இத்தாலியின் பிரசத்திபெற்ற சூப்பர் பைக் தயாரிப்பாரான எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் இந்தியாவின் கைனெடிக் குழுமத்துடன் இணைந்து இந்திய சந்தையில் 5 எம்வி அகுஸ்டா சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

MV-Agusta-f4

F4 ,  F4 RR ,  F3 ,  புரூடெல் 1090 மற்றும் 1090 RR என 4 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேஸ் மாடலான F4 RC இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரவாய்ப்பு உள்ளது. முதற்கட்டமாக   F3, F4 மற்றும் Brutale 1090 ஆகிய பைக்குகள் செமி நாக்டு முறையில் அகதமாபாத்தில் உள்ள ஆலையில் ஒருங்கினைக்கப்பட உள்ளது. மற்ற பைக்குகள் முழுவதும் கட்டமைக்கப்பட்ட மாடல்களாக இறக்குமதி செய்யப்பட உள்ளது.

கைனெடிக் குழுமத்தின் வாயிலாக மோட்டார் ராயல் என்ற பெயரில் புனே , சென்னை , டெல்லி , மும்பை , அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த வருடத்தின் இறுதிக்குள் விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக நாளை எம்வி அகஸ்டா சூப்பர் பைக் ஷோரூம் புனேவில் திறக்கப்படுகின்றது.

எம்வி அகுஸ்ட்டா பைக் விலை பட்டியல்

F3 – ரூ. 16.78 லட்சம்
F4 – ரூ. 26.87 லட்சம்
F4 RR – ரூ. 35.71 லட்சம்
F4 RC – ரூ. 50.01 லட்சம்
புரூடெல் 1090 – ரூ. 20.10 லட்சம்
புரூடெல் 1090 RR – ரூ. 24.78 லட்சம்

{ அனைத்தும் புனே எக்ஸ்ஷோரூம் விலை }

MV-Agusta-f3-800

MV-Agusta-Brutale-1090