட அனைத்தும் பகிர்ந்து கொள்கின்றது. கோவான் கிளாசிக் 350 பைக்கில் 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர்,…