பண்டிகை காலத்தை முன்னிட்டு பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற X7 காரின் அடிப்படையில் சிக்னேச்சர் எடிசனை விற்பனைக்கு ரூ.1,33,00,000 வெளியிட்டுள்ள இந்த பதிப்பு குறைந்த எண்ணிக்கையில் மட்டும் டெலிவரி வழங்க உள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற xDrive40i வேரியண்டின் அடிப்படையில் ரூபாய் 3 லட்சம் வரை கூடுதலான விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மாடலில் தான்சானைட் நீலம் மற்றும் டிராவிட் கிரே என இரு நிறங்களுடன் சில சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது குறிப்பாக கிரைஸ்டல் கட்டிங் கிளாஸ் எல்இடி ஹெட்லைட் மற்றும் பின்புறத்திலும் எல்இடி டெயில்லைட் புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. இன்டீரியரில் சிறிய அளவிலான மாற்றங்களில் ஒன்றாக லெதர் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது. மற்றபடி இந்த மாடலிலும் வழக்கமான வசதிகள் தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 381 hp பவர் மற்றும் 502Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் AWD ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.
Author: நிவின் கார்த்தி
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி செலக்ட் (MG Select) என்ற பெயரில் டீலர்களை துவங்க திட்டமிட்டு இருக்கின்றது. முதற்கட்டமாக வருகின்ற 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டீலர்கள் துவங்கப்பட்டு உடனடியாக டெலிவரி தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இந்த டீலர்களில் குறிப்பிட்ட விலைக்கு மேல் என்று வரையறுக்கப்படாமல் ஆடம்பர வசதிகள் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட New Energy Vehicles வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த டீலர்களில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்கள் இதற்கு பிரத்தியேகமான நெட்வொர்க்கை நிறுவனம் உருவாக்க திட்டமிட்டு இருக்கின்றது. இதுபோன்ற டீலர் நெட்வொர்க்கை ஏற்கனவே மாருதி சுசூகி நிறுவனம் மிகச் சிறப்பாக நெக்ஸா என்ற பெயரில் நடத்தி வருகின்றது அதற்கு இணையாகத்தான் இந்த முயற்சியை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் தொடங்கி இருப்பதாக தெரிகின்றது. எம்ஜி செலக்ட்…
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான பிரபலமான பஞ்ச் (Punch) துவக்க நிலை சந்தைக்கு ஏற்ற எஸ்யூவி ஆரம்ப விலை ரூபாய் 6.13 லட்சம் முதல் ரூபாய் 10.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. GNCAP-யின் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ள டாடா பஞ்ச் எஸ்யூவி ALFA (Agile Light Flexible Advanced) பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஞ்சின் விருப்பங்களில் எந்த மாற்றமும் இல்லாமல், தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற பஞ்சில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 3 சிலிண்டர் கொண்ட மாடல் அதிகபட்சமாக 86 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனில் 74PS பவர் வெளிப்படுத்துகின்றது. துவக்க நிலை பிரிவில் முதல் மாடலாக 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ…
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹூண்டாய் நிறுவனம் பிரத்தியேக அட்வென்ச்சர் எடிசன் மாடலை வெனியூ காரில் ரூ.10.15 லட்சம் முதல் ரூ.13.38 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்துள்ளது. 2024 Hyundai Venue Adventure Edition ரேஞ்சர் காக்கி நிறத்துடன் கருப்பு, வெள்ளை, கிரே என மூன்று ஒற்றை வண்ண நிறங்களுடன் கூடுதலாக டூயல் டோன் நிறங்களாக கருப்பு நிற மேற்குரையுடன் ரேஞ்சர் காக்கி, வெள்ளை மற்றும் கிரே என மொத்தமாக 7 நிறங்களுடன் S(O), SX , மற்றும் SX(O) என மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்ற அட்வென்ச்சர் மாடல் இரண்டு பெட்ரோல் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. 15,000 ரூபாய் கூடுதல் கட்டணத்தில் SX மற்றும் SX(O) டிரிம்களில் டூயல்-டோன் வண்ணங்களைத் தேர்வுசெய்யலாம். வெனியூ அட்வென்ச்சர் காரில் பல்வேறு இடங்களில் கருமை நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக புதிய முன்புற கிரில் மத்தியில் கருமை நிற லோகோ உடன் அலாய் வீல்…
பண்டிகை காலத்தை முன்னிட்டு ரெனால்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டு இருக்கின்ற புதிய நைட் அண்ட் டே எடிசன் மாடல் கிகர், ட்ரைபர், மற்றும் க்விட் என மூன்றிலும் மிக சிறப்பான வரவேற்பினை பெறும் வகையில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள இந்த மாடல் ஆனது முதலில் வருபவர்களுக்கு முதலில் வழங்கப்படும் மேலும் ஒட்டுமொத்தமாக 1600 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் ரெனால்ட் க்விட் நைட் அண்ட் டே மாடல் RXL (O) விலை ரூபாய் 15,000 வரை உயர்த்தப்பட்டும், கிகர் RXL வேரியண்டின் அடிப்படையில் ரூ.15,000 வரை விலை கூடுதலாகவும், ட்ரைபர் RXL மாடல் அடிப்படையில் ரூபாய் 20,000 வரை உயர்ந்துள்ளது. மூன்று மாடல்களும் வெள்ளை நிறத்திலான பாடிக்கொண்டு மேற்கூறையில் கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எனவே இரட்டை வண்ணக் கலவையில் அமைந்திருக்கின்றது.…
