வருகின்ற மார்ச் 3ந் தேதி தொடங்க உள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் பினின்ஃபரினா கான்செப்ட் கார் டீஸர் படத்தினை வெளியிட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த பினின்ஃபரினா டிசைன் நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்தியது.
உலகின் மிக பிரபலமானல் ஃபெராரி , மஸாராட்டி என பல கார் நிறுவனங்கள் தவிர ரயில் , சொகுசு கப்பல்கள் போன்றவற்றை வடிவமைப்பதில் மிக பிரபலமான பாரம்பரியத்தினை கொண்டுள்ள பினின்ஃபரினா நிறுவனத்தின் 76 % பங்குகளை மஹிந்திரா வாங்கியது.
புதிய ஸ்போர்ட்டிவ் ரக கான்செப்ட் கார் மாடலாக இது இருக்கலாம். மற்றபடி எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. புதிய தொடக்கத்தை இதன் மூலம் பின்னின்ஃபாரினா டிசைன் நிறுவனம் தொடங்கும் என தெரிகின்றது.
மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய புதிய மாடல்களுக்கு பின்னின்ஃபாரினா நிறுவனத்தின் தாத்பரியங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளதால் மஹிந்திரா எஸ்யூவி கார்கள் புதிய வடிவம் பெறும்.