Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் உற்பத்தி செய்யபடுகின்ற பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மாடலில் ஸ்போர்ட்டிவ் 320d எடிஷன் மாடல் ரூ.38.60 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ 320d எடிஷன் ஸ்போர்ட் 320d மாடலில் மிகவும் நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள அம்சத்துடன் 4 சிலிண்டர் பெற்ற 2.0 லிட்டர் ட்வீன் டர்போ பவர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 190hp மற்றும் 400Nm டார்க்கினை வழங்கும் வகையிலான பின்புற சக்கரங்களுக்கு பவரை எடுத்து செல்ல 8 வேக ஆட்டிமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 7.2 விநாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆக வரையறைக்கப்பட்டுள்ளது.  பி.எம்.டபிள்யூ 320d ஸ்போர்ட் எடிசன் மைலேஜ் லிட்டருக்கு 22.69 கிமீ ஆகும். கம்ஃபோர்ட், இக்கோ ப்ரோ, ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் + என நான்கு விதமான டிரைவ் மோட்களை பெற்றதாக  320d மாடல் விளங்குகின்றது. முகப்பில் பாரம்பரிய…

Read More

பாடி கிராபிக்ஸ், க்ரோம் இன்ஷர்ட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடியதாக மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. செலிரியோ எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன் டாடா டியாகோ, ரெனோ க்விட் 1.0, டாடா நானோ காருக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ள செலிரியோ காரில் 3 சிலிண்டரை பெற்ற 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 67 hp ஆற்றலுடன் 90 Nm டார்க்கினை வழங்கும் எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள செலிரியோ லிமிடேட் எடிசன் தோற்ற அமைப்பில் புதிய பாடி கிராஃபிக்ஸ், சைட் மோல்டிங்கஸ், டோர் வைசர் போன்றவற்றுடன் பனிவிளக்கு, முகப்பு விளக்கு, டெயில்கேட் மற்றும் டெயில் விளக்கில் க்ரோம் அக்சென்ட்ஸ்களை பெற்றதாக வந்துள்ளது. இன்டிரியரில் இரு வண்ண கலவை பெற்ற இருக்கை…

Read More

கார் இன்சூரன்ஸ் எடுக்கும்பொழுது பல விசயங்களில் முறையான கவனம் செலுத்துவது மிக அவசியமாகின்றது. சரியான கவனம் இல்லாமல் கார் காப்பீடு தேர்வு செய்தால் சில தேவையற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவே அதனை தவிர்க்க கவனிக்க வேண்டிய சிலவற்றை பார்க்கலாம். கார் இன்சூரன்ஸ் டிப்ஸ் 1. கார் இன்சூரன்ஸ் வழங்குவதில் முன்னணியாக விளங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வது மிகவும் அவசியம். 2. பாலிசியின் தொகை அதிகமாக இருந்தாலும் அவற்றை தேர்வு செய்தால் அவசர காலங்களில் மிக பெரும் உதவியாக இருக்கும். 3. இன்ஷ்யூரன்ஸ் முகவரிடம் பாலிசி குறித்து முழுமையான விவரங்களை மிக தெளிவாக கேட்டு அறிவது அவசியம்.  மேலும் இன்ஷயூரன்ஸ் எடுக்கும்பொழுது அதன் டாக்குமென்டில் குறிப்பிட்ட விவரங்கள் அனைத்திற்க்கும் தெளிவான விளக்கங்களை தெரிந்து கொள்வது கட்டாயாம். 4.  டீலர்கள் பரிந்துரைக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்தையே தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. முழுமையான விவரங்கள் அறிந்த பின்னர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பாலிசிகளை ஒப்பீடு செய்த பின்னர் தேர்வு…

Read More

160 சந்தையில் நிலவுகின்ற கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பஜாஜ் பல்சர் 160 பைக்கில் உள்ள சிறப்பு வசதிகளை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். புதிய பஜாஜ் பல்சர் 160 பைக் மிக கடுமையான போட்டிகள் நிறைந்த 150 சிசி முதல் 160 சிசி வரையிலான சந்தையில் உள்ள மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பல்சர் 160 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நகரங்களில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. ஸ்டைல் மிரட்டலான பெட்ரோல் டேங்க் டூயல் வண்ணத்திலான அம்சங்களுடன் விளங்குகின்ற பல்ஸர் 160 பைக்கில் நீலம் , சிவப்பு மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும். பல்சர் என்எஸ் 200 பைக் மாடலை விட 10 கிலோ வரை எடை குறைந்த மாடலாக விளங்குகின்றது. எஞ்சின் புதிய பஜாஜ் பல்சர் NS160 மாடலில் 15.5 hp சக்தியை வெளிப்படுத்தி 14.6 என்எம் டார்கினை வெளிப்படுத்துகின்ற 160.3 சிசி ஆயில் கூல்டு…

Read More

பஜாஜ் பிளாட்டினா பைக் வரிசையில் குறைந்த விலை வேரியன்ட் மற்றும் பஜாஜ் CT100 பைக்கில் விலை உயர்ந்த டாப் வேரியன்ட் மாடல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பு மற்றும் பவர், டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. பஜாஜ் பிளாட்டினா பிளாட்டினா மாடலில் ES ஸ்போக் வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டு ஸ்போக் வீல் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட்போன்ற அம்சங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 8.1bhp மற்றும் 8.6Nm டார்க்கினை வழங்கும் 102 சிசி டிடிஎஸ்-ஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பேஸ் வேரியன்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிளாட்டினா புதிய வேரியன்டின் விலை ரூ.42,650 மட்டுமே (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) பஜாஜ் CT100 இந்தியாவின் குறைந்த விலை பைக் என அறியப்படுகின்ற பஜாஜ் சிடி 100 மாடலில்  8.1bhp மற்றும் 8.5Nm டார்க்கினை வழங்கும் 99.3சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. விற்பனையில்…

Read More

ரூ.1.20 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா FZ25 பைக்கின் அடிப்படையில் உருவாகி வரும் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட  யமஹா ஃபேஸர் 250 பைக் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. யமஹா ஃபேஸர் 250 பைக் நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற எஃப்இசட் 25 பைக்கின் அடிப்படையிலே முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள பேஸர் 250 பைக்கிலும் அதே யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஒரு லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படும் Fazer 250 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. வருகின்ற…

Read More