வரும் மே 14 முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் மையங்களின் விடுமுறைக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. பெட்ரோலிய அமைச்சகம் பெட்ரோலியம் பொருட்களை விற்பனை செய்யும் டீலர்களின் கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நீன்ட நாளைய கோரிக்கைக்கு மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளாத காரணத்தால் மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையாக அறிவிக்கப்படும் என இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயனன் தெரிவித்திருந்தார். இந்த கூட்டமைப்பின் கீழ் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தான் 25,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஞாயிறுதோறும் விடுமுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் தெரிவித்துள்ளதாக பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது. இன்று, பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில், பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும்…
Author: MR.Durai
புதுச்சேரியில் வரும் மே 1ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவையில் தினமும் பெட்ரோல் விலை மாற உள்ளது. ஹெல்மெட் கட்டாயம் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் பட்சத்தில் தலை பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். டூ வீலர் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமே ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதே ஆகும். ஐஎஸ்ஐ சான்று பெற்ற தலைகவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதால் தலைக்கு ஏற்படும் படுகாயம் 70 சதவீதம் தடுக்கப்படுகின்றது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி தினமும் பெட்ரோலிய பொருட்கள் விலை மாறுபடும். புதுச்சேரியில் விற்பனையாகின்ற வாகனங்களில் 85 சதவிதம் இருசக்கர வாகனங்கள் தான். கடந்த 2016-17 நிதியாண்டில் புதுச்சேரியில் விற்பனையான 66,378 வாகனங்களில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே 57,439 ஆகும். கடந்த 2016-17 ஆம் நிதியாண்டில் புதுவையில் நிகழ்ந்த 1755 க்கு…
கடந்த 2016 டெல்லி ஆட்டோ வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் கருவிகளை கொண்ட மஹிந்திரா டியூவி300 எண்டூரன்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா டியூவி300 டியூவி300 எஸ்யூவி காரில் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினை பெற்றுள்ளது. எண்டூரன்ஸ் கிட் விலை ரூபாய் 61 ஆயிரம் மட்டுமே. தற்பொழுது டீலர்கள் வாயிலாக டியூவி300 கார் விற்பனை செய்யப்படுகின்றது. இருவிதமான எஞ்சின் பவரில் டியூவி300 எஸ்யூவி விபரம் பின் வருமாறு : எம்ஹாக்80 1.5 லிட்டர் 3 சிலிண்டர் கொண்ட 84பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 230என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. மேம்படுத்தப்பட்ட மாடலான நூவோஸ்போர்ட் எஸ்யூவி காரில் அதே 1.5 லிட்டர் என்ஜினை ஆற்றலை அதிகரித்து 100 bhp என்ஜினாக மாற்றி எம் ஹாக்100 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. எண்டூரன்ஸ் கிட் காரில் பாடி கிளாடிங்,…
கடந்த மார்ச் 28ம் தேதி மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பினால் தற்பொழுது வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டணங்களை காப்பீட்டை குறைத்துள்ளது. 3ம் நபர் காப்பீடு மூன்றாம் நபர் காப்பீடு கட்டணங்கள் மார்ச் 28ந் தேதி உயர்த்தியது. கனரக வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தொடர்ந்து பீரிமியம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. வர்த்தக வாகனங்களுக்கு பெருமளவில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வாகனங்களுக்கான காப்பீடு தொகையை காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கடந்த மார்ச் 28ம் தேதி உயர்த்தி அறிவித்திருந்தது. இதற்கு கனரக வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு தொகை அதிகரிப்பு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி லாரி ஸ்டிரைக் தொடங்கியது. பின்னர் மூன்றாம் நபர் காப்பீடு கட்டணத்தை குறைக்க ஐஆர்டிஏஐ உறுதி அளித்ததை தொடர்ந்து ஸ்டிரைக் கைவிடப்பட்டது. தற்பொழுது முன்பு அறிவிக்கப்பட்ட கட்டண…
சீனாவில் நடைபெறுகின்ற 2017 சாங்காய் ஆட்டோ ஷோவில் மெர்சிடிஸ் பென்ஸ் கான்செப்ட் ஏ செடான் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்கால் காம்பேக்ட் ரக சொகுசு மாடலாக கான்செப்ட் ஏ செடான் விளங்கும். மெர்சிடிஸ் கான்செப்ட் ஏ செடான் காம்பேக்ட் ரக செடான் பிரிவில் நவீன வடிவ தாத்பரியங்களை பெற்றதாக விளங்கும். அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் MFA2 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளது. புதிய டிசைன் சாகப்தத்தை கொண்டதாக விளங்கும் என மெர்சிடிஸ் தெரிவிக்கின்றது. நவீன தலைமுறைக்கு ஏற்ற வகையிலான டிசைன் தாத்பரியங்களை பெற்றதாக வரவுள்ள கான்செப்ட் ஏ செடான் காரில் மிக நேர்த்தியான முன்புற அமைப்பில் ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய ஏஎம்ஜி கார்களில் இடம்பெற்றுள்ள கிரில் அமைப்புடன் வந்துள்ளது. இந்த காரின் நீளம் 4,570, அகலம் 1,870மிமீ மற்றும் உயரம் 1,462மிமீ ஆகும். இன்டிரியர் அம்சத்திலும் மிக நேர்த்தியான இருக்கை அமைப்புடன் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் மிகவும் சொகுசான இருக்கைகளை கொண்டதாக வரவுள்ளது. எதிர்கால காம்பேக்ட்…
இந்தியாவில் சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் 3 மில்லியன் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை குருகிராம் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. ஜிக்ஸெர் மற்றும் ஆக்செஸ் 125 மாடல்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. சுசுகி மோட்டார்சைக்கிள் ஆண்டுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டுள்ள குருகிராம் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் குருகிராம் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாகவே கனிசமான விற்பனை அதிகரிப்பை தொடர்ந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை வழங்கி வருகின்ற சுசுகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாடலாக விளங்கி வருகின்து. இதுதவிர, ஸ்கூட்டர் சந்தையில் 125சிசி பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற ஆக்செஸ் 125 அபரிதமான வரவேற்பினை தொடர்ந்து தக்கவைத்து கொண்டுள்ளது. இந்தியாவில் பிரசத்தி பெற்ற சூப்பர் பைக் மாடல்களில் மிக முக்கியமான மாடலாக ஹயபுஸா விற்பனை…