சாதாரண ரெனோ க்விட் காரில் தோற்ற மாற்றத்துடன் கூடுதல் வசதிகளுடன் ரெனோ க்விட் கிளைம்பர் ரூ.4.30 லட்சத்தில் விற்பனைக்கு வந்ததுள்ளது. ரெனோ க்விட் கிளைம்பர் தோற்ற அமைப்பில் கம்பீரத்தை அதிகரிக்கும் நோக்கில் கூடுதலான வசதிகளை கொண்ட ரெனோ க்விட் கிளைம்பர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 1.0லி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. 1.30 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ள ரெனோ க்விட் காரில் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவிதமான என்ஜின் ஆப்ஷனுகளுடன் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள கூடுதல் துனை கருவிகள் மற்றும் இன்டிரியரில் சில கூடுதல் வசதிகள் பெற்று விளங்குகின்ற கிளைம்பர் காரில் 67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும்…
Author: MR.Durai
7 இருக்கைகளை கொண்ட சாங்யாங் XAVL எஸ்யூவி கான்செப்ட் மாடல் 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. சிறிய ரக XAV எஸ்யூவி கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டதே XAVL மாடலாகும். சாங்யாங் XAVL எஸ்யூவி 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் தலைமுறை கோரான்டோ எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள XAVL மாடலில் நவீன கார் தொடர்புகள் , பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களாக பாதசாரிகள் , ஒட்டுநர் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தும் மாடலாக இந்த எஸ்யூவி விளங்கும். இந்த கான்செப்ட் காரின் நீளம் 4630மிமீ, அகலம் 1866மிமீ மற்றும் உயரம் 1640மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2775மிமீ ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றதாக வரவுள்ள மாடலில் ஹைபிரிட் ஆப்ஷனும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட…
தானியங்கி முறையில் இயங்கும் மூன்று சக்கரங்களை கொண்ட டொயோட்டா நிறுவனத்தின் i-TRIL கான்செப்ட் மாடல் 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பவர்டெர்யின் கொண்டு முழுசார்ஜ் உதவியுடன் 300 கிமீ வரை பயணிக்கலாம். i-TRIL கான்செப்ட் எதிர்கால நகர பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 2+1 என மூன்று சக்கரங்களை கொண்ட மாடலாக வலம் வரவுள்ள இந்த கான்செப்ட் எலக்ட்ரிக் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் போன்றவற்றுக்கு மாற்றாக குறைந்த வேகத்தின் சிறப்பான அனுபவத்தினை வழங்கும் மாடலாக i-TRIL விளங்கும் என டொயோட்டா தெரிவித்துள்ளது. 1+2 என்ற இருக்கை அமைப்பில் அதாவது மூன்று இருக்கைகளை கொண்ட இந்த கான்செப்ட் மாடலில் இடம்பெற உள்ள எலக்ட்ரிக் சார்ந்த என்ஜின் வாயிலாக முழுமையான சார்ஜ் செய்யப்பட்டிருந்தால் சுமார் 185 மைல்கள் அதாவது கிட்டதிட்ட 300 கிமீ தொலைவு வரை பயணிக்கும் வகையில் இந்த கான்செப்ட் மாடலின் எடை சுமார் 600 கிலோ எடை மட்டுமே…
பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரில் 631ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் மாடலாக புதிய ஹூராகேன் விளங்குகின்றது. லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாடலில் 5.2 லிட்டர் வி10 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் 631 hp பவர் மற்றும் 600 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதன் பவரை சக்கரங்களுக்கு 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஹூராகேன் பெர்ஃபாமென்டி சூப்பர் கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 2.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கிமீ ஆகும். இலகு எடை மற்றும் உயர்தர பலமிக்க கார்பன் ஃபைபர் கம்போசிட் உலோகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த காரில் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் வடிவத்தை செயல்பாட்டினை கொண்டதாக விளங்குகின்றது. மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டில் டிஜிட்டல் காக்பிட் திரையுடன் பல்வேறு விதமான ஆப்ஷன்களுடன் ஆப்பிள் கார்…
2017 ஜெனிவா மோட்டார் கண்காட்சி அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வால்வோ XC60 எஸ்யூவி மாடல் உலகின் மிக பாதுகாப்பான கார்களில் முன்னணி வகிக்கும் மாடலாக விளங்கும். புதிய வால்வோ எக்ஸ்சி60 இந்தியாவில் இந்த வருட இறுதியில் விற்பனைக்கு வரலாம். வால்வோ XC60 எஸ்யூவி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வால்வோ எக்ஸ்சி60 காரின் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலாக வந்துள்ள புதிய எஸ்யூவி வால்வோ நிறுவனத்தின் பெரிய கார்களுக்கான SPA பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும். எக்ஸ்சி60 காரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மாடலாக விளங்குகின்றது. குறிப்பாக இந்த காரில் அமைந்துள்ள நவீன செமி ஆட்டோமேட்டிக் அமைப்பின் வாயிலாக 130 கிமீ வேகத்திலும் பிரேக் ஆசில்ரேட்டர் மற்றும் ஸ்டீயரிங் போன்றவற்றை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தும்அமைப்பினை கொண்டதாக விளங்குகின்றது. முன்பக்க மோதல் , பாதசாரிகள் பாதுகாப்பு போன்ற பல வசதிகளை பெற்றதாக உள்ளது. எக்ஸ்சி90 காரின் தோற்ற உந்துதலை அடிப்படையாக கொண்ட…
அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள டாடா டிகோர் செடான் கார் 2017 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டியாகோ காரின் அடிப்படையில் உருவான மாடலாக டிகோர் விளங்குகின்றது. டாடா டிகோர் கார் கைட் 5 என அழைக்கப்பட்டு செடான் காரின் பெயரையே டிகோர் என டாடா சமீபத்தில் மாற்றியது. தற்பொழுது சுவிஸ் நாட்டில் நடந்த வருகின்ற ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் டிகோர் ஜெனிவா எடிசன் மாடல் காட்சிக்கு வந்துள்ளது. டியாகோ காரின் அடிப்படையிலே உருவாக்கப்பட்ட இம்பேக்ட் டிசைன் தாத்பரியங்களை பெற்றுள்ள இந்த மாடலில் கூபே கார்களில் இடம்பெற்றுள்ளதை போன்ற செடான் ரக கார்களுக்கு உரித்தான பூட் டிசைன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டைல்பேக் (Styleback) என டாடா அழைக்கின்றது. 69bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல்…