Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

பிரான்சில் நடைபெற்ற வீல்ஸ் அன்ட் வேவ்ஸ் விழாவில் இரு கஸ்டமைஸ் பைக் மாடல்களை ராயல் என்ஃபீலடு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கான்டினென்டினல் GT அடிப்படையில் ராயல் என்ஃபீலடு சர்ஃப் ரேஸர் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீலடு சர்ஃப் ரேஸர் 2017 வீல்ஸ் அன்ட் வேவ்ஸ் விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பொழுது இரு கஸ்டமைஸ் மாடல்களை சென்னையை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு மாடல் கான்டினென்டினல் GT மாடலை அடிப்படையாக கொண்ட ஜென்டில்மேன் பிரேட் மற்றும் சர்ஃப் ரேஸர் ஆகும். இங்கிலாந்தைச் சேர்ந்த சின்ரோஜா (Sinroja) மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் துனையுடன் மிக நேர்த்தியாக இரு மாடல்களும் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. இலகுஎடை கொண்டதாக அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள சர்ஃப் ரேஸர் மாடலில் கிரே வண்ணத்துடன் கூடிய ஃபேரிங் செய்யப்பட்டுள்ள பகுதியில் மிக நேர்த்தியான நீல வண்ணத்திலான ஸ்டிக்கரிங் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்கிற்கு மாற்றாக அப் சைடு டவுன் ஃபோர்க்குகள் பெற்றிருப்பதுடன், மிக நேர்த்தியான…

Read More

பல மாதங்கள் காத்திருப்பிற்கு பின்னர் ஜூலை மாதம் பெனெல்லி டொர்னேடோ 302R பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது முன்பதிவு டீலர்கள் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது. டொர்னேடோ 302R பைக் பெனெல்லி  நிறுவனத்தின் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட முதல் மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள டொர்னேடோ 302 பைக்கில் இடம்பெற்றுள்ள 300சிசி இஞ்ஜின் 36 PS ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 27 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. விற்பனையில் உள்ள பெனல்லி டிஎன்டி 300 பைக்கின் அலங்கரிக்கப்பட்ட மாடலான டொர்னாடோ 302 முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. முன்பக்க டயரில் இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின் டயரில் ஒற்றை டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் ஏபிஎஸ் பிரேக் இனைந்திருக்கும். போட்டியாளர்கள் போட்டியாளர்களான அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் யமஹா ஆர்3 , கேடிஎம் ஆர்சி390 மற்றும் நின்ஜா 300 போன்ற பைக்குகளுக்கு கடும் சவாலாக…

Read More

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் மஹிந்திரா ஏர்வேன்10 டர்போப்ராப் விமானத்துக்கு பறக்கும் அனுமதியை ஆஸ்திரேலிய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் வழங்கியுள்ளது. மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஏர்வேன்10 பாரீஸ் ஏர் ஷோ 2017 அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மஹிந்திரா ஏர்வேன்10 மஹிந்திரா குழுமத்தின் விமான துறை சார்ந்த சேவைகளில் ஒன்றான மஹிந்திரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய 10 இருக்கை கொண்ட டர்போப்ராப் விமானத்துக்கு அமெரிக்காவின் பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகத்தின் FAR 23 வகை அனுமதியை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் பறக்கும் அனுமதியை பெற்றுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் M250 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள ஏர்வேன்10 டர்போ ப்ராப் மாடல் அதிகபட்சமாக 450SHP (450-shaft horsepower) பவரை வெளிப்படுத்தும்.  இந்த விமானம் வருகின்ற ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை நடைபெற உள்ள பாரீஸ் ஏர் ஷோ 2017 அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த  டர்போப்ராப் விமான அடுத்த ஆண்டின்…

Read More

அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு வரவுள்ள மற்றொரு மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 2017 புதிய ஹூண்டாய் வெர்னா வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில் முதல் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. 2017 ஹூண்டாய் வெர்னா சர்வதேச அளவில் சில நாடுகளில் மேம்படுத்தப்பட்ட புதிய வெர்னா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தியசாலைகளிலும் சில மாதங்களாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வெர்னா காரின் வருகையை ஆகஸ்ட மாத தொடக்க வாரங்களில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் டீசர் படத்தை சமூக வலைதளங்களில் இந்தியா ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. சில நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள சோலாரீஸ் மற்றும் அசென்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற வெர்னா காரில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய அடிச்சட்டத்துடன் கூடுதலான நீளம் மற்றும் அகலம் போன்றவற்றை பெற்றிருக்கும் என்பதனால் சிறப்பான வீல்பேஸ் கொண்டு தாரளமான இடவசதியுடன், பல்வேறு நவீன வசதிகள் மற்றும் அதிகபட்ச…

Read More

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு டீலர்கள் மற்றும் இணையதளத்தின் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற முதல் மேட் இன் இந்தியா ஜீப் எஸ்யூவி காம்பஸ் மாடலாகும். காம்பஸ் எஸ்யூவி முன்பதிவு இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி500, ஹூண்டாய் டூஸான், ஹோண்டா சிஆர்-வி  போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாகவும் , ஃபார்ச்சூனர், எண்டேவர், பஜரோ போன்றவற்றுக்கும் சவாலாக காம்பாஸ் எஸ்யூவி விளங்குகின்ற வகையில் அமைந்திருக்கும். முதற்கட்டமாக 5 வகையான வேரியன்ட் பிரிவில் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்படலாம், டீசல் ஆட்டோமேட்டிக் மற்றும் பெட்ரோல் மாடல்கள் வெளியிடப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்சின் விபரம் காம்பாஸ் மாடலில் 170 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 160 ஹெச்பி பவருடன்,  250 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில்…

Read More

நாளைய தினம் அதாவது 20.6.2017 தேதிக்கான பெட்ரோல்,  டீசல் விலை விபரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.  பெட்ரோல் விலை ரூ.0.10 பைசாவும், டீசல் விலை ரூ.0.04 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 20.6.2017 ஜூன் 19ந் தேதி அதாவது இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.14, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.89 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.10 பைசாவும்,  டீசலுக்கு 0.03 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன்- 20ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.04 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.85 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.

Read More