Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டாடா மோட்டார்சின் டாமோ ரேஸ்மோ கார் 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேஸ்மோ கார் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய மாடலாக விளங்கும் என டாடா தெரிவித்துள்ளது. டாமோ ரேஸ்மோ டாடா நிறுவனம் 20வது முறையாக பங்கேற்றுள்ள 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டாடா ரேஸ்மோ காரில் இரண்டு இருக்கைகளுடன் மிட் என்ஜின் ஆப்ஷனை பெற்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கனெக்டேட் கார் நுட்பத்தினை பெற்ற முதல் டாடா மாடலாக ரேஸ்மோ விளங்குகின்றது. ஸ்போர்ட்டிவ் கார்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஆக்ரோஷமான தோற்றத்தை வெளிப்பட்டுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடாவின் ரேஸ்மோ காரின் முகப்பில் பை எல்இடி வட்ட வடிவ விளக்குகளை பெற்று விளங்குகின்றது. மேலே உயர்ந்த திறக்கும் பறக்கும் றெக்கை போன்ற அமைந்த கதவுகளுடன் வந்துள்ள இந்த காரின் முன்புறத்தில் 205/50 R17 ட்யூப்லெஸ் ரேடியல் டயர் மற்றும் பின்புறத்தில் 235/45 R18 ட்யூப்லெஸ் ரேடியல்…

Read More

இந்தியாவின் தொடக்கநிலை வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ரெனோ க்விட் காரில் புதிதாக க்விட் கிளைம்பர் மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வருவதனை உறுதி செய்யும் வகையில் நுட்ப விபரங்கள் அடங்கி தகவல்கள் வெளியாகியுள்ளது. ரெனோ க்விட் கிளைம்பர் 0.8 லிட்டர் ,1 லிட்டர் மற்றும் ஏஎம்டி போன்ற மாடல்களில் விற்பனையில் உள்ள க்விட் காரில் கூடுதலாக கிளைம்பர் மற்றும் ரேசர் போன்ற கான்செப்ட் மாடல்களை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் ரெனால்ட் அறிமுகம் செய்திருந்தது. சாதரன மாடல்களில் இருந்து வித்தியாசத்தை வெளிப்படுத்தும் வகையில் கூடுதலான தோற்ற மாற்றங்களை பெற்றதாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே போன்ற வெளிதோற்ற அமைப்பினை பெற்று வந்துள்ளது. வெளியாகியுள்ள நீல வண்ணத்திலான க்விட் காரில் ஒஆர்விஎம் , ரூஃப் ரெயில்கள் , முன்பக்க பம்பர் கிளாடிங் போன்றவற்றில் ஆரஞ்சு வண்ணத்தை பெற்றுள்ளது. 15 அங்குல அலாய் வீல் ,…

Read More

உலகின் மிகவும் பழமையான போர்கப்பலும் இந்தியாவின் வரலாற்றை பறைசாற்றும் ஐஎன்எஸ் விராட் விமானந்தாங்கி கப்பல் இன்றுடன் தனது சேவையிலிருந்து பிரியா விடைபெறுகின்றது. 1944 ஆம் ஆண்டு தொடங்கி ஐஎன்எஸ் விராட் வரலாறு 2017 ஆம் ஆண்டு நிறைவடைகின்றது. ஹெர்மிஸ் முதல் ஐஎன்எஸ் விராட் வரை 1944 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஹெச்.எம்.எஸ்.ஹெர்மிஸ் என பெயரிடப்பட்டு கட்டுமானத்தை தொடங்கிய ஒரே வருடத்தில் பாதியிலே நிறுத்தப்பட்டது. மீண்டும் 1952 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 16 பிப்பரவரி 1953 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் முழுமையான கட்டுமானம் 1958 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டு 19 நவம்பர் 1959 அன்று ஹெச்.எம்.எஸ்.ஹெர்மிஸ் என்ற பெயரில் இங்கிலாந்து விமான படையில் சேர்க்கப்பட்டது. ஹெச்.எம்.எஸ்.ஹெர்மிஸ் கப்பல் படம் 1982 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணுவத்தால் விடை கொடுக்க முடிவு செய்யப்பட்டு 1984 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் விடைபெற்றது. 1987 ஆம் இந்தியா இந்த விமானதாங்கி போர்க்கப்பலை வாங்கி 12…

Read More

ரூ. 4.83 லட்சம் விலையில் டாடா டியாகோ ஏஎம்டி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. டாப் வேரியன்ட் XZA  மற்றும்  XTA என இரு பிரிவில் வந்துள்ள டியாகோ ஏஎம்டி மாடலில் ஸ்போர்ட் மற்றும் சிட்டி என இரு விதமான மோடினை பெற்றுள்ளது. டியாகோ ஏஎம்டி பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷன்களிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் எதிர்பார்த்த நிலையில் பெட்ரோல் மாடலின் ஒரே வேரியன்ட் விபரங்கள் மட்டுமே வந்துள்ளது.. டீசல் மாடலில் தாமதமாகவோ ஏஎம்டி காரும் விற்பனைக்கு வரலாம். டாடாவின் ஸெஸ்ட் , நானோ கார்களை தொடர்ந்து மூன்றாவது ஏஎம்டி பொருத்தப்பட்ட மாடலாக டியோகோ வந்துள்ளது. 1.2 லிட்டர்  ரெவோட்ரான் எஞ்சின் வாயிலாக  84 பிஎச்பி பவருடன், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜ் தரவல்லதாக உள்ளது. புதிதாக வந்துள்ள 5 வேக ஏஎம்டி…

Read More

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் டோமினார் 400 பைக் முதற்கட்டமாக 22 நகரங்களில் கிடைத்த நிலையில் தற்பொழுதும் மேலும் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டள்ளது. டோமினார் 400 விலை தமிழகத்தில் சென்னை , கோவை நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் கூடுதலாக மதுரை மற்றும் நாகர்கோவில் நகரங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது. மேலும் புதுச்சேரியிலும் டோமினார் 400 கிடைக்க உள்ளது. இன்ஜின் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன்  34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும்.  இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.  டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். என்ஜின் – 373cc பவர் –…

Read More

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 110சிசி ஸ்கூட்டர் சந்தை பிரிவில் முன்னணி வகிக்கும் மாடலில் ஒன்றாக விளங்கும் ஜூபிடர் ஸ்கூட்டரின் அடிப்படையில் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஜூபிடர் 125 ஸ்கூட்டர் உலகின் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டராக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் சவலாக விளங்கும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலை அடிப்படையாக கொண்ட புதிய டிசைன் மற்றும் என்ஜினை பெற்ற 125சிசி மாடல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது 125சிசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆக்டிவா 12 மற்றும் ஆக்செஸ் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட உள்ள 125சிசி என்ஜின் கொண்ட மாடல் 9 hp பவரை வெளிப்படுத்தக்கூடியதாகவும் சிறப்பான மைலேஜ் பெற்றதாகவும் விளங்கும். மேலும் இந்த ஸ்கூட்டரில் எல்இடி டெயில் விளக்கு , டிஜிட்டல் கிளஸ்ட்டர் , மொபைல் சார்ஜிங் போர்ட்…

Read More