இந்திய சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்ற மிட்சுபிஷி லேன்சர் கார் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் உள்ளதாக மிட்சுபிஷி , நிஸான்- ரெனோ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி காரல் கோஸன் தெரிவித்துள்ளார். மிட்சுபிஷி லேனசர் சமீபத்தில் ஆட்டோகார் இந்தியா இணையதளத்துக்கு அளித்துள்ள பிரத்யேகமான பேட்டியில் இந்திய சந்தையில் மிட்சுபிஷி நிறுவனத்தை மிக சிறப்பான முறையில் நிலை நிறுத்தும் நோக்கில் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தையில் உள்ள மிட்சுபிஷி ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்த பஜெரோ மற்றும் லேன்சர் கார்கள் அமோக வரவேற்பினை பெற்றிருந்த நிலையில் சில வருடங்களில் வெளியான பல புதிய மாடல்கள் லேன்சர் மாடலை ஒரங்கட்டியது. மிட்சுபிஷி பெரிதாக இந்திய சந்தையில் கவனம் செலுத்த தவறியது. தற்பொழுது முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடல்களாக மான்டிரியோ எஸ்யூவி மற்றும் பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி மாடலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ கார்கள் வடிவமைக்கப்பட்ட…
Author: MR.Durai
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் டாடா , ஃபோக்ஸ்வேகன் குழுமம் மற்றும் ஸ்கோடா இணைந்து புதிய வாகனங்களை தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. டாடா , ஃபோக்ஸ்வேகன் இந்த ஒப்பந்தம் மூன்று நிறுவனங்களுக்கு இடையில் உள்ள பலவேறு விதமான துட்பங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக ஸ்கோடா செயல்பட்டாலும் இந்த கூட்டணியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை காட்டிலும் ஸ்கோடாவே மிகுந்த முக்கியம் பெறுகின்றது. டாடா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய டாமோ துனை பிராண்டில் உருவாக்கப்பட்டுள்ள அட்வான்ஸ்டு மாடுலர் பிளாட்பாரத்தின் (advanced modular platform -AMP) நுட்பங்களை இரு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளது. டாடா நிறுவனத்தின் 6 பிளாட்ஃபாரங்களில் இருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது. அதில் ஒன்றுதான் ஏஎம்பி ஆகும். இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் குழுமங்கள் தங்களுடைய என்ஜின் சார்ந்த நுட்பங்கள் மற்றும் நவீன நுட்பங்களை பகிர்ந்து…
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் 2017-ம் ஆண்டின் உலகின் சிறந்த கார் தேர்வு செய்யப்பட உள்ள கார்களில் முதல் மூன்று கார்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த கார் 2017 உலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்களின் 23 நாடுகளை சேர்ந்த 75 சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வு செய்யப்படும் இந்த கார்கள் கடந்த 6 மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வருகின்றது. வருகின்ற ஏப்ரல் 13, 2017ல் வெற்றி பெற்ற கார்களின் விபரம் நியூயார்க் ஆட்டோ ஷோ அரங்கில் வெளியிடப்பட உள்ளது. உலகின் சிறந்த கார் 2017ல் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள க்யூ5 , எஃப் பேஸ் மற்றும் டிகுவான் கார்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. மேலும் படிக்க – 2015 ம் ஆண்டின் உலகின் சிறந்த கார் விபரம் உலகின் சிறந்த கார் மட்டுமல்லாமல் உலகின் சிறந்த சொகுசு கார் , உலகின் சிறந்த…
2017 புதிய ஆடி க்யூ3 எஸ்யூவி கார் ரூ.34.20 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. குவாட்ரோ மற்றும் முன்பக்க வீல் டிரைவ் ஆப்ஷனுடன் முந்தைய மாடலை விட கூடுதலான ஆற்றலை வெளிப்படுத்தும் மாடலாக க்யூ3 எஸ்யூவி வந்துள்ளது. புதிய ஆடி க்யூ3 ஆக்ரோஷமான தோற்றத்தை கொண்ட க்யூ3 எஸ்யூவி மாடலில் முகப்பு பம்பர்கள் , ஏர்டேம் போன்றவை மேம்படுத்தப்பட்டு இருப்பதுடன் பல்வேறு வசதிகளை பெற்றதாக க்யூ3 விளங்குகின்றது. குறிப்பாக பனோரமிக் சூரிய மேற்கூறை, 17 அங்குல V ஸ்போக் அலாய் வீல், எல்இடி விளக்குகளை கொண்ட முகப்பு விளக்கு , என பல மேம்பட்ட அம்சங்களை பெற்றதாக 2017 Q3 மாடல் விளங்குகின்றது. இன்டிரியரில் உயர்தர லெதர் இருக்கைகளுடன் , எலக்ட்ரிகல் அட்ஜஸ்மெண்ட் நிரந்தரம்சமாக பெற்ற முன்பக்க இருக்கைகள், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், MMI நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்பட பல வசதிகளை பெற்று விளங்குகின்றது. க்யூ3 எஸ்யூவி…
சாதாரண ரெனோ க்விட் காரில் தோற்ற மாற்றத்துடன் கூடுதல் வசதிகளுடன் ரெனோ க்விட் கிளைம்பர் ரூ.4.30 லட்சத்தில் விற்பனைக்கு வந்ததுள்ளது. ரெனோ க்விட் கிளைம்பர் தோற்ற அமைப்பில் கம்பீரத்தை அதிகரிக்கும் நோக்கில் கூடுதலான வசதிகளை கொண்ட ரெனோ க்விட் கிளைம்பர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 1.0லி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. 1.30 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ள ரெனோ க்விட் காரில் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவிதமான என்ஜின் ஆப்ஷனுகளுடன் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள கூடுதல் துனை கருவிகள் மற்றும் இன்டிரியரில் சில கூடுதல் வசதிகள் பெற்று விளங்குகின்ற கிளைம்பர் காரில் 67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும்…
7 இருக்கைகளை கொண்ட சாங்யாங் XAVL எஸ்யூவி கான்செப்ட் மாடல் 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. சிறிய ரக XAV எஸ்யூவி கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டதே XAVL மாடலாகும். சாங்யாங் XAVL எஸ்யூவி 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் தலைமுறை கோரான்டோ எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள XAVL மாடலில் நவீன கார் தொடர்புகள் , பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களாக பாதசாரிகள் , ஒட்டுநர் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தும் மாடலாக இந்த எஸ்யூவி விளங்கும். இந்த கான்செப்ட் காரின் நீளம் 4630மிமீ, அகலம் 1866மிமீ மற்றும் உயரம் 1640மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2775மிமீ ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றதாக வரவுள்ள மாடலில் ஹைபிரிட் ஆப்ஷனும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட…