Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிதாக வந்துள்ள மாருதி பலேனோ ஆர்எஸ் காரில் இடம்பெற்றுள்ள 100hp பவரை வெளிப்படுத்தும் மாருதி பூஸ்டர்ஜெட் இன்ஜின் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் ஈக்கோபூஸ்ட் என்ஜின் போன்றவற்றை போலவே சுசூகி நிறுவனத்தின் புதிய பூஸ்டர்ஜெட் என்ஜின் குறைவான சிசி கொண்டு அதிகப்படியான பவரை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்குகின்றது. மாருதி 1.0 லிட்டர் நுட்ப விபரம் என்ஜின்  (cc) 998 அதிகபட்ச பவர் (hp@rpm) 100.5/5500 அதிகபட்ச டார்க் (Nm@rpm) 150/1700-4500 எரிபொருள் பலன் (l) 37 எரிபொருள்வகை பெட்ரோல் கேம்ஷாஃப்ட் DOHC சிலிண்டர் எண்ணிக்கை 3 குறைந்த சிசி என்ஜினில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் டர்போசார்ஜர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதிகப்படியான பவரை இந்த என்ஜின் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜின் பவர் மட்டுமல்லாமல் குறைவான மாசு உமிழ்வினையும் கொண்டதாக விளங்குகின்றது. பவர் , மாசு உமிழ்வினை தவிர மிக முக்கியமாக விளங்கும் மற்றொரு அம்சம்…

Read More

ரூ.5.01 கோடி விலையில் இந்தியாவில் லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதலான பவர் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இகோ மோடினை பெற்று விளங்குகின்றது. லம்போர்கினி அவென்டேடார் எஸ் முந்தைய காரை விட 130 சதவீத கூடுதல் டவுன் ஃபோர்ஸ் கொண்டுள்ள லம்போர்கினி அவென்டேடார் எஸ் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக விளங்குகின்றது. மேலும் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரியர் விங் வாயிலாக 50 சதவீத கூடுதல் டவுன்ஃபோர்ஸ்கிடைக்கின்றது. லம்போர்கினி அவென்டேடார் S காரில் 40 ஹெச்பி கூடுதலான பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு 740 ஹெச்பி பவர் , 690 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது. 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 விநாடிகளில் எட்டிவிடும். அவென்டேடார் எஸ் அதிகபட்ச வேகம் மணிக்கு…

Read More

இந்திய சந்தையிலிருந்து நீக்கப்பட்ட பஜாஜ் பாக்ஸர் பைக் மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகின்றது. ஆஃப்ரோடுகளுக்கு ஏற்ற  பாக்ஸர் X150 க்ராஸ் மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பஜாஜ் பாக்ஸர் மிக மோசமான விற்பனையின் காரணமாக இந்தியாவில் நீக்கப்பட்ட பஜாஜ் பாக்ஸர் பல்வேறு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பாக்ஸர் மற்றும்  பாக்ஸர் X150 க்ராஸ் பைக்குகள் கென்யா , ஜாம்பியா போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ளது. சாதரன பாக்ஸர் மாடலுக்கும்  பாக்ஸர் X150 க்ராஸ் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மட்கார்டு , பாடி கிராபிக்ஸ் உள்பட ஆஃப்ரோடு சார்ந்த அம்சங்களை பெற்றதாகவே விளங்கும். சமீபத்தில் புனேவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த பாக்ஸர் எக்ஸ் 150 மாடல் பிஎஸ்4 எஞ்சின் ஆப்ஷனுடன் சோதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. நீக்கப்பட்ட டிஸ்கவர் 150 பைக்கில் இடம்பெற்றிருந்த அதே 144.8 cc என்ஜின் 12 hp பவர் மற்றும் 12.26 Nm டார்க் வெளிப்படுத்தும்.…

Read More

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இருசக்கர வாகன விற்பனையில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில் பல்வேறு நாடுகளில் விற்பனையை தொடங்கி வருகின்றது. அதன் விளைவாக மலேசியா நாட்டில் தனது மாடல்களை களமிறக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளது. மலேசியா பஜாஜ் சமீபத்தில் பஜாஜ் அறிமுகம் செய்துள்ள டோமினார்400 பவர் க்ரூஸர் பைக் அமோக ஆதரவினை பெற்றிருப்பதுடன் சிறப்பான செயல்திறனை கொண்டதாகவும் விளங்குகின்றது. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பஜாஜ் பைக்குகள் மலேசியாவில் முதல் மாடலாக டோமினார் 400 பைக்கை களமிறக்க உள்ளது. இதுகுறித்து மணிகண்ட்ரோல் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ள பஜாஜ் ஆட்டோ வணிக மேம்பாட்டு பிரிவு தலைவர் திரு. ரவிகுமார் கூறுகையில்.. சமீபத்தில் மலேசியா சந்தைக்கும் பைக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன்  34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27…

Read More

இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி நிறுவனத்தின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனை 1 லட்சம் எண்ணிக்கையை கடந்து புதிய சாதனையை 11 மாதங்ளில் நிகழ்த்தியுள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கடந்த மார்ச் 2016ல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடுதலான வசதிகள் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது. தற்பொழுது டீசல் இன்ஜின் மாடல்கள் மட்டுமே விற்பனையில் உள்ள நிலையில் புதிதாக பெட்ரோல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களும் வரவுள்ளது. 2 லட்சம் முன்பதிவுகளை சமீபத்தில் கடந்த விட்டாரா பிரெஸ்ஸா மாதந்தோறும் சராசரியாக 8500 கார்களுக்கு மேல் விற்பனையாகி வருகின்றது. தொடர்ந்துநல்ல வரவேற்பினை தக்கவைத்துள்ளதால் காத்திருப்புகாலம் 7 மாதங்கள் வரை உள்ளது. லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் காம்பேக்ட் ரக எஸ்யூவி காராக விளங்க உள்ள விட்டாரா பிரெஸ்ஸா காரில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. 89…

Read More

வருகின்ற மார்ச் 16ந் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஹோண்டா WR-V கார் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய என்ஜின் , வசதிகள் உள்பட விலை சார்ந்த விபரங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். ஹோண்டா WR-V கார் கோவாவில் நேற்று தொடங்கியுள்ள மீடியா டிரைவ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டபிள்யூஆர்-வி காரில் உள்ள பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது. குறிப்பாக அனைத்து வேரியண்டிலும் இரண்டு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. 1. டபிள்யூஆர்-வி டிசைன் ஜாஸ் காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் ரக காரில்   பிஆர்-வி எஸ்யூவி மாடலில் உள்ளதை போன்ற ஹோண்டாவின் மிக அகலமான க்ரோம் பட்டைக்கு மத்தியில் அமைந்துள்ள ஹோண்டா லோகோ , முகப்பு விளக்கில் கருப்பு இன்ஷர்ட் , வட்ட வடிவத்தை பெற்ற பனி விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது. பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் , பாடி கிளாடிங் ,…

Read More