மஹிந்திராவின் தார் எஸ்யூவி மாடலில் கூடுதலாக 5-டோர் பெற்ற தார் அர்மடா அறிமுகம் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ ராஜேஷ் ஜெஜூரிகர் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து நாடு முழுவதும் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற தார் எஸ்யூவி 5 கதவுகளை பெற்ற மாடல் மீதான எதிர்பார்ப்பு பரவலாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கிய விபரங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது. 5 டோர் தார் எஸ்யூவி பற்றி சில முக்கிய விவரங்கள் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் mStallion என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் mHawk என்ஜின் என இருவிதமான ஆப்ஷனில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது. 5-டோர் மஹிந்திரா Thar எஸ்யூவி இண்டிரியரில் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் Adrenox கனெக்ட்டிவ் வசதிகள் இடம்பெற்றிருக்கும். 4X4 ஆல் வீல் டிரைவ் உடன் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு…
Author: நிவின் கார்த்தி
கிரெட்டாவின் அடிப்படையில் 7 இருக்கை பெற்ற ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவியின் (Hyundai Alcazar) 2024 ஆம் ஆண்டிற்கான மாடலை அடுத்த மூன்று மாதங்களுக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்பொழுது சந்தைக்கு வந்த புதிய கிரெட்டா தொடர்ந்து அமோகமான வரவேற்பினை பெற்று 60,000க்கு கூடுதலான முன்பதிவுகளுடன் ஒட்டுமொத்த கிரெட்டாவின் விற்பனை எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. ஹூண்டாயின் 7 இருக்கை பெற்ற அல்கசாரில் தொடர்ந்து 160hp வழங்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 115hp வழங்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என இரண்டு என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இருக்காது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது. 2024 மாடலில் மேம்படுத்தப்பட்ட இன்டிரியர் அமைப்பு கிரெட்டாவில் உள்ளதை போன்றே இரு பிரிவுகளை கொண்ட டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 10.25 அங்குலத்தை பெற்று வயர்லெஸ் சார்ஜிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்…
மின் வாகன சந்தையில் மூன்றாவது எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு வெளியிட எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. தற்பொழுது காமெட் EV மற்றும் ZS EV என இரு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. சமீபத்தில் ஜேஎஸ்டபிள்யூ மற்றும் எம்ஜி மோட்டார் கூட்டணி அமைத்துள்ள நிலையில் சந்தையில் கூடுதலாக தனது மாடல்களை விரிவுப்படுத்த தயாராகியுள்ளது. 2030க்குள் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 15%-20% சந்தை பங்களிப்பாக உயரக்கூடும் என எம்ஜி மோட்டார் தலைவர் உயரும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிறுவனம் எலக்ட்ரிக் காரின் நுட்பவிபரங்களை பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. MG Baojun Yep சீன சந்தையில் வெளியிடப்பட்டுள்ள எம்ஜி மோட்டாரின் SAIC குழுமத்தின் Baojun Yep எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் அனேகமாக இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. Yep மாடல் ஆனது ஏற்கனவே சந்தையில் உள்ள காமெட் எலக்ட்ரிக் காரும் Global Small Electric…
இந்தியாவின் 500-800சிசி பிரிவில் முதன்மையான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 650சிசி பைக்குகளான சூப்பர் மீட்டியோர் , கான்டினென்டினல் ஜிடி, இன்டர்செப்டார் மற்றும் ஷாட்கன் ஆகிய பைக்குகளின் என்ஜின், மைலேஜ், மற்றும் சிறப்புகள் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். தற்பொழுது 650சிசி பைக்குகளில் 4 மாடல்களின் மூலம் 97 % சந்தை மதிப்பை பெற்றுள்ளது. இந்நிறுவனம் கூடுதலாக பல்வேறு மாடல்களை அடுத்தடுத்து புதிய மாடல்களை வெளியிட திட்டமிடுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதானது, எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை தொடர்பு கொள்ளுங்கள். 2024 Royal Enfield Shotgun 650 கஸ்டமைஸ்டு மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களின் விருபத்தை நிறைவேற்றும் வகையில் பாபர் ரக ஸ்டைலை பெற்ற ராயல் என்ஃபீல்டின் ஷாட்கன் 650 பைக் மாடலில் பேரலல் ட்வீன் 648சிசி என்ஜினை பெற்றதாக அமைந்துள்ளது. ஸ்டென்சில் வெள்ளை, பிளாஸ்மா நீலம், பச்சை டிரில்…
