இந்தியாவில் முதல் சீன ஆட்டோமொபைல் குழுமத்தின் நிறுவனமாக களமிறங்க உள்ள எம்ஜி மோட்டார் குஜராத் மாநிலத்தில் ரூ. 2000 கோடி வரையிலான முதலீட்டை மேற்கொள்வதுடன் ஜிஎம் தொழிற்சாலையை கையகப்படுத்த உள்ளது. எம்ஜி கார்கள் வரும் 2019 ஆம் ஆண்டு முதல் எம்ஜி மோட்டார் பிராண்டில் முதல் கார் மற்றும் எஸ்யூவி மாடல்களை சீனாவை மையமாக கொண்டு செயல்படும் சாங்காய் ஆட்டோமோட்டிவ் இன்ட்ஸ்டிரி கார்ப்ரேஷன் (SAIC) குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற பிரிட்டிஷ் நாட்டின் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனா உள்பட இங்கிலாந்து போன்ற நாடுகளில் க்ராஸ்ஓவர் ரக கார்கள், செடான், ஹேட்ச்பேக், மின்சார கார்கள் மற்றும் எஸ்யூவிகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றது. சமீபத்தில் ஜிஎம் செவர்லே நிறுவனத்தின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹலோல் ஆலையில் உற்பத்தி நிறுத்திக் கொண்டதால் இந்த ஆலையை செயிக் நிறுவனம் கையகப்படுத்தி இதன் வாயிலாக இந்தியாவில் மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஜிஎம் நிறுவனத்தின் சீனா கூட்டணி நிறுவனமாக எஸ்ஏஐசி…
Author: MR.Durai
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருகின்ற ஆக்ஸ்ட மாதம் முதல் இலவச சைக்கிள் திட்டம் ஒன்றை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வழங்குகின்றது. இந்த மெட்ரோ சைக்கிளை இலவசமாக பயன்படுத்துவது மற்றும் பெறுவது குறித்து அறிந்து கொள்ளலாம். மெட்ரோ ரயில் சைக்கிள் சென்னை பெருநகர போக்குவரத்து சிரமத்தை குறைப்பதற்கு முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ள சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் பயணிகளுக்கு கூடுதலான வசதிகளை வழங்கும் நோக்கில் ரயில் பயணிகள் அருகாமையில் உள்ள இடங்களுக்கு சைக்கிள் வாயிலாக பயணிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ள இந்த சேவையில் முதற்கட்டமாக கோயம்பேடு பஸ் நிலையம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், பரங்கிமலை, ஷெனாய்நகர் மற்றும் நேரு பூங்கா ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச மிதிவண்டி சேவை தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் தலா 10 சைக்கிள்கள் வீதம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. கேரளா…
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா நிறுவனத்தின் எம்பிவி ரக மாடலான மொபிலியோ காரை அதிகார்வப்பூர்வமாக சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய மொபிலியோ வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவே என நம்பப்படுகின்றது. மொபிலியோ நீக்கம் எர்டிகா காருக்கு நேரடியான போட்டியாளராக மற்றும் லாட்ஜி, சைலோ, இன்னோவா போன்ற பலவேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற வாகனமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த பிரியோ அடிப்படையில் உருவான மொபிலியோ கார் இந்திய சந்தையில் போதிய வரவேற்பினை பெற தவறியதால் நீக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டிவ் என்ற பெயரில் சில மாறுதல்களுடன் வெளியான மொபிலியோ ஆர்எஸ் மாடலும் வரவேற்பினை பெற தவறியதாலும், மிக குறைந்த எண்ணிக்கையினாலும் சந்தையிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் புதிய மாடல் வருகை குறித்து எந்த தகவலும் இல்லை. ஹோண்டா கார் வெளியிட்டுள்ள அதிகார்வப்பூர்வ அறிக்கையில் போதிய வரவேற்பினை பெறாத மொபிலியோ சந்தையிலிருந்து நீக்கப்பட்டாலும் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் போன்றவற்றில் எந்த சிக்கலும் ஏற்படாது என உறுதிப்படுத்தியுள்ளதால் புதிய மொபிலியோ வரும் வாய்ப்புகள் இல்லை என்றே…
ஜிஎஸ்டிக்கு பிறகு 350சிசி-க்கு கூடுதலான திறன் பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கேடிஎம் டியூக் மற்றும் கேடிஎம் ஆர்சி வரிசை பைக்குகளை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கேடிஎம் பைக்குகள் – ஜிஎஸ்டி டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் கேடிஎம் டியூக் முதல் ஆர்சி பைக்குகள் விலையை ரூ. 628 முதல் ரூ. 5797 வரை உயர்த்தியுள்ளது. குறிப்பாக பல்வேறு நிறுவனங்களும் 350சிசி க்கு குறைவான மாடல்களை விலை குறைத்திருந்தாலும்,இதற்கு மாற்றாக டியூக் 200 , டியூக் 250 மற்றும் ஆர்சி 200 மாடல்களை கேடிஎம் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதிகபட்ச விலை ஏற்றத்தை கேடிஎம் ஆர்சி390 பைக் ரூ. 5797 வரை உயர்த்தப்பட்டு தற்போது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 2.31 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது. குறைந்தபட்ச விலை உயர்வாக கேடிஎம் 390 டியூக்மாடல் ரூ. 678 வரை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள விலை விபரம் மாநிலம் வாரியாக உயர்த்தப்பட்டிருந்தாலும்…
ஆடம்பர கார்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வரி ஜிஎஸ்டிக்கு பிறகு குறைந்த காரணத்தால் முந்தையை மாடலை விட குறைந்த விலையில் 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி கடந்த ஜனவரி மாதம் டெட்ராய்ட் மோட்டார் ஷோ வாயிலாக சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்ட பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி இந்தியாவில் ரூ. 30.65 லட்சம் முதல் ரூ. 36.75 லட்சம் வரையிலான விலைக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் நான்கு விதமான வேறுபாட்டில் கிடைக்க உள்ளது. அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 182 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் 7 வேக டியூல் கிளட்ச் பெற்ற ஆட்டோ கியர்பாக்ஸ் கொண்டதாக 1200-1400ஆர்பிஎம்-ல் 300என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.1 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 135 ஹெச்பி மற்றும் 168 ஹெச்பி என…
இந்தியா சுசுகி மோட்டார்சைக்கிள் பிரிவு புதிதாக இருவண்ண கலவையில் சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் மாடலை சென்னை எக்ஸ்-ஷோரூம் ரூ.52,688 விலையில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் வந்துள்ள லெட்ஸ் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் SEP எனப்படும் சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்ற 112.8 சிசி எஞ்சினை பெற்றுள்ள லெட்ஸ் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 8.4bhp பவரை வெளிப்படுத்துவதுடன், 8.8 Nm டார்க்கினை வழங்கி சிவிடி கியர்பாக்ஸ் வாயிலாக சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்கின்றது. 110சிசி சந்தையில் உள்ள ஆக்டிவா-ஐ , ஸ்கூட்டி ஸெஸ்ட், யமஹா ரே போன்ற மாடல்களுக்கு மிகவும் சவாலான ஸ்கூட்டர்களில் ஒன்றான லெட்ஸ் மாடலில் புதிதாக வந்துள்ள மூன்று இரு வண்ண கலவைகளின் விபரம் பின் வருமாறு ;- நீலம் மற்றும் மேட் கருப்பு கலவை, ஆரஞ்சு மற்றும் மேட் கருப்பு கலவை, கிளாஸ் ஸ்பார்க்கிள் கருப்பு நிறம் போன்ற நிறங்களில் கிடைக்க உள்ளது.…