Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
351 கிமீ ரேஞ்சுடன் கிரேட் வால் ஆர்1 மின்சார் கார் வெளியானது - ஆட்டோ எக்ஸ்போ 2020

351 கிமீ ரேஞ்சுடன் கிரேட் வால் ஆர்1 மின்சார் கார் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

gwm r1

உலகின் மிக மலிவு விலை மின்சார கார் மாடலாக அறியப்படுகின்ற கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆர்1 எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்துள்ளது. இதுதவிர இந்நிறுவனம் ஹவல் எஸ்யூவி பிராண்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரா ஆர் 1 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் GWM R1 என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆர்1 எலக்ட்ரிக் காரில் 35 கிலோ வாட் மோட்டார் மற்றும் 34.7 லித்தியம் ஐயன் பேட்டரியை பெற்று அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன், ஒரு முறை சிங்கிள் சார்ஜ் செய்தால் 351 கிமீ தொலைவு பயணிக்கும் திறனை பெற்றிருக்கும்.

மிக வேகமாக சார்ஜிங் செய்யும் முறையான டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 80 சதவீதம் சார்ஜை பெற 40 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும்.  இந்த காருக்கு இந்நிறுவனம் மூன்று ஆண்டுகள் அல்லது 1.20 லட்சம் கிலோமீட்டர் மற்றும் எட்டு ஆண்டுகள் அல்லது 1.50 லட்சம் கிலோமீட்டருக்கு இலவச சர்வீஸ் வழங்குகின்றது.

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் ஜிடபிள்யூஎம் ஆர்1 எலக்ட்ரிக் காரின் விலை ரூ. 8 லட்சத்தில் விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகலாம். மேலதிக விபரங்கள், ஆட்டோ எக்ஸ்போ 2020 செய்திகள்

Exit mobile version