ஆட்டோ எக்ஸ்போ 2023: கியா KA4 (கார்னிவல்) அறிமுகம்

ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் பல்வேறு புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் KA4 (கார்னிவல்) என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட மாடலை பல்வேறு நவீன வசதிகளுடன் அறிமுகம் செய்துள்ளது.

புதிய கேஏ4 மாடல் முந்தைய கார்னிவலை விட 40 மிமீ நீளம் அதிகமாக பெற்று 5155 மிமீ நீளத்தைப் பெற்றுள்ளது. அதே சமயம் வீல்பேஸ் 30 மிமீ அதிகரிக்கப்பட்டு 3090 மிமீ ஆக உள்ளது.

Kia KA4 (Carnival)

KA4 எம்பிவி மாடல் குரோம் டைகர் நோஸ் கிரில் மற்றும் நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் முரட்டுத்தனமான தோற்றத்தை பெறுகிறது. ஸ்லைடிங் பின்புற கதவுகள் மற்றும் புதிய அலாய் வீல் கொண்ட வேன் மாதிரியான வடிவமைப்பை தொடர்ந்து கொண்டுள்ளது. பின்புறத்தில், நீங்கள் நேர்த்தியான இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்களும், ரூஃப் ரெயில்களையும் வழங்குகிறது.

KA4 காரில் 12.3-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இரண்டாக பிரிக்கப்பட்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டரை சென்டர் ஸ்டேஜில் கொண்டுள்ளது. கியா புதிய காரில் எலக்ட்ரிக் மூலம் இயங்கும் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பிரீமியம் ஒலி அமைப்பு போன்ற அம்சங்கள் உள்ளன. இது ADAS தொழில்நுட்பம் மற்றும் அதன் பாதுகாப்பு கருவியின் ஒரு பகுதியாக பல ஏர்பேக்குகளையும் பெறுகிறது.

உலகளவில், KA4 கார்னிவல் 7, 9 மற்றும் 11 இருக்கை உள்ளமைவுகளில் வழங்கப்படுகிறது. நீண்ட வீல்பேஸ் மற்றும் பின்புற ஓவர்ஹாங்கின் விளைவாக பின்புறத்தில் அதிக இடவசதி கிடைக்கும். தற்போதுள்ள இந்தியா மாடல் 7, 8 மற்றும் 9 இருக்கை விருப்பங்களுடன் மட்டுமே வருகிறது.

KA4 என்ஜின்

KA4 காரில் தொடர்ந்து 3.5 லிட்டர் V6 டர்போ GDI என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 286 bhp மற்றும் 355 Nm டார்க்கை வெளிப்படுத்தும். அடுத்து 3.5 லிட்டர் V6 மல்டிபோர்ட்-இன்ஜெக்ஷன் (MPI) இன்ஜின் 268 bhp மற்றும் 332 Nm டார்க்கை வெளிப்படுத்தும். டீசல் இன்ஜின 2.2 லிட்டர், நான்கு சிலிண்டர் 197 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மூன்று பவர்டிரெய்ன்களும் எட்டு வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன

ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் கியா நிறுவனம்  EV9 கான்செப்ட்டையும் காட்சிப்படுத்தியுள்ளது. கூடுதலாக, அவசர சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட கேரன்ஸ் காரையும் கியா காட்சிப்படுத்தியது.

This post was last modified on January 12, 2023 1:22 AM

Share
Tags: Kia Carnival