இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் ரூ.30.6 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பிரிங்ஃபீல்டு பைக்கில் 1811சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் மாசசூசெட்ஸ் என்ற இடத்தின் பெயரை கொண்டுள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் டூரிங் ரக மோட்டார்சைக்கிள் ஆகும்.
138.9 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும் 1811சிசி வி- ட்வீன் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
2583மிமீ நீளம் , 990மிமீ அகலம் மற்றும் 1442மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் இருசக்கரங்களுக்கு இடையிலான நீளம் 1701மிமீ ஆகும். இதன் மொத்த எடை 338 கிலோ இதில் 20.8 லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஏர் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் பெற்றுள்ளது. முன்புற டயரில் 300மிமீ விட்டம் கொண்ட 4 பிஸ்டன் கேலிபருடன் இயங்கும் இரட்டை டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. பின்புற டயரில் 300மிமீ விட்டம் கொண்ட 2 பிஸ்டன் கேலிபருடன் இயங்கும் டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. ஏபிஎஸ் அமைப்பு உள்ளது.
மேலும் ரீமோட் மூலம் திறக்கும் வகையிலான லாக்கிங் ஹார்க் பேக் , அட்ஜெஸ்டபிள் பயணிகள் ஃபுளோர்போர்ட் , லெதர் இருக்கை , டயர் அழுத்தமானி மற்றும் க்ரூஸ் கட்டுப்பாடு போன்றவற்றை ஸ்பிரிங்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.
ஸ்பிரிங்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இந்தியன் மோட்டார்சைக்கிள் டீலர்கள் சென்னை , பெங்களூரு , குர்கான் , மும்பை , அகமதாபாத் மற்றும் ஹைதிராபாத் போன்ற இடங்களில் அமைந்துள்ளது.