ஜாகுவார் XE சொகுசு கார் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் ஜாகுவார் XE சொகுசு கார் ரூ.39.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சொகுசு தரத்தில் நவீன வசதிகளுடன் விளங்கும் ஜாகுவார் XE கார் இந்தியாவிலே ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

ஜாகுவார் எஃப் டைப் மாடலின் டிசைன் தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ்இ காரின் முகப்பில் ஜாகுவாரின் பாரம்பரிய கிரில் அமைப்புடன் கூடிய மிக சிறப்பான ஸ்டைலிங் தோற்றத்தினை கொண்டுள்ள புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் J வடிவ பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது.

அலுமினிய பாடி மிக சிறப்பான வலுவுடன் கூடிய ஸ்டைலிங் தோற்றத்தில் விளங்கும் பக்கவாட்டில் சிறப்பான தோற்றத்தினை வழங்கும் அலாய் வீல் பின்புறத்தில் நேர்த்தியான கிடைமட்ட எல்இடி டெயில்விளக்குகளை பெற்றுள்ளது. 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

உட்புறத்தில் நேர்த்தியான ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள டேஸ்போர்டில் 8 இஞ்ச் தொடுதிரை இன்டச் கன்ட்ரோல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. F-டைப் காரின் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் உந்துதலில் அமைந்துள்ள ட்வின் பாட் கிளஸ்ட்டர் ,  கிளோஸ் பிளாக் மற்றும் அலுமினிய ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள சொகுசு தன்மைமிக்க இன்டிரியரை பெற்றுள்ளது.

இருவிதமான ஆற்றலை வழங்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

197 hp ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் பூயூர் வேரியண்ட்

240 hp ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் போர்ட்ஃபோலியோ வேரியண்ட்

இரண்டிலும் 8 வேக எலக்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் 240 hp ஆற்றலை வழங்கும் மாடல் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 6.8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

ஜாகுவார் XE கார் விலை விபரம் ;

  • Jaguar XE 2.0L Petrol Pure (197 hp) : ரூ. 39.90 லட்சம்
  • Jaguar XE 2.0L Petrol Portfolio (240 hp) : ரூ 46.50 லட்சம்

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

[envira-gallery id="7121"]

Share
Tags: Jaguar