மேம்படுத்தப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கூடுதலாக சில மாற்றங்களை பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் டாமினார் 400 மற்றும் டாமினார் 250 பைக்குகள் விற்பனைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிடப்படலாம். டாமினார் 400 பைக்கில் தற்பொழுதுள்ள 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு மாற்றாக புதிய டியூக் 390 மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 399சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஒரு சில மாடல்களில் மட்டுமே 373சிசி என்ஜின் பயன்படுத்தபட்டு வரும் நிலையில் படிப்படியாக இந்த என்ஜின் விடுவிக்கப்பட்டு வருகின்றது. எனவே, புதிய டாமினார் 400 பைக்கில் அதிகபட்சமாக 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு ஆறு வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்டிருக்கும். ஏற்கனவே, இந்த மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ரைட் கனெக்ட் ஆப் வசதியை…
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யூவி மாடலின் அடிப்படையில் பெர்ஃபாமென்ஸ் ரக கிரெட்டா N-line விற்பனைக்கு மார்ச் மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.50,000-ரூ.80,000 வரை விலை கூடுதலாக ரூ.21 லட்சத்துக்குள் துவங்கலாம். சந்தையில் 10,00,000க்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள கிரெட்டா இந்தியாவின் முதன்மையான நடுத்தர எஸ்யூவி மாடலாக விளங்கி வருகின்றது. சமீபத்தில் வெளியான நியூ கிரெட்டா முன்பதிவு எண்ணிக்கை 60,000 கடந்துள்ளதை தொடர்ந்து புதியதாக வரவுள்ள கிரெட்டா என்-லைன் மாடலின் விளம்பரப் படப்பிடிப்பு படங்கள் சில வாரங்களுக்கு முன்பாக வெளியானது கிரெட்டா என்-லைன் பற்றி எதிர்பார்ப்புகள் என்ன: டாப் கிரெட்டா வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டு 253 Nm டார்க் மற்றும் 160 hp பவரை வழங்குவதுடன் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற உள்ளது.…
இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற 2024 மாடல்களில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 ஸ்கூட்டர் மாடல்களின் என்ஜின் விபரம், முக்கிய அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பற்றி முக்கிய தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம். கொடுக்கப்பட்டுள்ள மைலேஜ் விபரம் ஆனது பயனர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. சராசரியாக 110-125சிசி பிரிவில் உள்ள ஸ்கூட்டர்கள் மிக சிறப்பாக 48 முதல் 55 கிமீ வரை சராசரியாகவும் ஒரு சில மாடல்கள் லிட்டருக்கு 60 கிமீ வரையும் வழங்குகின்றன. சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட இந்த மாடல்களின் மைலேஜ் என்பது ஒவ்வொரு தனிபட்ட நபர்களின் ஓட்டுதல் பழக்க வழக்கத்திற்கு ஏற்றதாக மாறுபடக்கூடும். Yamaha Ray ZR 125 Fi யமஹா நிறுவனம் 125சிசி சந்தையில் விற்பனை செய்து வருகின்ற ரே ZR 125 Fi மற்றும் ஃபேசினோ உள்ளிட்ட மாடல்களில் பொதுவாக 8.2 hp பவரை வழங்கும் 125சிசி Fi என்ஜின் அதிகபட்சமாக…
பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் தற்பொழுது டாப் மாடலாக உள்ள பல்சர் N250 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. வரவுள்ள புதிய என்250ல் புதுப்பிக்கப்பட்ட நிறங்கள், மேம்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற உள்ளது. சமீபத்தில் வெளியான பல்சர் என்150 முதல் என்எஸ்200 பைக் வரை இடம்பெற்றிருக்கின்ற டிஜிட்டல் கிளஸ்ட்டரின் மூலம் ரைட் கனெக்ட் செயிலி வாயிலாக ஸ்மார்ட்போனை இணைத்தால் அழைப்புகளை ஏற்க அல்லது நிரகரிக்கும் வசதி, எஸ்எம்எஸ் அலர்ட் உட்பட டர்ன் பை டர்ன் நேவிகேஷன் என பல்வேறு வசதிகளை பெற முடியும். இந்த பைக் மாடலில் 249cc, SOHC, ஆயில்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது. முன்பக்கத்தில் உள்ள சஸ்பென்ஷனில் டெலஸ்கோபிக் ஃபோர்கிற்கு மாற்றாக அப்சைடு டவுன் ஃபோர்க் ஆனது…
விற்பனையில் கிடைக்கின்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மாடலுக்கு ரூ.42,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கின்றோம். நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் பற்றி பல்வேறு முக்கிய விபரங்களை நாம் தொகுத்து வழங்கி உள்ள நிலையில் ஜப்பானில் இந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்தியாவில் புதிய 2024 மாடல் உற்பத்தி துவங்கப்பட உள்ளதால் சலுகைகளை சந்தையில் உள்ள மாடலுக்கு அறிவித்துள்ளது. ரூ.42,000 வரை அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் ரொக்க தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகளும் உள்ளன. ரூபாய் 15,000 வரை ரொக்க தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 20,000, மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 7,000 என வழங்கப்படும் சலுகை நடப்பு நவம்பர் மாதத்துக்கு மட்டுமே பொருந்தும். வரவுள்ள புதிய மாருதி ஸ்விஃப்ட் பற்றி சில தகவல்; புதிய மூன்று சிலிண்டர் Z12E 1.2 லிட்டர்…