ஹோண்டா இந்தியா நிறுவனம் எலிவேட் காரில் புதிதாக பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு எலிவேட் ஏபெக்ஸ் எடிசனை விற்பனைக்கு ரூபாய் 12.86 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. விற்பனையில் உள்ள மற்ற மாடல்களை விட ரூபாய் 15,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கின்றது. எலிவேட் ஏபெக்ஸ் மாடலை பொருத்தவரை என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் முன்புற ஸ்பாய்லரில் கருப்பு நிறத்துடன் கூடிய சில்வர் அக்சென்ட்ஸ், பக்கவாட்டில், பின்புறத்தில் பம்பர் பகுதியிலும் கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் Apex Edition பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. இன்டீரியரில் ஐவரி மற்றும் கருப்பு நிறத்துடன் கூடிய உட்புறம், Apex பேட்ஜிங் பெற்ற இருக்கை கவர், சிறிய மெத்தை, ஆம்பியண்ட் விளக்குகள் ஆகியவற்றை பெற்றுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாடலில் 1.5-லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 4300 rpm-ல் 121hp பவர், 145Nm…
வரும் அக்டோபர் 4ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் 2024 ஆண்டிற்கான மாடல் சிறிய அளவிலான முன்புற தோற்றம் மற்றும் பல்வேறு டிசைன் மாற்றங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கும் மற்றபடி, எவ்விதமான கூடுதலான மெக்கானிக்கல் மாற்றங்கள் இடம் பெற வாய்ப்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளாக ஒற்றை மாடலை மட்டும் விற்பனை செய்து வந்த நிசான் இந்தியா நிறுவனம் தற்பொழுது எக்ஸ்ட்ரெயில் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது மேம்படுத்தப்பட்ட புதிய மேக்னைட் மாடல் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. என்ஜின் ஆப்ஷனில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை 1.0 லிட்டர் B4D NA பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கும் மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி அல்லது EZ-Shift கியர்பாக்ஸ் உள்ளது.…
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் வெளியிட்டுள்ள புதிய வின்ட்சர் இவி காரில் ஒரு சிறப்பு பேட்டரி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது எந்தவொரு இந்திய மாடலிலும் இது போன்ற ஒரு பேட்டரி வாடகை (BAAS – Battery As A Service)முறையானது பயணிகள் வாகனங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இந்த திட்டம் செயல்பட்டு வருகின்றது. Battery As A Service என்ற திட்டத்தின் நோக்கமே வாடிக்கையாளர்கள் முழுமையான கட்டணத்தை பேட்டரிக்கும் சேர்த்து செலுத்தாமல் அடிப்படையான காருக்கு மட்டும் கட்டணத்தை செலுத்தி காரினை வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகப்படியான கட்டணத்தை வாங்கும் பொழுது செலுத்த தேவையில்லை பயன்பாட்டிற்கு மட்டும் பேட்டரியை ஒவ்வொரு கிலோமீட்டருக்கு பயன்படுத்தும் பொழுது மட்டும் 3.50 காசுகள் செலவு செய்ய வேண்டியிருக்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. தோராயமாக வின்ட்சர் இவி (அக்டோபர் 2க்கு முன்பாக முழுமையான விலை சார்ந்த ஒப்பீடு வரும்) காருக்கான முழுமையான கட்டணம்…
இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி மாடல்ளில் ஒன்றான புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் போட்டியாளர்களான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், டாடா டியாகோ என இரண்டும் நேரடியாக எதிர்கொள்ளுகின்றது. இதுதவிர மாருதியின் வேகன்ஆர், ஃபிரான்க்ஸ் போன்ற மாடல்களும் உள்ளன. சிஎன்ஜி சிலிண்டர், பூட் ஸ்பேஸ் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனம் போல மாருதி இரட்டை சிலிண்டர் வழங்கவில்லை ஒற்றை சிலிண்டர் மட்டுமே வழங்கியுள்ளதால் பூட்ஸ்பேஸ் பெரிதாக இருக்காது. ஆனால் முதன்முறையாக டாடா தனது ட்வீன் சிலிண்டர் நுட்பத்தால் பூட்ஸ்பேஸ் அளவில் எந்த சமரசமும் செய்துக் கொள்ளவில்லை. அதை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் டூயல் சிலிண்டர் நுட்பத்தை கொண்டு வந்திருக்கின்றது. ஹூண்டாய் மற்றும் மாருதி என இரு நிறுவனமும் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வழங்கும் நிலையில் டாடா மோட்டார்ஸ் சிஎன்ஜி காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்குகின்றது. பூட்ஸ்பேஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் என இரண்டிலும் டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கின்றது.…