சென்னை மாநகரத்தின் அடுத்த போக்குவரத்து சாதனம் என்றால் மோனோ ரயில் தான், இந்த மோனோ ரெயில் பற்றி இதுவரை அதிகம் அறிந்திராத மற்றும் வியப்பில் ஆழ்த்தும் சுவாரஸ்யங்களுடன் நுட்பத்தையும் அறிந்து கொள்ளலாம். மோனோ ரயில் என்றால் என்ன ? மோனோ ரயில் என்றால் (mono means one) ஒற்றை ரயிலுக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையான டிராக் அல்லது பீம் வாயிலாக பயணிக்கும் போக்குவரத்து துறை சார்ந்த ரயிலாகும். இந்த ரயில்கள் இரண்டு வகை சக்கரங்களை மட்டுமே கொண்டு இயங்கும் தன்மையை கொண்டதாகும். ஒரு வகை சக்கரம் ரெயில் எடை தாங்குவதற்கும், மற்றொரு பிரிவு சக்கரம் டிராக்கில் கிரிப்பாக பயணிக்க உதவுகின்றது. தற்போது பெரும்பாலான மோனோ ரெயில்கள் மின்சாரத்தில் இயக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக நடுத்தர மற்றும் மெட்ரோ நகரங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மோனோ ரெயில் திட்டம் பயணிகளுக்கு மிகவும் சிறப்பான பயணத்தை வழங்கும் வகையில் சில நாடுகளில் ஏசி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.…
Author: MR.Durai
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அப்பாச்சி வரிசை பைக்குகளில் உள்ள அப்பாச்சி 160 மற்றும் அப்பாச்சி 180 போன்ற பைக் மாடல்களின் புதுப்பிக்கப்பட்ட மாடல் அடுத்த சில மாதங்களில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2017 டிவிஎஸ் அப்பாச்சி 160 விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலாக பவரை வெளிப்படுத்தும் வகையிலான மாடலாக எதிர்பார்க்கப்பட உள்ள அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கின் தோற்ற அமைப்பிலும் குறிப்பிடதக்க பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது. வரவுள்ள புதிய மாடல் பைக் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலின் டிசைனை பின்னணியாக கொண்டிருக்கலாம் என கருத்தப்படுகின்றது. தற்போது விற்பனையில் உள்ள மாடலான அப்பாச்சி 160 பைக்கில் 15.2 hp பவரை வெளிப்படுத்தும் 159.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வரவுள்ள புதிய மாடலில் 16.0 ஹெச்பி ஆற்றல் அல்லது அதே ஆற்றலில் மாற்றம் இல்லாமல் எதிர்பார்க்கலாம், மேலும் விற்பனையில் உள்ள ஜிக்ஸெர், யமஹா FZ-S FI V 2.0…
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டோமினார் 400 பைக்கில் கூடுதலாக மேட் பிளாக் நிறம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. தற்போது டாமினார் 400 வெள்ளை, நீலம், கருப்பு மற்றும் டிவைலைட் பிளம் போன்ற நிறங்களில் கிடைக்கின்றது. பஜாஜ் டோமினார் 400 பஜாஜின் மாடர்ன் பவர் க்ரூஸர் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட டோமினார் 400 சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் மூன்று வண்ணங்கள் வரை கிடைத்து வந்த பைக்கில் தற்போது கூடுதலாக மேட் பிளாக் நிறம் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பஜாஜ் காப்புரிமை பெற்ற டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்தினை கொண்டு 34.5 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 373சிசி டியூக் 390 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 35 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மற்றும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். டாமினார் 400…
ரூ. 6,402 கோடி செலவில் சென்னை மாநகரில் மோனோ ரயில் திட்டம் 43.48 கி.மீட்டருக்கு இரு வழித்தடங்களில் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மோனோ ரயில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது, சென்னையில் மோனோ ரயில் சேவை செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பல மாநிலங்களில் மோனோ ரயில் திட்டம் தோல்வியடைந்துள்ளதால், இந்த திட்டத்தை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி நிலையில் மோனோ ரயில் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவதற்கான திட்ட கொள்கை விளக்கக் குறிப்பொன்றைத் தாக்கல் செய்துள்ளது. ஆரம்பகட்டமாக சென்னையில் இரு வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்துக்கு 6 ஆயிரத்து 402 கோடி ரூபாய் செலவில் மோனோ ரயில் கொண்டு வரப்படும், எனவும் பொதுப் போக்குவரத்தை உயர்த்த, மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் வழித்தடம் பூந்தமல்லி- கத்திரப்பாரா, போரூர்- வடபழனி இடையே ரூ.3,267 கோடியில் செயல்படுத்தப்படும், அதனை இரண்டாவது வழித்தடம் வண்டலூர்- வேளச்சேரி இடையே…
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஜிஎஸ்டிக்கு பிறகு தங்களுடைய மாடல்கள் விலை ரூ. 2660 முதல் ரூ. 1.12 லட்சம் வரை விலையை குறைத்துள்ளது. குறிப்பாக விலை குறைப்பில் டூஸான் மற்றும் சான்டா ஃபீ போன்ற மாடல்கள் அதிபட்சமாக விலை குறைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் கார்கள் ஜூலை 1ந் தேதி முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை தொடர்ந்து மோட்டார் பிரிவுக்கு 28 % வரி விதிப்பில் சேர்க்கப்பட்டிருந்தாலும் , முந்தைய வரி விதிப்பை விட குறைவாக உள்ள காரணத்தால் கார் நிறுவனங்கள் அதிகபட்சமாக லட்சங்கள் முதல் சூப்பர் கார் நிறுவனங்கள் கோடிகள் வரை விலை குறைக்க தொடங்கியுள்ளன. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் தனது கார்களுக்கு அதிகபட்சமாக 5.9 % வரை விலையை குறைத்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சான்டா ஃபீ மற்றும் டூஸான் போன்ற எஸ்யூவிகள் விலையை ரூ. 1.12…
இந்தியா கவாஸாகி நிறுவனம் புதிய 2017 கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் மாடலை ரூ. 9.98 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு 20 நின்ஜா 1000 பைக்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கவாஸாகி நின்ஜா 1000 இந்திய சந்தையில் எஸ்கேடி முறையில் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2017 கவாஸாகி நின்ஜா 1000 மாடலில் பல்வேறு வசதிகளுடன் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் அனுபவத்தினை வழங்கவல்ல சூப்பர் பைக் மாடலாகும். புனே அருகே அமைந்துள்ள சக்கன் ஆலையில் ஒருங்கினைக்கப்படுகின்ற நின்ஜா 1000 பைக்கில் 1043சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 140 bhp ஆற்றலுடன் 111 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. முன்பு விற்பனை செய்யப்பட்ட மாடலை விட ரூ. 2.50 லட்சத்துக்கு குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடலில் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் இசியூ போன்றவற்றை பெற்று விளங்குகின்றது. இந்தியாவில் கிரே மற்றும் பச்சை வண்ணங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 20…