மஹிந்திராவின் புதிய XUV700 எஸ்யூவி மாடலில் கூடுதலாக பெட்ரோல் என்ஜினில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை குறைந்த விலையில் ஆரம்பநிலை MX வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. சந்தையில் உள்ள நடுத்தர எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வரவுள்ள இந்த புதிய வேரியண்டின் விலை அனேகமாக ரூ.15.80 லட்சம் விலையில் வெளியிடப்படலாம். இந்த விலை போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தலாம். தற்பொழுது மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆரம்ப விலை ரூ.13.59 லட்சம் மற்றும் டீசல் வேரியண்ட் ரூ.14.59 லட்சத்தில் துவங்குகின்றது. XUV700 ஆட்டோமேடிக் ஆனது AX டிரிம்களில் உள்ள AX3, AX5 மற்றும் AX7 ஆகியவற்றில் மட்டுமே கிடைக்கின்றது இந்த எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 197 bhp மற்றும் 380 Nm டார்க்கை உருவாக்குகிறது, அதே நேரத்தில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் 153 bhp மற்றும் 360 Nm டார்க்கை உருவாக்குகிறது. ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 182 bhp மற்றும்…
Author: நிவின் கார்த்தி
கடந்த ஜனவரி 2024 மாதந்திர விற்பனையில் டாப் 10 இடங்களை கைப்பற்றி நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கையில் மாருதி சுசூகி முதலிடத்தில் 1,66,802 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே ஜனவரி 2023ல் விற்பனை 1,47,348 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. மாருதியின் விற்பனை எணிக்கையில் வேகன்ஆர், ஃபிரான்க்ஸ், டிசையர் மற்றும் பலேனோ உட்பட ஸ்விஃப்ட், கிராண்ட் விட்டாரா ஆகியவை அமோக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. ஆனால் ஜிம்னி, சியாஸ் விற்பனை மிக மோசமான வீழ்ச்சி சந்தித்திருப்பதுடன், ஆல்டோ விற்பனை கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 55 % வீழ்ச்சி கண்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இரண்டாமிடத்தில் 57,115 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே ஜனவரி 2023ல் விற்பனை 50,106 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. இந்நிறுவன எலைட் ஐ20, கிராண்ட் ஐ10 விற்பனை சரிவடைந்துள்ளது. அடுத்த ஹூண்டாய் கிரெட்டா விற்பனை எண்ணிக்கை முக்கிய பங்காற்றுகின்றது. டாடா மோட்டார்ஸ்…
கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் எப்பொழுது விற்பனைக்கு வரும் மற்றும் என்ஜின் உட்பட பல்வேறு மாற்றங்களை பற்றி தொகுத்து அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் வெளியான ஹிமாலயன் 450 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ள புதிய 390 அட்வென்ச்சரின் தோற்ற அமைப்பு ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற 390 டியூக் பைக்கில் உள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளுவது உறுதியாகியுள்ளது. கேடிஎம் 390 டியூக்கில் உள்ள 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் கூடுதலாக, சிலிப் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் பெறுகின்றது. சில மேம்பாடுகளை பெற்ற ஸ்டீல் டெர்லிஸ் சேஸ் பெற்றதாகவும் சப் ஃபிரேம் அட்வென்ச்சருக்கு ஏற்ற வகையில் மாறுபட்டதாக அமைந்துள்ளது. முன்பக்கத்தில் பீரிலோட் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையிலான…
டாடா மோட்டார்ஸ் வெளியிட உள்ள ஸ்போர்ட்டிவ் கூபே ரக ஸ்டைல் பெற்ற கர்வ் (Tata Curvv) கான்செப்ட்டின் அடிப்படையிலான மாடலில் முதலில் எலக்ட்ரிக், அடுத்து ICE என விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கான்செப்ட்டில் கர்வ் என வெளியான நிலையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு பாரத் மொபைலிட்டி அரங்கில் இந்த கான்செப்ட் உற்பத்தி நிலையை எட்டியது. வரும் 2024-2025 ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர் 2024) விற்பனைக்கு கர்வ்.இவி வெளியாக உள்ளது. எலக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு வந்த அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு அதாவது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதத்தில் கர்வ் ICE விற்பனைக்கு வெளியிடப்படலாம். டாடா கர்வ் EV சந்தையில் உள்ள நெக்ஸான்.இவி காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ள Curvv.ev ஆனது சமீபத்தில் வெளியான பஞ்ச்.இவி காரில் இடம்பெற்றிருந்த புதிய Acti-EV பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ளதால் 40 முதல்…
