எம்ஜி மோட்டார் நிறுவனம் 14 மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய நிலையில், எர்டிகா உள்ளிட்ட எம்பிவி ரக மாடல்களுக்கு போட்டியாக 360எம் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற எர்டிகா, மராஸ்ஸோ உள்ளிட்ட எம்பிவி ரக மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ள 360எம் மிகவும் தாராளமான இடவசதி பெற்ற எம்.பி.வி மாடலாக விளங்குகின்றது. தோற்றத்தைப் பொறுத்தவரை, முகப்பில் வழக்கமான தேன்கூடு எம்ஜி கிரில் கொண்டுள்ளது. எம்ஜி 360 எம் மாருதி சுசுகி எர்டிகாவை விட சற்றே கூடுதல் நீளம, அகலத்தைப் பெற்று 7 இருக்கைகளில் உள்ள கேபினை கொண்டிருக்கலாம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹெக்டர் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டது. 143hp குதிரைத்திறன் மற்றும் 250Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. டர்போ பெட்ரோல் என்ஜினில் மட்டும் 48V மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் வழங்க உள்ளது. மைல்ட் ஹைபிரிட் வசதி மூலம் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.