யமஹா MT-09 பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016

1 Min Read

ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் நடிகர் ஜான் அபிரகாம் யமஹா MT-09 ஸ்போர்ட்டிவ் பைக் ரூ.10.20 லட்சம் விலையில் சற்று முன் விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.  யமஹா MT-09 பைக் சிபியூ வகையில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

yamaha-mt-09-launched

இடைநிலை ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் ரக எம்டி 09 பைக்கில் 115hp ஆற்றல் மற்றும் 87.5Nm டார்க் வழங்கும் 847cc 3 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. எம்டி-09 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 19 கிமீ ஆகும்.

முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள யமஹா MT-09 பைக்கின் முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் 298மிமீ இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 245மிமீ சிங்கிள டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.

yamaha-mt-09-bike

யமஹா MT-09 பைக் விலை ரூ.10.20 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

[envira-gallery id="7149"]

 

 

TAGGED:
Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.