இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் அங்கமான சொகுசு லெக்சஸ் பிராண்டில் லெக்சஸ் ES 300h ஹைபிரிட் சொகுசு செடான் கார் ரூ.55.27 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. லெக்சஸ் ES 300h ரூ.55.27 லட்சத்தில் லெக்சஸ் ES 300h கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் காரை அடிப்படையாக கொண்டு லெக்சஸ் ரக மாடலாகும். இந்தியாவில் ஹைபிரிட் ரக லெக்சஸ் இஎஸ் 300h மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெக்சஸ் கார்களுக்கே உரித்தான தனத்தன்மைகளை கொண்ட சொகுசு அம்சங்கள் மற்றும் தோற்ற வசதிகளை பெற்றிருக்கின்ற இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இரண்டுமே இணைந்து அதிகபட்சமாக 200 ஹெச்பி ஆற்றலுடன் 213 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் எலக்ட்ரானிக் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. லெக்சஸ் காரின் பாரம்பரிய கிரில் அமைப்பினை பெற்று விளங்குகின்ற இந்த மாடலின் முகப்பில் புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் கூடுதலாக பகலில் ஒளிரும்…
Author: MR.Durai
வரவுள்ள மேம்படுத்தப்பட்ட 2017 மாருதி சுசுகி சியாஸ் கார் மாடலின் வேரியன்ட் விபரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மாருதி சியாஸ் பிரிமியம் நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. 2017 மாருதி சியாஸ் நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனை செய்யபடுகின்ற கார்களில் உள்ளதை போன்ற வேரியன்ட் பெயரை சியாஸ் பெற்றுள்ளது. தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்களுடன் கூடுதலான வசதிகளை பெற்றதாக புதிய சியாஸ் வரவுள்ளது. என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் 2000 டீலர்கள் எண்ணிக்கை நாடு முழுவதும் மாருதி பெற்றுள்ள நிலையில் 200 க்கு மேற்பட்ட நெக்ஸா டீலர்களையும் மாருதி சுசூகி பெற்றுள்ளது. நெக்ஸா டீலர்கள் வழியாக எஸ் க்ராஸ் , பலேனோ மற்றும் இக்னிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலே கொடுக்கப்பட்டுள்ள கார்களில் இடம்பெற்றுள்ளதை போன்ற சிக்மா ,ஆல்ஃபா , டெல்டா மற்றும் ஜெட்டா போன்ற வேரியன்ட் பெயர்களை புதிய…
மேம்படுத்தப்பட்ட புதிய 2017 நிசான் டெரானோ எஸ்யூவி கார் மார்ச் 27ந் தேதி அன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெரானோ கூடுதல் வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் மாற்றங்களை பெற்றதாக வரவுள்ளது. நிசான் டெரானோ எஸ்யுவி ரெனோ டஸ்ட்டர் காரின் அடிப்படையில் உருவான மாடலே நிசான் டெரானோ மாடலாகும். தோற்ற அமைப்பில் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை பெற்றதாக வரவுள்ளது. என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இடம்பெற வாய்ப்பில்லை. டெரானோ எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவை 84 bhp ஆற்றலுடன் மற்றும் 200 Nm டார்க்கினை வழங்குகின்றது. மேலும் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் 108 bhp மற்றும் 243 Nm டார்க் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் சக்கரங்களுக்கு…
டொயோட்டா மோட்டார் கார்பரேஷன் நிறுவனத்தின் அங்கமான லெக்சஸ் சொகுசு பிராண்டு இந்தியாவில் மார்ச் 24 , 2017ல் இன்று விற்பனைக்கு வருவதனை டொயோட்டா உறுதி செய்துள்ளது. பிரமாண்டமான எஸ்யூவிகள் மற்றும் ஹைபிரிட் சொகுசு கார்கள் லெக்சஸ் பிராண்டில் இடம்பெற்றுள்ளது. லெக்சஸ் கார்கள் 2011 ஆம் ஆண்டு முதல் எதிர்பார்க்கப்படும் லெக்சஸ் பிராண்டு கடுமையாக வரிவிதிப்பினால் தொடர்ச்சியாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முழுதாக வடிவமைக்கப்பட்ட கார்களுக்கு இறக்குமதி வரி 100 சதவீதம் உள்ளதால் தொடர்ந்து டொயோட்டா லெக்சஸ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதனை தள்ளிவைத்து வந்தது. தற்பொழுது சந்தையின் தன்மை மாறியுள்ளதாலும் சொகுசு கார்கள் விற்பனை அதிகரித்து வருவதனால் லெக்சஸ் பிராண்டில் கார்களை விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்தியா லெக்சஸ் லெக்சஸ் பிராண்டில் செடான் , எஸ்யூவி, கூபே ஹைபிரிட் மற்றும் பெர்ஃபாமென்ஸ்ரக கார்கள் விற்பனையில் உள்ளது. பிராமண்டமான சொகுசு எஸ்யூவி காரான RX450 மற்றும் ES300h ஹைபிரிட் செடான் கார்கள் முதற்கட்டமாக…
இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கே10 காரில் கூடுதல் வசதிகளை ஆல்டோ K10 பிளஸ் சிறப்பு எடிசன் மாடல் ரூ. 3.40 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆல்டோ K10 பிளஸ் 10 கூடுதலான வசதிகளை பெற்றதாக ஆல்டோ K10 பிளஸ் விற்பனைக்கு வந்துள்ளது. டாப் வேரியண்டான ZXi-ல் மட்டுமே கே10 பிளஸ் பதிப்பு கிடைக்கும். ரூ.3.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலையில் இந்த காரின் விலை தொடங்குகின்றது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ரெனோ க்விட் கிளைம்பர் காரின் போட்டியை ஈடுகட்டும் வகையிலே அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆல்டோ K10 பிளஸ் மாடலில் சிறப்பு வசதிகள் 10 அம்சங்களை மாருதி இணைத்துள்ளது. ரியர் ஸ்பாய்லர் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார். க்ரோம் வீல் ஆர்ச் பனிவிளக்கு அறையில் க்ரோம் கார்னிஷ் பியானோ வண்ணத்திலான ஸ்டீரீயோ சென்ட்ரல் லாக்கிங் பாடி நிறத்தில் கதவு கைப்பிடிகள் மற்றும் ஓஆர்விஎம் முன்பக்க ஜன்னல்களுக்கு பவர் வின்டோ…
கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா நவி மினி பைக் விற்பனை எண்ணிக்கை 60,000 எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. நவி மினி பைக் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரின் வடிவ தாத்பரியங்களை கொண்டு நவி ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் ஹோண்டா இரு சக்கர வாகன பிரிவினால் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாகும். வருடத்திற்கு 25,000 என்கின்ற எண்ணிக்கையில் விற்பனை செய்யவதற்கே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஹோண்டா இந்தியா பிரிவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் வடிவமைக்கப்பட்டு முதன்முறையாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கின் வாயிலாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோ ஸ்கூட்டர் மாடலில் 7.8 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 109.2cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் காப்புரிமை பெற பெற்ற ஹோண்டா ஈக்கோ டெக்னாலாஜி நுட்பம் பெற்ற என்ஜினாகும். இதில் பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்வதற்கு சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.…