டாடா மோட்டார்சின் விற்பனை செய்து வருகின்ற டிகோர் காரில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான ஆப்ஷனில் ரூ.6.30 லட்சம் முதல் ரூ.9.50 லட்சம் வரை கிடைக்கின்ற நிலையில் முக்கிய தகவல்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் இந்திய சந்தையின் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற சிஎன்ஜி மாடலை பெற்றதாக டிகோர் மற்றும் டியாகோவில் விற்பனைக்கு வெளியான நிலையில் இரண்டு மாடல்களும் பொதுவாக ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. டாடா டிகோர் செடான் ரக டிகோர் காரில் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களை முன்புறத்தில் பெற்று ஏரோ ஸ்டைல் அம்சங்களை பம்பரை கொண்டுள்ளது. 14 அங்குல ஸ்டீல் வீல் மற்றும் டாப் வேரியண்டில் 14 அங்குல அலாய் வீல் கொண்டுள்ளது. 5 இருக்கைகள் பெற்றுள்ள மாடலின் டாப் வேரியண்டில் டூயல் டோன் கொண்டுள்ள டேஸ்போர்டில் 6.35 செ.மீ டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 17.78 செ.மீ ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை…
இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ரோட்மாஸ்டர் எலைட் பைக்கின் விலை $41,999 ( ரூ.34.85 லட்சம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. சர்வதேச அளவில் வெறும் 350 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்க உள்ள இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட்டின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் இந்த மாடலை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவன இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது டீலரை அனுகலாம். ரோட்மாஸ்டர் எலைட் மாடலில் உள்ள தண்டர் ஸ்ட்ரோம் 116 V-ட்வீன் 1890cc ஏர் கூல்டு இயந்திரன் அதிகபட்ச குதிரைத்திறன் 84.78hp மற்றும் 170Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சில கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் பாடல்களை கேட்பதற்க்கு என பிரத்தியேகமான 12 ஸ்பீக்கர்கள், சேடில்பேக் மற்றும் டாப் பாக்ஸ் மூலம் 136 லிட்டர் கொள்ளளவு பெற்ற ஸ்டோரேஜ் வசதியுடன் இருக்கையை ஹீட்…
மாருதி சுசூகியின் நெக்ஸா ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற ஃபிரான்க்ஸ் (Maruti Fronx) கிராஸ்ஓவரின் 2023 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி கிடைகின்றது. தள்ளுபடியை தவிர கூடுதலாக பல்வேறு ஆக்ஸசெரீஸ் இணைக்கப்பட மாருதி ஃபிரான்க்ஸ் டர்போ Velocity எடிசனும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த கூடுதல் ஆக்செரீஸ் விலை ரூ.43,000 மதிப்பில் ஸ்டைலிங் மாற்றங்களை மட்டுமே வழங்குகின்றது. Maruti Fronx விற்பனைக்கு வந்த குறைந்த காலகட்டத்தில் 1,00,000 விற்பனை இலக்கை கடந்த மாருதி ஃபிரான்க்ஸ் காரில் உள்ள டர்போ மாடல் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறும். மாருதி Fronx டர்போ-பெட்ரோல் வகைகளுக்கான சிறப்பு விளாசிட்டி பதிப்பு டெல்டா+, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கின்றது. MY2023 டர்போ மாடலுக்கு ரொக்க தள்ளுபடி…
ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அமேஸ் மற்றும் சிட்டி என இரு மாடல்களுக்கும் வேரியண்ட் அடிப்படையில் மாறுபட்ட சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலை தள்ளுபடி பல்வேறு காரணங்கள் மற்றும் டீலரை பொறுத்து மாறுபடும். சிட்டி 2023 ஆண்டிற்கான மாடலுக்கு ஒரு சில வேரியண்டுக்கு ரூ.1.10 லட்சம் வரை கிடைக்கின்றது. அவற்றில் ரொக்க தள்ளுபடியாக ரூ. 25,000 மற்றும் ஆக்ஸசெரீஸ் ரூ.27,000 நீட்டிக்கப்பட்ட வாரண்டி கட்டண சலுகை ரூ.13,651 மற்றும் கார்ப்பரேட் சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்பெஷல் சலுகை ஆகியவற்றை வழங்குகின்றது. 2024 ஆம் ஆண்டிற்கான ஹோண்டா சிட்டி காருக்கும் அதிகபட்சமாக ரூ.96,500 வரை வழங்கப்படுகின்றது. இந்த மாடலுக்கும் ரொக்க தள்ளுபடி உட்பட வாரண்டி என பல்வேறு ஆகஸசெரீஸ் வழங்குகின்றது. அடுத்து, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற அமேஸ் செடானின் 2023 மாடலுக்கு ரூ.77,000 முதல் ரூ.97,000 வழங்குகின்றது. அடுத்து 2024 அமேஸ் மாடலுக்கு ரூ.77,000 முதல் ரூ.87,000 வரை கிடைக்கின்றது. மேலே…
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் மாடல்களில் முதன்மையாக உள்ள மாருதி சுசூகியின் டிசையர் செடான் காரின் சாலை சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ள டிசையர் காரில் பல்வேறு மேம்பாடுகள் பெற்றிருக்கும். 2024 Maruti Swift Dzire வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஸ்விஃப்ட் காரை தொடர்ந்து டிசையர் உடனடியாக விற்பனைக்கு வெளியாக வாய்ப்புள்ளது. தோற்ற அமைப்பில் ஜப்பானிய சந்தையில் வெளியிடப்பட்ட ஸ்விஃப்ட் காரை போலவே அமைந்திருக்க உள்ள டிசையர் முன்புறத்தில் புதுப்பிகப்பட்ட கிரில் மற்றும் நேரத்தியான ஹெட்லைட் அமைப்பினை கொண்டுள்ளது. பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட 5 ஸ்போக் கொண்ட அலாய் வீல் மற்றும் டிசைனில் எந்த மாற்றமும் இல்லால் வரக்கூடும். பின்புறத்தில் தொடர்ந்து தற்பொழுது உள்ள டிசையரை போன்றே செடானுக்கு உரித்தான அம்சங்கள் புதிய எல்இடி டெயில் லைட்…