Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

கூடுதல் வசதிகளை பெற்ற 2017 ஹூண்டாய் எக்ஸென்ட் ரக கார் மாடல் ஏப்ரல் 20-ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. புதிய 1.2 லிட்டர் டீசல் எஞ்சினை பெற்ற மாடலாக வரவுள்ளது. ஹூண்டாய் எக்ஸென்ட் கார் எக்ஸ்சென்ட் செடான் ஏப்ரல் 20ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்படலாம். கட்டுமான அமைப்பில் அதிகப்படியான மாற்றத்தை பெற்றிருக்கும். புதிய 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸென்ட் செடான் ரக காரில் முந்தைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு மாற்றாக கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வகையிலான மேம்படுத்தப்பட்ட புதிய 1.2 லிட்டர் டீசல்  75 hp மற்றும் 171Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் புதிய கிராண்ட் ஐ10 காரில் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. முன்பக்க வடிவ அமைப்பில் புதிய வெர்னா காரின் தாத்பரிங்களை பெற்று அகலமான அறுங்கோன வடிவ கிரில் , படுக்கை…

Read More

அரசுப் பேருந்தும் நவீன தலைமுறைக்கு ஏற்ற பேருந்துகள் என நிரூபிக்கும் வகையில் தமிழக அரசின் நெல்லை மண்டல அரசுப் பேருந்தில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுப்பேருந்து நாகர்கோவிலிலிருந்து சென்னை வரை இந்த பேருந்து இயக்கப்படுகின்றது. நவீன தலைமுறைக்கு ஏற்ற வகையில் இலவச வை-ஃபை சேவையை வழங்குகின்றது. நாஞ்சில் ராஜா என்ற பெயர் கொண்ட பேருந்தில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. மாறிவரும் சமூகவலை தளயுகத்திற்கு ஏற்ப தங்களின் சேவை தரத்தை வழங்கி வரும் தனியார் பேருந்துகளில் தொலைக்காட்சி, ஆடியோ சிஸ்டம் என்பதனை கடந்து இலவச வை-ஃபை  வசதிகளை வழங்க தொடங்கியுள்ளதால் இதுபோன்ற பேருந்துகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாகர்கோவிலிலிருந்து சென்னை வரை இயக்கப்படுகின்ற திருநெல்வேலி மண்டல அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில்  இலவச ஆன்போர்டு வை-ஃபை சேவை வழங்கப்பட்டுள்ளது. எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவுப் பேருந்து போன்ற 2+2 இருக்கை அமைப்பை கொண்ட இந்த பேருந்துகளில் சென்னையிலிருந்து நாகர்கோவில் வரையும் , நாகர்கோவிலிலிருந்து…

Read More

ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களில் கூடுதல் வசதிகளை பெற்ற ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இரு மாடல்களும் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான என்ஜின் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. ஃபோர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. ஃபிகோ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்பயர் ஸ்போர்ட் என்ற பெயரில் கிடைக்கும். இரு மாடல்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. டாப் டைட்டானியம் வேரியன்டில் மட்டுமே இடம்பெற்றுள்ள சிறப்பு ஸ்போர்ட்ஸ் மாடல்களில் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. 88hp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 100hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது. இரண்டிலுமே 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஃபிகோ ஸ்போர்ட்ஸ் காரின் முகப்பில் வழக்கமாக கிடைக்கின்ற மாடலின் கிரிலுக்கு மாற்றாக தேன்கூடு…

Read More

டெஸ்லா நிறுவன தலைவர் மற்றும் கண்டுபிடிப்பாளர் எலான் மஸ்க் கனவு திட்டங்களில் ஒன்றான ஹைப்பர்லூப் என்றால் என்ன ? ஹைப்பர்லூப்பில் உள்ள பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். நிலம், நீர், விமானம், விண்வெளிப் பயணம் என பயன்பாட்டில் உள்ள போக்குவரத்து சாதனங்களுக்கு மாற்றாக எலான் கற்பனையில் உருவான திட்டமே 5வது போக்குவரத்து திட்டம் ஹைப்பர்லூப் ஆகும். ஹைப்பர்லூப் முதன்முறையாக 2012 ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்கான முதல் தகவலை மஸ்க் வெளியிட்டார். மணிக்கு 1200 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக போக்குவரத்து சார்ந்த சாதனமாகும். உலகின் முதல் ஹைப்பர்லூப் சேவையை தொடங்கும் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்கும். ஹைப்பர்லூப் என்றால் என்ன ? வெற்றிடக் குழாய்களில் கேப்சூல் வாகனத்தில் பயணிகள் அமர்ந்து அதிவேகமாக பயணம் செய்யும் வகையில் ஐந்தாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து முறையே ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகின்றது. கேப்சூல் (பாட்ஸ்) எனப்படுவது அவரையின் உள்ளே அமைந்திருக்கும் பட்டாணி விதைகள் போன்ற வாகனமாகும்.…

Read More

15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகின்ற பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ரூ.1.39 காசும் , டீசல் விலை ரூ. 1.04 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 39 காசும் டீசல், லிட்டருக்கு ஒரு ரூபாய் 4 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு விளக்கமளித்துள்ள எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளன.  . இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் 16/04/2017 முதல் அமலுக்கு வந்துள்ளது. உயர்த்தப்பட்ட விலை உயர்வை தொடர்ந்து, சென்னையில் 69 ரூபாய் 28 காசாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தற்போது 71 ரூபாய் 16 காசாக அதிகரித்துள்ளது. 58 ரூபாய் 82 காசாக இருந்த ஒரு லிட்டர் டீசல், தற்போது 60 ரூபாய் 16 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Read More

வருகின்ற மே 1ந் தேதி முதல் புதுச்சேரி உள்பட 5 முக்கிய நகரங்களில் தினந்தோறும் பெட்ரோலிய பொருட்கள் விலையை தினமும் மாற்றி அமைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் முதற்கட்டமாக 5 முன்னணி நகரங்களில் தினமும் மாறுகின்ற வகையில் விலையை வழங்க உள்ளது. தங்கம் விலை நிலவரம் போல பெட்ரோலிய பொருட்களுக்கு இனி விலையையும் மாற்றி அமைக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஐந்து நகரங்களில், 200 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்தியாவில் செயல்படுகின்ற மொத்த பெட்ரோல் நிலையங்களில் 95 சதவித பங்களிப்பை  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுள்ளது. அதாவது நாட்டில் மொத்தமாக  56,190 பெட்ரோலிய டீலர்கள் செயல்படுவதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கீழ் சுமார் 52,604 பங்க்குகள் செயல்படுகின்றது. முதற்கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர்,  ஜெம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் என மொத்தம்…

Read More