ரெனோ க்விட் கிளைம்பர் , ரேஸர் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

ரெனோ க்விட் வெற்றியை தொடர்ந்து ரெனோ க்விட் கிளைம்பர் மற்றும் ரெனோ க்விட் ரேஸர் என இரு கான்செப்ட் மாடல்களை ரெனோ அறிமுகம் செய்துள்ளது. ரெனோ க்விட் கிளைம்பர் ஆஃப் ரோடுக்காக மற்றும் ரேஸர் பெர்ஃபாமென்ஸ் மாடலாக வந்துள்ளது.

எஸ்யூவி காரை போலோ காட்சியளிக்கும் க்விட் கிளைம்பர் சிறப்பான கிரவுண்ட் கிளியரண்ஸ் மற்றும் அதிகப்பட்ச ஸ்டைலிங் அம்சங்களுடன் மினி எஸ்யூவி போல காட்சியளிக்கின்றது. இந்த மாடலில் சிறப்பான மினி எஸ்யூவியாக விளங்கும். க்விட் ரேஸர் மாடல் குறைவான கிரவுண்ட் கிளியரண்ஸ் மற்றும் ரேசிங் கார்களுக்கு உண்டான திறன்களை பெற்ற மாடலாக விளங்குகின்றது.

மேலும் இந்த இரு கான்செப்ட்களில் க்விட் கிளைம்பர் மாடல் உற்பத்தி நிலையில் காட்சியளிப்பனதால் இது விரைவில் விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது. ரேஸர் மாடல் குறித்து உற்பத்திக்கு செல்லுமா என உறுதியான தகவலும் இல்லை.

 

[envira-gallery id="7153"]

 

Exit mobile version