Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஸ்கூட்டர் சந்தையில் பிரசத்தி பெற்ற மாடல்களில் ஒன்றான சுசுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் பிரத்தியேக மேட் பிளாக் மற்றும் கிரே நிறம் என இரு நிறங்களில்  ரூ.62,174 விலையில் வெளியாகியுள்ளது.  சுசூகி ஆக்செஸ் 125 மேட் ஸ்பெஷல் எடிசன் சில வாரங்களுக்கு முன்னதாக சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டரில் இரு வண்ண கலவை மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து 125சிசி சந்தையில் சிறந்து விளங்குகின்ற மாடல்களில் ஒன்றான ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் தற்போது சிறப்பு மேட் நிறத்திலான எடிசன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. தோற்ற அமைப்பு மற்றும் எஞ்சின் ஆற்றல் உள்ளிட்ட எந்த வசதிகளும் மாற்றப்படாமல் நிறத்தை மட்டுமே கூடுதலாக இணைத்துள்ளது.லிட்டருக்கு 64 கிமீ மைலேஜ் தரும் வகையிலான சுசுகி இக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை கொண்ட 7000 ஆர்பிஎம் சுழற்சியில் 8.7 hp ஆற்றல் மற்றும்  5000 ஆர்பிஎம் சுழற்சியில் 10.2Nm டார்க் வழங்கும் 124சிசி ஏர்-கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சினை பெற்றுள்ளது.…

Read More

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறை கடந்த ஜூலை 1ந் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் பழைய பைக் மற்றும் கார்களை விற்பனை செய்யும் தனிநபர்களுக்கு வரி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி இல்லை பழைய கார், பைக்களுக்கு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பிறகு ஆட்டோமொபைல் துறைக்கு அடிப்படை வரியாக 28 சதவிகித பிரிவு சேர்க்கப்பட்டிருந்தாலும், பழைய கார்கள், பழைய பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குமே இதே நிலையா என்ற குழுப்பத்திற்கு தீர்வினை மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா வழங்கியுள்ளார். முந்தைய வரி விதிப்பின் படி பழைய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 5 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டு வந்தநிலையில், ஜிஎஸ்டி.,யின் அடிப்படையில் 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட பழைய வாகனங்கள் விற்பனை துறைக்கான வரி…

Read More

யமஹா நிறுவனத்தின் புதிய 250சிசி பைக் மாடலாக களமிறங்கிய யமஹா FZ 25 பைக் நான்கு மாதங்களில் 11,477 அலகுகள் விற்பனை செய்யப்பட்டு அதிரடியை கிளப்பி வருகின்றது. தமிழ்நாட்டில் யமஹா FZ 25 விலை ரூ.1,20,335 என விற்பனை செய்யப்படுகின்றது. யமஹா FZ 25 பைக் விற்பனை நிலவரம் எஃப்இசட் வரிசையில் யமஹா ஜனவரி மாதம் இறுதியில் வெளியிட்ட எஃப்இசட் 250 அல்லது எஃப்இசட் 25 பைக் மாதந்தோறும் விற்பனை முடிவில் சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தும் விபரம் சியாம் விற்பனை அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது. மார்ச் மாதம் முதல் ஜூன் வரையிலான நான்கு மாதங்களில் மொத்தம் 11,447 அலகுகளை யமஹா இந்தியா விற்பனை செய்துள்ளது. மாதம் வாரியாக விபரம் பின் வருமாறு. மார்ச் 2017 –  3,584 அலகுகள் ஏப்ரல் 2017 – 3,595  அலகுகள் மே 2017 – 2,299 அலகுகள் ஜூன் 2017 – 1,999 அலகுகள் குறிப்பாக ஜூன் மாதம் விற்பனை குறைவாக இருப்பதற்கான காரணம் ஜிஎஸ்டி எனப்படுகின்ற…

