Automobile Tamilan

சுசூகி ஆக்சஸ் 125 Vs ஹீரோ டெஸ்டினி 125 – எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்..!

2025 suzuki access 125 vs hero destini 125

ஹீரோவின் புதிய டெஸ்டினி 125 மற்றும் சுசூகியின் 2025 ஆக்சஸ் 125 என இரு மாடல்களும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் பல்வேறு வசதிகளுடன் மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எஞ்சின் உட்பட மற்ற அம்சங்களை பார்க்கும் முன்

ஹீரோ டெஸ்டினி 125 மிக நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் மிக அழகான தோற்றத்தை வெளிப்படுத்தும் நிறங்கள், அதிக மைலேஜ் தரும் எஞ்சின் என பலவற்றை பெற்றுள்ளது.

 

ஆக்சஸ் 125 பற்றி சொல்லவே தேவையில்லை நிருபிக்கப்பட்ட சுசூகியின் எஞ்சின் தரம், அதிகப்படியான வாடிக்கையாளர்களிடம் பெற்ற நன்மதிப்பு, வசதிகள் மற்றும் 125சிசி சந்தையின் கிங் ஸ்கூட்டராக உள்ளது.

125cc ஸ்கூட்டர் சந்தையில் உள்ள மற்ற போட்டியாளர்களான கூடுதல் பூட்ஸ்பேஸ் பெற்ற ஜூபிடர் 125, அதிக மைலேஜ் தரும் யமஹா ஃபேசினோ 125, ஹோண்டாவின் தரத்தை சொல்லும் ஆக்டிவா 125 போன்றவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்ற ஆக்செஸ் 125 மற்றும் டெஸ்டினி 125 போன்ற 125சிசி மாடல்கள் குடும்பங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான ஸ்கூட்டர் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

ஹீரோ டெஸ்டினி 125 Vs ஆக்சஸ் 125 எஞ்சின் ஒப்பீடு

125cc ஸ்கூட்டர் பிரிவில் அதிகபட்ச 9hp பவரை வெளிப்படுத்துகின்ற டெஸ்டினி 125 மைலேஜ் லிட்டருக்கு 59 கிமீ வரை கிடைக்கும் என சான்றிதழ் பெறப்பட்டு ஓட்டுதலில் லிட்டருக்கு 48-50 கிமீ வரை கிடைக்கின்று. போட்டியாளரான ஆக்செஸில் உள்ள எஞ்சின் 8.31hp பவரை வெளிப்படுத்தும் நிலையில் ஓட்டுதலில் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக லிட்டருக்கு 47-50 கிமீ வரை வழங்குகின்றது.

Hero Destini 125 Suzuki Access 125
என்ஜின் 124.6cc 124cc
பவர் 9 hp @ 7,000rpm 8.31 hp @ 6,500rpm
டார்க் 10.4Nm @ 5,500rpm 10.2Nm @ 5,000rpm
கியர்பாக்ஸ் CVT CVT
மைலேஜ் 48kmpl 47 kmpl

சுசுகி ஆக்சஸ் 125 Vs டெஸ்டினி 125 மெக்கானிக்கல் ஒப்பீடு

இரு மாடல்களும் சஸ்பென்ஷன் உட்பட பிரேக்கிங் அமைப்பில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் என பலவற்றில் ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும், டெஸ்டினி 125 மாடல் கூடுதல் வீல்பேஸ் உடன் இருபக்க டயரிலும் 12 அங்குல வீல் பெற்றதாக அமைந்திருப்பது முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.

அடுத்தப்படியாக, மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய பூட்ஸ்பேசில் ஆக்செஸ் 125 சற்று கூடுதலாக 24.5 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ள நிலையில் டெஸ்டினியை விட சிறப்பானதாக அமைந்திருக்கின்றது.

Hero Destini 125 Suzuki Access 125
முன்பக்க சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்புறம் சஸ்பென்ஷன் ஒற்றை காயில் ஸ்பிரிங் ஸ்விங்ஆர்ம் காயில்
டயர் முன்புறம் 90/90 – 12 90/90 – 12
டயர் பின்புறம் 100/80 – 12 90/100 – 10
பிரேக் முன்புறம் டிஸ்க்/டிரம் டிஸ்க்/டிரம்
பிரேக் பின்புறம் டிரம் டிரம்
வீல்பேஸ் 1302mm 1260mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 162mm 160mm
எடை 115 KG 106 KG
எரிபொருள் டேங்க் கொள்ளளவு 5.3 லிட்டர் 5.3 லிட்டர்
இருக்கை உயரம் 770mm 773mm

மற்ற வசதிகள்

இரு மாடல்களும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்று டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டுள்ளன. ஆனால் பேஸ் வேரியண்ட் டெஸ்டினில் அனலாக் முறையிலான கிளஸ்ட்டரை கொண்டிருக்கின்றது. வாய்ஸ் அசிஸ்ட், வாட்ஸ் ஆப் அலர்ட் உள்ளிட்ட சில கூடுதல் வசதிகளை ஆக்செஸ் 125 பெறுகின்றது.

நிறங்களில் வேரியண்ட் வாரியான மாறுபாடுகளை பெற்றுள்ள டெஸ்டினி 125 VX, ZX & ZX+ என மூன்றி விதமாக பெற்று 5 விதமான நிறங்களை பெற்றுள்ளது. ரைட் கனெக்ட் எடிசன் ஸ்பெஷல் எடிசன் மற்றும் ஸ்டாண்டர்ட் போன்றவற்றை ஆக்செஸ் 125 கொண்டுள்ளது.

2025 Suzuki Access 125 Vs Hero Destini 125 – Price

ஹீரோ நிறுவனம் தொடர்ந்து விலை குறைவாக துவங்குகின்ற வகையில் டெஸ்டினி 125 மாடலின் விலை ரூ.84,135 முதல் ரூ.93,985 வரை நிர்ணயம் செய்து தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையை ரூ.1 லட்சம் முதல் ரூ.1.14 லட்சம் வரை கொண்டுள்ளது.

சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் சற்று கூடுதலாக ரூ.87,134 முதல் ரூ.98,735 வரை நிர்ணயம் செய்து ஆன்ரோடு விலையை ரூ.1.06 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் வரை கொண்டுள்ளது.

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Suzuki Access 125 ரூ.87,134 – ரூ. 98,735 ரூ.1.06 லட்சம் –  1.20 லட்சம்
Hero Destini 125 ரூ.84,135 – ரூ. 93,985 ரூ. 1 லட்சம் – ரூ. 1.14 லட்சம்

 

Exit mobile version