Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியாவில் ஹோண்டா ஆப்ரிக்கா ட்வீன் அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள் சோதனை ஓட்ட உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா ஆப்ரிக்கா ட்வீன் 998சிசி இஞ்சின் பெற்ற பெர்ஃபாமென்ஸ் மாடலாக ஆப்ரிக்கா ட்வீன் விளங்கும். ஆப்ரிக்கா ட்வீன் மாடலில் 6 வேக DCT ஆட்டோ பாக்ஸ் பெற்றிருக்கும். வருகின்ற ஜூலை 2017ல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்பட்டுத்தப்பட்ட இந்த மாடல்  இந்திய சந்தைக்கு ஜூலை மத்தியில் வெளியிடப்பட உள்ளது. ஹோண்டா ஆப்ரிக்கா ட்வீன் 1000சிசி அட்வென்ச்சர் ரக ஸ்போர்ட்டிவ் பைக்கில் சர்வதேச அளவில் 998சிசி இஞ்ஜின் பெற்று 6 வேக DCT (Dual clutch Transmission )  ஆட்டோ பாக்ஸ் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 94 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி லிக்யூடு கூல் பேரலல் ட்வீன் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 98 Nm ஆகும். இதில் 6 வேக DCT (Dual…

Read More

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா CBR 150R மற்றும் CBR 250R பைக்குகள் ஹோண்டாவின் அதிகார்வப்பூர்வ  இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CBR 150R, CBR 250R வருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஹோண்டா CBR 150R பி.எஸ் 3 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக இரண்டு பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிகார்வப்பூர்வ இணையத்தில் இரு பைக்குகளும் நீக்கப்பட்டுள்ளது. புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் இல்லை. பி.எஸ் 3 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து ஹோண்டா CBR 150R அல்லது ஹோண்டா CBR 250R பைக் வாங்கினால் ஹோண்டா நவி மினி பைக் இலவசம் என விற்பனை செய்த ஹோண்டா தற்பொழுது அதிகார்வப்பூர்வ இணையத்தில் இருந்து இரு மாடல்களை நீக்கிவிட்டது. சிபிஆர் 250ஆர்ஆர் மற்றும் சிபிஆர் 300ஆர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என முன்பே அறிவித்திருந்த நிலையில் இந்தோனேசியா போன்ற சந்தையில் உள்ள புதிய ஹோண்டா சிபிஆர் 150…

Read More

தமிழகத்தில் தற்காலிகமாக டூவீலர் வாகனப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஓ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. முறையான பி.எஸ் 4 எஞ்சின் விபரங்களை வழங்காத ஹீரோ, டிவிஎஸ் மற்றும் யமஹா பதிவு மாநிலம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டூவீலர் வாகனப் பதிவு நிறுத்தம் ஏப்ரல் 1ந் தேதி முதல் பி.எஸ்4 வாகனங்கள் மட்டுமே விற்பனை மற்றும் பதிவுசெய்ய இயலும். மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆர்டிஓ மையங்களில் அனைத்து இரு சக்கர வாகன பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது. ஹீரோ, டிவிஎஸ் மற்றும் யமஹா போன்ற நிறுவனங்களின் பதிவு முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ந் தேதி முதல் நாடு முழுவதும் பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்யக்கூடாது என அதிரடியாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து பி.எஸ் 3 வாகனங்கள் உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டு வாகனங்கள் பி.எஸ் 4 மாசு விதிகளுக்கு ஏற்ற எஞ்சினை தயாரித்து வருகின்றது. தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டிய பி.எஸ்.4…

Read More

ஃபியட் நிறுவனம் புதிதாக புன்ட்டோ எவோ பியூர் கார் மாடலை ரூபாய் 4.92 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபியட் நிறுவனத்தின் விலை குறைந்த மாடலாக எவோ பியூர் விளங்குகின்றது. ஃபியட் புன்ட்டோ எவோ பியூர் புன்ட்டோ எவோ பியூர் விலை ரூபாய் 4.92 லட்சம் ஆகும். புன்ட்டோ எவோ காரின் எஞ்சின் மற்றும் தோற்றத்தில் எந்ந மாற்றங்களும் இல்லை. முந்தைய புன்ட்டோ பியூர் காருக்கு மாற்றாக பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே வந்துள்ள மாடல் ஃபியட் குழுமத்தின் இந்தியா பிரிவின் விலை குறைந்த மாடலாக புன்ட்டோ எவோ பியூர் விளங்குகின்றது. எவோ பியூர் காரில் 1.2 லிட்டர் ஃபயர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 68 பிஎஸ் ஆற்றலையும், 96 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. முந்தைய காரின் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல், மிக நேர்த்தியான ஃபியட்டின் ரெயிண்டீர்’ ஹெட்லைட்டுகள் பெற்றிருப்பதுடன்…

Read More

இந்தியாவில் ரூபாய் 17.61 லட்சம் விலையில் ஹோண்டா CBR1000RR ஃபயர் பிளேடு பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.21.71 லட்சம் விலையில் ஹோண்டா CBR1000RR ஃபயர் பிளேடு SP பைக் மாடலும் வெளியிடப்பட்டுள்ளது. ஹோண்டா CBR1000RR ஃபயர் பிளேடு இரண்டு ஃபயர் பிளேடு மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது. டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஹோண்டா விங் டீலர்களிடம் மட்டுமே கிடைக்கும். 25வது ஆண்டில் களமிறங்கும் ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் பைக்கினை கொண்டாடும் வகையில் சிறப்பு வசதிகளை பெற்ற வேரியன்ட்களாக சர்வதேச அளவில் விற்பனைக்கு செய்யப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் இந்த மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள ஹோண்டா நிறுவனத்தின் பிரிமியம் பைக் டீலர்களான ஹோண்டா வீங் ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. தற்பொழுது முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் ஃபயர்பிளேடு பைக்கில் 999சிசி கொண்ட 4 சிலிண்டர் பெற்ற லிக்விட்…

Read More

நிசான் சன்னி செடான் கார் விலை ரூ. 1.96 லட்சம் வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சன்னி செடான் காரின் ஆரம்ப விலை ரூபாய் 6.99 லட்சம் விலையில் வெளிவந்துள்ளது. நிசான் சன்னி கார் ரூ. 6.99 லட்சம் விலையில் சன்னி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டிலே பெரும்பாலான பாகங்கள் உற்பத்தி செய்யப்படுவதனால் விலை சரிந்துள்ளது. காம்பேக்ட் ரக செடான்களுக்கு சவாலாக நடுத்தர ரக செடான் மாடல் அமைந்துள்ளது. காம்பேக்ட் ரக செடான் கார்களான எக்ஸ்சென்ட் , டிசையர், ஆஸ்பயர், ஸெஸ்ட் மற்றும் அமேஸ் போன்ற கார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான மாடலாக நடுத்தர பரிவில் அமைந்துள்ள செடான் கார் விலை அமைந்துள்ளது. 99 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 82 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இரு எஞ்சின்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 101 குதிரைசக்தி ஆற்றலை…

Read More