Read More

நகரம் மற்றும் புறநகர் மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மஹிந்திரா ஜீட்டோ மினிவேன் ரூ. 3.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜீதோ பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி போன்ற தேர்வுகளில் கிடைக்க உள்ளது. மஹிந்திரா ஜீட்டோ மினிவேன் மினிவேன்மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜீட்டோ மாடல்கள் நகரம் மற்றும் புறநகர பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்ற வகையிலான மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் ஆப்ரேட்ர்களுக்கும் ஏற்றதாக விளங்கும் என மகேந்திரா & மகேந்திரா தெரிவித்துள்ளது. 16hp ஆற்றல் மற்றும் 38 Nm வெளிப்படுத்தும் m_Dura பிஎஸ் 4 டைரக்ட் இன்ஜெக்‌ஷன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஜீட்டோ மினிவேன் மைலேஜ் லிட்டருக்கு 26 கிமீ ஆகும். உறுதியான மேற்கூறை கட்டமைப்பு மற்றும் சாஃப்ட்ரூஃப் மேற்கூறை என இரு வகைகளில் கிடைக்கின்ற இந்த மாடலில் டீசல் மட்டுமலாமல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளிலும் கிடைக்கின்றது. இன்டிரியர் அமைப்பில் டேஸ்போர்டில் இருவகையான வண்ண கலவை…

Read More

இந்திய சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் பெண்கள் விரும்புகின்ற 5 ஸ்கூட்டர்களை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். ஸ்கூட்டர்களின் நுட்ப விபரம் மற்றும் தமிழ்நாடு விலை பட்டியலை காணலாம். பெஸ்ட் லேடிஸ் ஸ்கூட்டர் இருசக்கர வாகன சந்தையில் பைக்குகளுக்கு இணையான வேகத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஸ்கூட்டர்களை வாங்கும் நிலை சந்தையில் அதிகரித்து வருவதனால் ஸ்கூட்டர் சந்தை அமோகமான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பெண்களுக்கு ஏற்ற ஸ்கூட்டர்களை இங்கே காணலாம். 1. யமஹா ஃபேசினோ மிகவும் ஸ்டைலிசான மற்றும் கிளாசிக் லுக் அம்சத்தை பெற்றதாக விளங்குகின்ற யமஹா ஃபேசினோ மொத்தம் 6 நிறங்களில் கிடைக்கின்ற இந்த மாடலில் யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் கூடிய 113சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.1 hp ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 8.1 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இந்த ஸ்கூட்டரில் இருக்கை அடிப்பகுதியில் 21 லிட்டர் கொள்ளளவு…

Read More

இந்திய சந்தையில் 15.50 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் 2017 ஸ்கோடா ஆக்டாவியா கார்விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றுள்ளது. 2017 ஸ்கோடா ஆக்டாவியா வெளியாகியுள்ள ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தோற்ற அமைப்பு உள்பட பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்ட இன்டிரியருடன் முந்தைய எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. முந்தைய ஆக்டிவா மாடலை விட கூடுதலாக தோற்ற அமைப்பில் பம்பர், பூட் மற்றும் ஆலாய் வீல் போன்ற பகுதிகளில் மாறுதல் செய்யப்பட்டு பக்கவாட்டில் பெரிய அளவில் மாறுதல் செய்யப்படாமல் வெளியாகியுள்ளது. குறிப்பாக முகப்பில் எல்இடி விளக்குகள், தட்டையான டிசைன் கொண்ட முகப்பு விளக்கினை பெற்றுள்ளது. இன்டிரியர் அமைப்பில் கூடுதலாக கவனத்தை செலுத்தியுள்ள ஸ்கோடா புதுப்பிக்கப்பட்ட இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் டயல்களுடன, நேர்த்தியான டேஸ்போர்டின் மத்தியில் 9.2 அங்குல கொலம்பஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்கி ஆப்பிள் கார் ப்ளே மற்றும்…

Read More